என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
ஜாபர் சாதிக்கின் நீதிமன்ற காவல் ஆக.23ம் தேதி வரை நீட்டிப்பு
- காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத்துறை தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
- சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவிட்டுள்ளார்.
சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் ஈடுபட்டதாக கூறி டெல்லி திகார் சிறையில் இருந்த ஜாபர் சாதிக்கை அமலாக்கத்துறை கடந்த மாதம் கைது செய்தது.
பின்னர், சிறை மாற்று வாரண்ட் வழங்கப்பட்ட நிலையில், அவரை வரும் ஜூலை 29ஆம் தேதி வரை
நீதிமன்றக் காவலில் புழல் சிறையில் அடைக்க சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் கடந்த 15ஆம் தேதி உத்தரவிட்டது.
இதற்கிடையே ஜாபர் சாதிக்கை 15 நாட்கள் தங்களது காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத்துறை தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவை 16ஆம் தேதி விசாரித்த நீதிபதி அல்லி ஜாபர் சாதிக்கை 3 நாட்கள் மட்டும் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டார்.
இந்நிலையில், சட்ட விரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் ஜாபர் சாதிக்கின் நீதிமன்ற காவல் ஆகஸ்டு 23ம் தேதி வரை நீட்டித்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவிட்டுள்ளார்.