search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    இனி வரும் காலங்களில் புயல் அனைத்துமே அதிக வலிமையுடன் இருக்கும்!- மத்திய புவி அறிவியல் அமைச்சக செயலாளர்
    X

    இனி வரும் காலங்களில் புயல் அனைத்துமே அதிக வலிமையுடன் இருக்கும்!- மத்திய புவி அறிவியல் அமைச்சக செயலாளர்

    • கடல் வெப்ப அலை ஏற்படுவதால் வரும் நாட்களில் புயல்கள் வலிமையாகும்.
    • வெப்பம் அதிகரிப்பால் மேகங்கள் நீரை சுமக்கும் திறன் அதிகரிக்கும்.

    பருவமழை என்ற வார்த்தையை கேள்விப்பட்டிருந்தாலும், வானிலை நிகழ்வில் ..இப்பொழுதெல்லாம் எப்போது மழை வருகிறது, எப்போது வெயில் அடிக்கிறது, எப்போது புயல் வருகிறது என்று தெரிவதில்லை.

    தென்மேற்கு பருவமழை ஜூன் முதல் செப்டம்பர் வரை நீடிக்கும். இது மே மாத இறுதியில் அல்லது ஜூன் தொடக்கத்தில் தொடங்கி மெதுவாக நாடு முழுவதும் பரவுகிறது. வடகிழக்கு பருவமழை அக்டோபர் இறுதியில் தொடங்கி டிசம்பர் மாதம் வரை நீடிக்கிறது.

    வடகிழக்கு பருவமழை காலங்களில் அதிக புயல்கள் உருவாகும். இத்தகைய புயல்கள் அண்மைக்காலங்களில் அதிதீவிர புயல்களாக உருவாகி இந்தியாவை அச்சுறுத்தி வருகின்றன. இது காலநிலை மாற்றத்தில் விளைவு என்று சொல்லப்படுகிறது.


    கடல் வெப்ப அலை ஏற்படுவதால் வரும் நாட்களில் புயல்கள் வலிமையாகும் என மத்திய புவி அறிவியல் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    மத்திய புவி அறிவியல் அமைச்சக செயலாளர் ரவிச்சந்திரன் நிருபர்கள் சந்திப்பில் கூறியதாவது:

    கடல் வெப்ப அலைகளால் வரும் காலங்களில் புயல்கள் வலிமை பெற்றதாக மாறும். வெப்பம் அதிகரிப்பால் மேகங்கள் நீரை சுமக்கும் திறன் அதிகரிக்கும். காலநிலை மாற்றத்தால் மேகங்களின் பரப்பளவு குறைந்து அதிக நீரைக் கொண்டதாக உருவாகின்றன.

    'மரைன் ஹீட் வேவ்' மாதக் கணக்கில் தொடர்கிறது. இதனால் புயல்கள் இனி மிகுந்த வலிமை பெற்றதாக மாறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×