search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    நவம்பர், டிசம்பர் மாதத்தில் கூடுதல் மழை பெய்தாலும் எதிர்கொள்ள தயார்- உதயநிதி ஸ்டாலின்
    X

    நவம்பர், டிசம்பர் மாதத்தில் கூடுதல் மழை பெய்தாலும் எதிர்கொள்ள தயார்- உதயநிதி ஸ்டாலின்

    • உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
    • உயர்நிலை ஆய்வுக்கூட்டத்தை தலைமைச் செயலகத்தில் இன்றைய தினம் (நேற்று) நடத்தினோம்.

    சென்னை மாநகரில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நடவடிக்கைகள் குறித்த உயர்நிலை ஆய்வுக்கூட்டத்தை தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்றது.

    அப்போது, தொடர்ந்து மழை பெய்தாலும், அதனை எதிர்கொள்வதற்கு ஏதுவாக எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேட்டறிந்தார்.

    இந்நிலையில், இதுதொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அந்த பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-

    முதலமைச்சரின் உத்தரவின்பேரில், வடகிழக்கு பருவமழைத் தொடர்பாக சென்னை மாநகரில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நடவடிக்கைகள் குறித்த உயர்நிலை ஆய்வுக்கூட்டத்தை தலைமைச் செயலகத்தில் இன்றைய தினம் (நேற்று) நடத்தினோம்.

    வரும் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் சென்னையில் மழை பெய்யக்கூடும் என்பதால், அதனை எதிர்கொள்வதற்காக எடுக்கப்பட்டுள்ள மற்றும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகள் - அலுவலர்களிடம் விரிவாக கேட்டறிந்தோம்.

    குறிப்பாக கடந்த அக்டோபர் 14,15,16-ஆம் தேதிகளில் பெய்த மழையின் போது, மண்டல அளவில் நியமிக்கப்பட்டு பணியாற்றிய கண்காணிப்பு அலுவலர்கள், களத்தில் அவர்கள் பெற்ற அனுபவங்களின் அடிப்படையில் பல்வேறு கருத்துக்களை எடுத்துரைத்தனர்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    Next Story
    ×