என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
தமிழ்நாட்டிற்கு 'அம்ரித் பாரத்' ரெயில் எப்போது?
- தமிழ்நாட்டிற்கு வந்தே பாரத் ரெயில்களோ, அம்ரித் பாரத் ரெயில்களோ தேவையின் அடிப்படையிலேயே இயக்கப்படும்.
- சென்னை ரெயில்வே கோட்டத்தில் கூடுதல் ஊழியர்கள் தண்ணீரை அகற்றும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
சென்னை:
சென்னை சென்டிரலில் உள்ள தெற்கு ரெயில்வே தலைமை அலுவலகத்தில் நேற்று சென்னை கோட்ட மேலாளர் விஸ்வநாத் ஈர்யா நிருபர்களிடம் கூறியதாவது:-
பிரதமர் நரேந்திர மோடி அயோத்தியில் 30-ந்தேதி (இன்று) 6 வந்தே பாரத் ரெயில்களையும், 2 'அம்ரித் பாரத்' ரெயில்களையும் கொடியசைத்து தொடங்கி வைக்க உள்ளார். இதில், அம்ரித் பாரத் ரெயில் குளிர்சாத பெட்டி இல்லாத சாதாரண வகை ரெயில்களாகவே இயக்கப்படும். இதில் மொத்தம் 22 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பெட்டியிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு பெட்டியில் மின்னணு தகவல் பலகைகள் வைக்கப்பட்டுள்ளது. ஒரு ரெயிலில் 1,600 பயணிகள் பயணிக்க முடியும். 130 கிலோ மீட்டர் வேகத்தில் ரெயில் இயக்கப்படும்.
இதேபோல, தமிழ்நாட்டிற்கு வந்தே பாரத் ரெயில்களோ, அம்ரித் பாரத் ரெயில்களோ தேவையின் அடிப்படையிலேயே இயக்கப்படும். இப்போதைக்கு அந்த தேவை எழவில்லை. மிக்ஜம் புயல் வந்த போது வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பின்படி தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. சென்னை ரெயில்வே கோட்டத்தில் கூடுதல் ஊழியர்கள் தண்ணீரை அகற்றும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். சென்னை கடற்கரை - எழும்பூர் இடையிலான 4-வது வழித்தட பணிகள் சீரான வேகத்தில் நடைபெற்று வருகிறது. வரும் மார்ச் மாதத்திற்குள் அனைத்து பணிகளும் முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.