என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
ஒரே குழப்பமா இருக்கே.. ஃபெஞ்சல் புயல் நிவாரண நிதி - யார் யாருக்கு கிடைக்கும், எதை நம்புவது?
- குடும்ப அட்டை அடிப்படையில் நிவாரணமாக ரூபாய் 2 ஆயிரம்.
- யார் யாருக்கு கிடைக்கும் என்பதில் தெளிவற்ற சூழல்தான் நிலவுகிறது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் ஏற்பட்ட ஃபெஞ்சல் புயல் பல மாவட்டங்களில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. மழை பாதிப்புகள் குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தலைமை செயலகத்தில் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
அதன் பிறகு அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "அதி கனமழையின் காரணமாக கடுமையான மழைப் பொழிவினை சந்தித்துள்ள விழுப்புரம், கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில், இரண்டு நாட்களுக்கு மேல் மழை, வெள்ளம் சூழ்ந்து, வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு, குடும்ப அட்டை அடிப்படையில் நிவாரணமாக ரூபாய் 2 ஆயிரம் வழங்கப்படும்," என குறிப்பிட்டுள்ளார்.
இதைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசின் செய்தி, மக்கள் தொடர்புத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள எக்ஸ் தள பதிவில், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ. 2 ஆயிரம் வெள்ள நிவாரணம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
முன்னதாக முதலமைச்சர் வெளியிட்ட அறிக்கையில், இரண்டு நாட்களுக்கு மேல் மழை, வெள்ளம் சூழ்ந்து, வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு, குடும்ப அட்டை அடிப்படையில் நிவாரணமாக ரூபாய் 2 ஆயிரம் வழங்கப்படும் என்றும் அதன் பிறது தமிழ்நாடு அரசின் செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை வெளியிட்ட சமூக வலைதள பதிவில், ஆறு மாவட்டங்களை சேர்ந்த குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ. 2 ஆயிரம் வெள்ள நிவாரணம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
இந்த நிலையில், வெள்ள நிவாரணம் எந்தெந்த மாவட்டங்களில், யார் யாருக்கு கிடைக்கும் என்பதில் தெளிவற்ற, குழப்பமான சூழல்தான் நிலவுகிறது. வெள்ள நிவாரணம் குறித்து அரசு சார்பில் தெளிவான இறுதி அறிவிப்பு வெளியிடப்படுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்