search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    • தங்கள் பகுதியில் உள்ள கழகத் தன்னார்வலர்களை எந்நேரமும் தொடர்பு கொள்ளலாம்.
    • இந்த செயலற்ற விடியா திமுக அரசைப் போல் அன்றி மக்கள் மீது அக்கறையோடு என்றைக்கும் அ.தி.மு.க. உழைக்கும்!

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    மழை வெள்ளத்தால் தலைநகர் சென்னை தத்தளித்ததையும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த விடியா திமுக அரசு மக்களை கைவிட்ட அவலத்தையும் சென்ற ஆண்டே பார்த்தோம். எனவே தான், உதவ அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில் #RapidReponseTeam அமைத்து, #களத்தில்_அஇஅதிமுக பாதிக்கப்பட்ட மக்களுடன் தோளோடு தோள்நின்றது.

    தற்போது தலைநகர் சென்னையில் கனமழை பெய்துவரும் நிலையில், எனது அறிவுறுத்தலின்படி, அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில் மீண்டும் #RapidResponseTeam அமைக்கப்பட்டுள்ளது.

    சென்னைவாழ் பொதுமக்கள் இந்த கடுமையான தருணத்தில் தங்களுக்கு தேவையான உதவிகளைப் பெற தங்கள் பகுதியில் உள்ள கழகத் தன்னார்வலர்களை எந்நேரமும் தொடர்பு கொள்ளலாம்.

    இந்த செயலற்ற விடியா திமுக அரசைப் போல் அன்றி மக்கள் மீது அக்கறையோடு என்றைக்கும் அ.தி.மு.க. உழைக்கும்!

    இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

    • பேசின்பிரிட்ஜ், வியாசர்பாடி இடையே தண்டவாளத்தில் தேங்கியிருந்த வெள்ள நீர் முழுமையாக அகற்றப்பட்டது.
    • தண்டவாளங்களில் தண்ணீர் வடிந்ததால் வழக்கம்போல் சென்ட்ரலில் இருந்தே ரெயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் நேற்று முன்தினம் முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. சென்னையிலும் பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முதலே இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.

    சென்னையில் காற்றுடன் தொடர்ச்சியாக மழை பெய்து வந்ததால் சில பகுதிகளில் சாலையின் அருகில் உள்ள மரங்கள் சரிந்து விழுந்தது. இதனை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்களும், தீயணைப்பு வீரர்களும் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    தொடர்ந்து பெய்த கனமழையால் எழும்பூர், தாம்பரம், பேசின்பிரிட்ஜ் மற்றும் வியாசர்பாடி உள்ளிட்ட சில ரெயில் நிலையங்களில் தண்டவாளங்களில் மழைநீர் தேங்கியது. மழைநீரை மோட்டார் பம்புகள் மூலம் ரெயில்வே ஊழியர்கள் அகற்றினர்.

    இந்நிலையில் பேசின்பிரிட்ஜ் மற்றும் வியாசர்பாடி இடையே தண்டவாளத்தில் தேங்கியிருந்த வெள்ள நீர் முழுமையாக அகற்றப்பட்டது.

    சென்ட்ரலில் இருந்து இயக்கப்படும் ரெயில்கள் மாற்று ரெயில் நிலையங்களில் இருந்து இயக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

    தண்டவாளங்களில் தேங்கியிருந்த மழைநீர் வடிந்ததால் சென்னையில் ரெயில் இயக்கம் சீரானது. வழக்கம்போல் சென்ட்ரலில் இருந்தே ரெயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    • மழை குறைந்ததால் வடசென்னையின் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் வடிந்துள்ளது.
    • சில பகுதிகளில் தண்ணீர் வடியவில்லை.

    தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, நேற்று தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இதனால் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு அதிகனமழைக்கான ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டது.

    இதனால் நேற்று முன்தினம் முதல் நேற்று மாலை வரை கனமழை பெய்தது. இதனால் சாலைகள் மற்றும் சுரங்கப்பாதைகளில் தண்ணீர் தேங்கியது.

    இதனிடையே நேற்று இரவு முதல் மழை குறைந்ததால் வடசென்னையின் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் வடிந்துள்ளது.

    ஸ்டீபன்சன் சாலை, புளியந்தோப்பு நெடுஞ்சாலை உள்ளிட்ட பகுதிகளில் மட்டும் தண்ணீர் வடியவில்லை.

    இன்று காலை வரை CB சாலை சுரங்கப்பாதை, கணேசபுரம், சுந்தரம் பாயிண்ட், ரங்கராஜபுரம் சுரங்கப்பாதை, MRTS சுரங்கப்பாதைகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால் மூடப்பட்டுள்ளது. 

    • காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆந்திரா நோக்கி நகர்வதால் சென்னைக்கு ஆபத்து விலகியது.
    • இன்று மழை பெய்யும். ஆனால் அதீத கனமழை இருக்காது.

    தென்மேற்கு வங்கக்கடலில் உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு தென்கிழக்கே 440 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 6 மணி நேரத்தில் 10 கி.மீ. வேகத்தில் வடமேற்கு நோக்கி நகர்ந்து வருகிறது.

    புதுச்சேரிக்கு கிழக்கு தென்கிழக்கே 460 கி.மீ. தொலைவிலும், ஆந்திர மாநிலத்தின் நெல்லூருக்கு கிழக்கு தென்கிழக்கே 530 கி.மீ. தொலைவிலும் உள்ளது.

    வடக்கு தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திரா கடற்கரையை, சென்னைக்கு அருகாமையில் நாளை கரையை கடக்கும்.

    காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆந்திரா நோக்கி நகர்வதால் சென்னைக்கு ஆபத்து விலகியது.

    இந்நிலையில் தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் கூறியிருப்பதாவது:

    சென்னையில் நேற்று பெய்த மிக கனமழை இன்று இருக்காது. மேகக்கூட்டங்கள் வடக்கு நோக்கி நகர்ந்ததால், மழை குறைந்தது.

    இன்று மழை பெய்யும். ஆனால் அதீத கனமழை இருக்காது. சென்னையில் மழை விட்டு விட்டு தொடரும். மிக கனமழை இருக்காது.

    நாளை, நாளை மறுநாளும் மழை தொடரும். ஆனால் அதீத மழை இருக்காது என்று தெரிவித்துள்ளார்.

    • தமிழகத்தில் காலை 10 மணி வரை 10 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
    • பொன்னேரி, தாமரைப்பாக்கத்தில் தலா 16 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.

    சென்னை:

    வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி 10 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது. சென்னைக்கு தென்கிழக்கில் 440 கி.மீ. தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது.

    தமிழகத்தில் காலை 10 மணி வரை 10 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

    சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை மற்றும் வேலூர் மாவட்டங்களிலும் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், தேனி ஆகிய மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

    திருவள்ளூரில் கடந்த 24 மணி நேரத்தில் சோழவரத்தில் 30 செ.மீ., செங்குன்றம் 28 செ.மீ., பொன்னேரி, தாமரைப்பாக்கத்தில் தலா 16 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.

    • காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 6 மணி நேரத்தில் 10 கி.மீ. வேகத்தில் வடமேற்கு நோக்கி நகர்ந்து வருகிறது.
    • சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கத்திவாக்கத்தில் 23 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.

    இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    தென்மேற்கு வங்கக்கடலில் உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு தென்கிழக்கே 440 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ளது.

    காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 6 மணி நேரத்தில் 10 கி.மீ. வேகத்தில் வடமேற்கு நோக்கி நகர்ந்து வருகிறது.

    புதுச்சேரிக்கு கிழக்கு தென்கிழக்கே 460 கி.மீ. தொலைவிலும், ஆந்திர மாநிலத்தின் நெல்லூருக்கு கிழக்கு தென்கிழக்கே 530 கி.மீ. தொலைவிலும் உள்ளது.

    வடக்கு தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திரா கடற்கரையை, சென்னைக்கு அருகாமையில் நாளை கரையை கடக்கும்.

    சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கத்திவாக்கத்தில் 23 செ.மீ. மழை பதிவாகி உள்ளது என்று தெரிவித்துள்ளது.

    • தென்மேற்கு பருவமழை இந்திய பகுதிகளில் முற்றிலுமாக விலகி, வடகிழக்கு பருவமழை தொடங்கிவிட்டதாகவும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
    • தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

    சென்னை:

    வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி மற்றும் வட மாவட்டங்களையொட்டிய பகுதிகளில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை உள்ளிட்ட இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

    இதற்கிடையே தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, நேற்று தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது.

    இது தமிழ்நாட்டின் வட மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் அதனையொட்டிய தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளை நோக்கி நகரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இதுமட்டுமல்லாமல், தெற்கு ஆந்திர கடலோர பகுதிகள் மற்றும் அதனையொட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இந்த காரணங்களால் தமிழ்நாடு, புதுச்சேரியில் இன்றும் (புதன்கிழமை), நாளையும் (வியாழக்கிழமை) மழைக்கான வாய்ப்பு அதிகளவில் உள்ளதாக வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்தார்.

    தென்மேற்கு பருவமழை இந்திய பகுதிகளில் முற்றிலுமாக விலகி, வடகிழக்கு பருவமழை தொடங்கிவிட்டதாகவும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    இதன் காரணமாக, தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக இன்று சில ரெயில்களின் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

    அதன்படி, சென்னை சென்ட்ரல் - போடிநாயக்கனூர் இடையேயான எக்ஸ்பிரஸ் (20601), சென்னை சென்ட்ரல் - ஜோலார்பேட்டை இடையேயான ஏலகிரி எக்ஸ்பிரஸ் இருமார்க்கங்களிலும் ரத்து.

    சென்னை - திருப்பதி இடையேயான சப்தகிரி எக்ஸ்பிரஸ் (16057), சென்னை - திருப்பதி இடையேயான எக்ஸ்பிரஸ் ரெயில் இருமார்க்கங்களிலும் ரத்து.

    ஈரோடு - சென்னை சென்ட்ரல் இடையேயான ஏற்காடு எக்ஸ்பிரஸ் (22650) ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • நேற்று முன்தினம் இரவு முதலே கனமழை பெய்து வருகிறது.
    • தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.

    தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு வடமேற்கு பகுதியில் நகர்ந்து தெற்கு வங்கக்கடல் மத்திய பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது. காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் நேற்று முன்தினம் இரவு முதலே கனமழை பெய்து வருகிறது.

    இன்றும் கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. மேலும் வடகிழக்கு பருவமழை தொடங்கியதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.

    இந்த நிலையில், கனமழை காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் பாஸ்கர் பாண்டியன் உத்தரவிட்டுள்ளார். முன்னதாக கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

    இதுதவிர சேலம், விழுப்புரம், கடலூர், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ராணிப்பேட்டை மற்றும் தருமபுரி மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

    • தமிழக அரசு சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறது.
    • செங்குன்றம், புழல் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

    பொன்னேரி:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது. இதையொட்டி சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கு அதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டது. தமிழக அரசு சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறது.

    இந்நிலையில் பொன்னேரி மற்றும் பழவேற்காடு, மீஞ்சூர், சோழவரம், செங்குன்றம், புழல் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

    கனமழை பெய்து வருவதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

    • அண்ணா அறிவாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள 'War Room'-ஐ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.
    • நிவாரணப் பணிகளில் அரசு இயந்திரத்துக்குத் துணை நிற்குமாறு கேட்டுக் கொண்டேன்.

    சென்னை:

    வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமை நிலையமான அண்ணா அறிவாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள 'War Room'-ஐ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். அப்போது, மழை பாதிப்புகளை தி.மு.க. நிர்வாகிகள் கண்காணிக்க வேண்டும் எனவும், பொதுமக்களுக்கு உதவிடுமாறும் அறிவுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் தெரிவிக்கையில்,


    "திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமை நிலையமான அண்ணா அறிவாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள 'War Room'-ஐப் பார்வையிட்டு, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட - பகுதி - வட்டச் செயலாளர்கள், கவுன்சிலர்கள் ஆகியோரைத் தொடர்புகொண்டு, தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை முகாம்களுக்கு அழைத்துச் செல்வதோடு, அவர்களுக்குத் தேவையான உணவு உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளைச் செய்துகொடுத்து, நிவாரணப் பணிகளில் அரசு இயந்திரத்துக்குத் துணை நிற்குமாறு கேட்டுக் கொண்டேன்.

    இரவு முழுதும் விழிப்புடன் பணியாற்றி, கோரிக்கைகளை ஒருங்கிணைத்து, பொதுமக்களுக்கு உதவிடுமாறு கழக நிர்வாகிகளை அறிவுறுத்தியுள்ளேன். அண்ணா அறிவாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள War Room எண்: 08069446900"

    இவ்வாறு தெரிவித்துள்ளார்.

    • தமிழக அரசு சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
    • நெல்லூர் - புதுச்சேரி இடையே சென்னைக்கு அருகே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    சென்னை:

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மிதமான மழை முதல் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கு அதிகனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனால் தமிழக அரசு சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

    இந்த நிலையில், வங்கக்கடலில் மையம் கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னையில் இருந்து தென்கிழக்கில் 490 கி.மீ. தொலைவிலும், புதுச்சேரி மற்றும் ஆந்திரா நெல்லூர் பகுதியில் இருந்து 500 கி.மீ. தொலைவிலும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது.


    மேலும் இது மேற்கு - வடமேற்கு திசையில் வட தமிழகம் நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 17-ம் தேதி அதிகாலையில் வட தமிழகம், தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளை கடந்து நெல்லூர் - புதுச்சேரி இடையே சென்னைக்கு அருகே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    கனமழையை முன்னிட்டு மீட்பு பணிக்கு முப்படைகளும் தயார் நிலையில் உள்ளன என பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்து உள்ளது. வடதமிழகம் மற்றும் ஆந்திர பிரதேசத்தில் மீட்பு பணிகளை மேற்கொள்ள தயாராக வைக்கப்பட்டு உள்ளன.

    இதேபோன்று, மீட்பு மற்றும் நிவாரண பணிகளை மேற்கொள்ள தாம்பரம் விமானப்படை தளத்தில் ஹெலிகாப்டர்கள் தயாராக உள்ளன. அரக்கோணம் கப்பல் படை வீரர்கள், மத்திய கடலோர காவல் படையினரும் படகுகளுடன் தயாராக உள்ளனர். தேசிய பேரிடர் மீட்பு படையின் 13 கம்பெனிகளுக்கும் அழைப்பு விடப்பட்டு உள்ளது என பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    • சென்னையில் மழையால் விழுந்த அனைத்து மரங்களும் அகற்றப்பட்டுள்ளன.
    • 300 இடங்களில் நிவாரண மையங்கள் நிறுவப்பட்டுள்ளன.

    சென்னை:

    கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக ரிப்பன் மாளிகையில் அதிகாரிகளுடன் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.

    ஆய்வுக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி ஸ்டாலின், "பொதுமக்கள் தேவையின்றி வெளியே வர வேண்டாம். சென்னையில் மழையால் விழுந்த அனைத்து மரங்களும் அகற்றப்பட்டுள்ளன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. மேம்பாலங்களில் கார் நிறுத்துவோருக்கு அபராதம் விதிக்கக் கூடாது என்று முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

    300 இடங்களில் நிவாரண மையங்கள் நிறுவப்பட்டுள்ளன. 14 மையங்களில் 600 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு உணவுகள் முறையாக தரப்படுகிறது.

    10 மின் மாற்றிகளில் மட்டுமே மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. பிற இடங்களில் மின்சார விநியோகம் சீராக உள்ளது. 103 படகுகள் தயார்நிலையில் உள்ளன. 100 இடங்களில் மழைக்கால மருத்துவ முகாம் அமைக்கப்பட்டுள்ளது. 8 தேசிய பேரிடர் மீட்புப் படை குழுவினர் பணிகளை மேற்கொள்ள சென்னைக்கு வருகை தந்துள்ளனர்.

    பருவ மழையை எதிர்கொள்ள அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. மீட்பு, நிவாரணப் பணிகளை மக்கள் பிரதிநிதிகள் மூலம் மேற்கொண்டு வருகின்றோம். ஏரிகளில் ஆகாய தாமரைகளை அகற்றும் பணிகளும் தொடர்ந்து நடந்து வருகிறது. சென்னையில் பல்வேறு இடங்களுக்கு சென்று நேரில் ஆய்வு செய்துள்ளோம்" என்று அவர் கூறினார்.

    ×