என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
ஏற்காட்டில் வரலாறு காணாத குளிரால் வெறிச்சோடிய சுற்றுலா தலங்கள்
- பனிப்பொழிவும் அதிகரித்துள்ளதால் ஏற்காட்டில் மரம், செடி கொடிகளிலும் பனி படர்ந்து காணப்படுகிறது
- சேலம் மாநகரில் நேற்று லேசான சாரல் மழை பெய்தது.
சேலம்:
சேலம் மாவட்டம் ஏற்காட்டிற்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் தினமும் வந்து செல்வார்கள். இதனால் ஏற்காட்டில் மக்கள் கூட்டம் அலைமோதும்.
இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக ஏற்காட்டிலும் தொடர் மழை பெய்து வரும் நிலையில் நேற்றும் பகல் மற்றும் இரவு நேரங்களில் விட்டு விட்டு சாரல் மழை பெய்தது.
மேலும் பனிப்பொழிவும் அதிகரித்துள்ளதால் ஏற்காட்டில் மரம், செடி கொடிகளிலும் பனி படர்ந்து காணப்படுகிறது. இதனால் அருகில் நிற்பவர்களை கூட பார்க்க முடிவதில்லை. தொடர் மழை மற்றும் பனி காரணமாக ஏற்காட்டில் வரலாறு காணாத அளவில் கடும் குளிர் நிலவி வருகிறது.
இதனால் ஏற்காட்டில் வசிக்கும் மக்கள் மற்றும் தொழிலாளர்கள் தவியாய் தவித்து வருகிறார்கள். மேலும் கடும் குளிரில் இருந்து தப்பிக்க ஸ்வெட்டர் மற்றும் ஜர்கின் அணிந்த படியும் சாலையில் நடமாடுகின்றனர். ஆனாலும் குளிரின் தாக்கம் அதிகமாக உள்ளதால் பெரும்பாலானோர் வீட்டில் முடங்கி உள்ளதால் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது.
மேலும் ஏற்காடு மலைப்பாதையில் அதிக அளவில் பனி மூட்டம் நிலவுவதால் மலைப்பாதையில் செல்லும் வாகனங்கள் முகப்பு விளக்கை எரிய விட்டபடியே ஊர்ந்து செல்கின்றன. ஏற்காட்டில் நிலவும் கடும் குளிரால் அங்குள்ள முக்கிய சுற்றுலா தலங்கள் அனைத்தும் கடந்த சில நாட்களாக வெறிச்சோடி காணப்படுகிறது.
சேலம் மாநகரில் நேற்று லேசான சாரல் மழை பெய்தது. இந்த மழையை தொடர்ந்து சேலம் மாநகரில் கடும் குளிர் நிலவி வருகிறது. இதே போல சேலம் மாவட்டத்தின் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழை மற்றும் பனியால் கடும் குளிர் நிலவி வ ருகிறது. இதனால் காலை நேரங்களில் வாகனங்களில் செல்வோர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் குளிரில் இருந்து தப்பிக்க ஸ்வெட்டர் மற்றும் ஜெர்கின்கள், கம்பளி பெட்சீட், போர்வைகள் பொது மக்கள் அதிக அளவில் வாங்கி வருகிறார்கள். இதனால் அதன் விற்பனையும் சூடு பிடித்துள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்