search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மதுரையில் வீட்டில் புகையிலை பொருட்கள் பதுக்கி விற்ற வாலிபர் கைது
    X

    பறிமுதல் செய்யப்பட்ட குட்கா-புகையிலை பாக்கெட்டுகளுடன் கைதான விக்னேசையும், அவரை பிடித்த போலீசாரையும் படத்தில் காணலாம்.

    மதுரையில் வீட்டில் புகையிலை பொருட்கள் பதுக்கி விற்ற வாலிபர் கைது

    • புகையிலை மற்றும் குட்கா புழக்கத்தை கட்டுப்படுத்த மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவின் பேரில் தெற்குவாசல் உதவி கமிஷனர் சண்முகம் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.
    • ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள 35 கிலோ புகையிலை மற்றும் குட்கா பொருட்களை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

    மதுரை:

    மதுரை மாநகரில் புகையிலை மற்றும் குட்கா புழக்கத்தை கட்டுப்படுத்த மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவின் பேரில் தெற்குவாசல் உதவி கமிஷனர் சண்முகம் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் பல்வேறு பகுதிகளில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் மதுரை தெற்குவாசல் தெற்கு வெளிவீதி பாண்டிய விநாயகர் தெருவில் உள்ள ஒரு வீட்டில் புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக தகவல் கிடைத்தது. அதன் பேரில் தனிப்படை போலீசார் அந்த வீட்டை சுற்றி வளைத்தனர்.

    தொடர்ந்து போலீசார் அந்த வீட்டில் சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள 35 கிலோ புகையிலை மற்றும் குட்கா பொருட்களை பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து அந்த புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    மேலும் அந்த வீட்டில் இருந்த விக்னேஷ் (வயது 26) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவர் மீது ஏற்கனவே கீரைத்துறை போலீஸ் நிலையத்தில் புகையிலை பொருட்கள் விற்றதாக வழக்குகள் நிலுவையில் உள்ளது.

    வீட்டில் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்றால் போலீசாரால் கண்டுபிடிக்க முடியாது என்று நினைத்து தெற்குவாசலில் வீட்டை வாடகை எடுத்து அதை குடோனாக மாற்றியுள்ளார்.வட மாநிலங்களில் இருந்து புகையிலை மற்றும் குட்கா உள்ளிட்ட பொருட்களை வாங்கி, வீட்டுக்குள் பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்துள்ளார்.

    இந்த சம்பவத்தில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது? என்று கைதான விக்னேசிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×