search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்தது ஃபெஞ்சல் புயல்
    X

    காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்தது ஃபெஞ்சல் புயல்

    • தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம், கடந்த 29-ந்தேதி மதியம் புயலாக மாறியது.
    • நேற்று முன்தினம் மாலை 5.30 மணியளவில் புதுச்சேரி-மரக்காணம் இடையே புதுச்சேரி அருகே கரையை கடக்கத்தொடங்கியது

    வங்கக் கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் சனிக்கிழமை இரவு கரையை கடந்த பின்னர் ஆழந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது. ஆழந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக புயல் கரையை கடந்த பின்னரும் கனமழை கொட்டித்தீர்த்தது. புதுச்சேரி, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் தொடர்ந்த மழை பெய்து பேரம் சேதத்தை ஏற்படுத்தியது.

    பின்னர் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேலும் வலுவிழந்தது. இதனால் மழை படிப்படியாக குறைந்தது.

    இந்த நிலையில் இன்று காலை 5.30 மணி நிலவரப்படி ஃபெஞ்சல் புயல் காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்ததாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழக வடக்கு கடற்கரை மற்றும் புதுச்சேரி இடையே மேற்கு நோக்கி நகர்ந்து தமிழ்நாட்டின் வடக்கு உள்பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்தது.

    தற்போதுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி தென்கிழக்கு மற்றும் அதனையொட்டியுள்ள கிழக்க மத்திய அரபிக் கடலில் வடக்கு கேரளா- கர்நாடகா கடற்கரை பகுதியில் நாளை வெளிப்பட வாய்ப்புள்ளது எனவும் தெரிவித்துள்ளது.

    முன்னதாக,

    புயலாக மாறாமல் போக்கு காட்டி வந்த தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம், கடந்த 29-ந்தேதி மதியம் புயலாக மாறியது. அதற்கு 'பெஞ்ஜல்' என்று பெயரிடப்பட்டது. ஒழுங்கற்ற உருவமாக இருந்த பெஞ்ஜல் புயல், நேற்று முன்தினம் மாலை 5.30 மணியளவில் புதுச்சேரி-மரக்காணம் இடையே புதுச்சேரி அருகே கரையை கடக்கத்தொடங்கியது என்று இந்திய வானிலை மையம் அறிவித்தது.

    Next Story
    ×