search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழை
    X

    சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழை

    • கடந்த சில தினங்களாக குளிர்ச்சியான சூழல் நிலவியது.
    • மயிலாப்பூர், அடையார் உள்பட பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

    சென்னை:

    டெல்டா மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    சென்னையை பொறுத்தவரை கடந்த சில தினங்களாக குளிர்ச்சியான சூழல் நிலவியது. இன்று மாலையில் திடீரென வானிலையில் மாற்றம் தெரிந்தது. குளிர்ச்சி குறைந்தது அவ்வப்போது லேசான தூறல் மழை பெய்தது.

    இந்த நிலையில் இரவு 10 மணிக்கு மேல் சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. சென்னை எழும்பூர், வேப்பேரி, கோடம்பாக்கம், கிண்டி, மயிலாப்பூர், அடையார் உள்பட பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

    Next Story
    ×