search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    LIVE

    லைவ் அப்டேட்ஸ்: 100 அடி உயர கம்பத்தில் த.வெ.க. கொடியை ஏற்றினார் விஜய்

    • தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு பிரம்மாண்டமாக இன்று மாலை நடைபெற உள்ளது.
    • தொண்டர்கள் மாநாட்டிற்காக இன்று அதிகாலை முதலே சாரை சாரையாக வந்துக் கொண்டிருக்கின்றனர்.

    விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு பிரம்மாண்டமாக இன்று மாலை நடைபெற உள்ளது.

    விஜய் கட்சி மாநாட்டுக்கான பிரமாண்ட ஏற்பாடுகள் காரணமாக வி.சாலை பகுதி மட்டுமின்றி விழுப்புரம் மாவட்டமே விழாக்கோலம் பூண்டுள்ளது. வி.சாலை விஜய்யின் வியூகச் சாலையாக மாறி, மாபெரும் அரசியல் சரித்திரத்தை நிகழ்த்தி காட்டும் என்ற எதிர்பார்ப்புடன் தொண்டர்கள் மாநாட்டிற்காக இன்று அதிகாலை முதலே சாரை சாரையாக வந்துக் கொண்டிருக்கின்றனர்.

    இந்நிலையில், இன்னும் சற்று நேரத்தில் மாநாடு தொடங்க இருக்கிறது. த.வெ.க. முதல் மாநில மாநாடு தொடங்குவதை அடுத்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் த.வெ.க. தலைவர் விஜய்-க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    Live Updates

    • 27 Oct 2024 3:16 PM IST

      தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநில மாநாடு, கட்சி பாடலோடு தொடங்கியது. 

    • 27 Oct 2024 2:49 PM IST



    • 27 Oct 2024 2:24 PM IST



    • 27 Oct 2024 2:16 PM IST



    • 27 Oct 2024 2:04 PM IST

      தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் பங்கேற்பவர்களுக்கு டிஜிட்டல் சான்றிதழ் அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது . பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டுள்ள கியூஆர் கோட் மூலம் ஸ்கேன் செய்து சான்றிதழைப் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


    • 27 Oct 2024 1:55 PM IST

      த.வெ.க மாநாட்டு திடலில் 90 சதவீத இருக்கைகள் நிரம்பியுளளன. தொண்டர்கள் குவிந்ததை அடுத்து மாநாட்டு நிகழ்ச்சியை முன்கூட்டியே தொடங்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • 27 Oct 2024 1:48 PM IST

      விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு நடிகர் சிவகார்த்திகேயன் வாழ்த்து தெரிவித்துள்ளார். "இன்று தனது புதிய பயணத்தை தொடங்கவிருக்கும் விஜய் சாருக்கு தனது மனமார்ந்த வாழ்த்துகள்" என குறிப்பிட்டுள்ளார்.

    • 27 Oct 2024 1:38 PM IST

      த.வெ.க மாநாடு தொடங்குவதற்கு முன் தொண்டர்களை ஒழுங்குபடுத்துவது குறித்து மாவட்ட தலைவர்கள், பொறுப்பாளர்களுடன் த.வெ.க பொதுச் செயலாளர் ஆனந்த் ஆலோசனை நடத்தி வருகிறார்.

    • 27 Oct 2024 1:31 PM IST

      த.வெ.க மாநாட்டில் காவலர்கள் உள்பட 60க்கும் மேற்பட்டோர் மயக்கம் அடைந்துள்ளனர். கடும் வெயிலால் மயக்கம், தலை சுற்றல் போன்றவற்றால் தொண்டர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மயக்கமடைந்தவர்களை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்து செல்கின்றனர்.

    • 27 Oct 2024 1:23 PM IST

      திருச்சியில் இருந்து த.வெ.க. மாநாட்டிற்கு வந்த தொண்டர்களின் கார் உளுந்தூர்பேட்டை பகுதியில் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இதில், திருச்சியை சேர்ந்த 35 வயதான கலை என்பவர் உள்பட இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 3 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    Next Story
    ×