என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
பெருங்களத்தூர் ரெயில் நிலையத்தில் பெண்ணை கத்தியால் குத்திவிட்டு தப்பிய நபர் கைது
- படுகாயம் அடைந்த தமிழ்செல்வியை மீட்டு தாம்பரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை.
- தாம்பரம் ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
செங்கல்பட்டு சுந்தரமூர்த்தி வினாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் மூர்த்தி. இவரது பேரனுக்கு மொட்டை அடிக்கும் நிகழ்ச்சிக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக சுந்தரமூர்த்தி நேற்று இரவு வெளியில் சென்றார்.
பின்னர் பொருட்களை வாங்கிக்கொண்டு மூர்த்தி, அவரது மனைவி தமிழ்செல்வி, மற்றும் மகள் ஆகியோர் பஸ்சில் வீடு திரும்பினர். போக்குவரத்து நெரிசல் காரணமாக பெருங்களத்தூர் ரெயில் நிலையம் அருகே இறங்கி 3 பேரும் ரெயிலில் செல்ல முடிவு செய்தனர்.
இதற்காக பெருங்களத்தூர் ரெயில் நிலையத்துக்கு சென்றனர். பின்னர் தமிழ் செல்வியை 1- வது நடைமேடையில் நிற்குமாறு கூறிவிட்டு மூர்த்தியும் அவரது மகளும் டிக்கெட் எடுப்பதற்காக சென்றனர். அப்போது தமிழ்செல்வி நின்று கொண்டிருந்த 1- வது நடை மேடையில் மர்ம நபர் ஒருவர் சுற்றிக்கொண்டிருந்தார்.
அவர் திடீரென தமிழ்செல்வியின் மீது தாக்குதலில் ஈடுபட்டார். தான் கையில் வைத்திருந்த கத்தி போன்ற கூர்மையான ஆயுதத்தால் குத்தினார். இதில் தமிழ்செல்வியின் வலது கையில் கத்தி குத்து விழுந்தது. இதில் காயம் அடைந்த அவர் வலியால் அலறி துடித்தார். உடனடியாக அங்கிருந்தவர்கள் ஓடி வந்தனர். அதற்குள் மர்ம நபர் அங்கிருந்து ஓடி விட்டார்.
பின்னர் படுகாயம் அடைந்த தமிழ்செல்வியை மீட்டு தாம்பரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இது தொடர்பாக தாம்பரம் ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், பெருங்களத்தூர் ரெயில் நிலையத்தில் தமிழ்செல்வியை கத்தியால் குத்திவிட்டு தப்பிய நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சுப்பிரமணியன் என்பவரை தாம்பரம் ரெயில்வே போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். கத்திகுத்து தொடர்பாக போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.