search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஜனாதிபதி வருகையை முன்னிட்டு ஊட்டியில் சாலை பராமரிப்பு பணி தீவிரம்
    X

    ஜனாதிபதி வருகையை முன்னிட்டு ஊட்டியில் சாலை பராமரிப்பு பணி தீவிரம்

    • ஹெலிகாப்டர் தளத்தில் வெடிகுண்டு நிபுணர்களும் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
    • பிங்கர் போஸ்ட் முதல் வெலிங்டன் வரையுள்ள சாலைகள் சீரமைக்கப்பட்டு வருகிறது.

    ஊட்டி:

    திருவாரூர் மத்திய பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா மற்றும் குன்னூர் வெலிங்டன் ராணுவ கல்லூரியில் அதிகாரிகளுடன் கலந்துரையாடல் ஆகிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி திரவுபதி முர்மு 27-ந் தேதி தமிழகம் வருகிறார்.

    அன்று டெல்லியில் இருந்து விமானம் மூலம் கோவை சூலூர் விமானப்படை விமான தளத்திற்கு வரும் ஜனாதிபதி திரவுபதி முர்மு அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் ஊட்டி வருகிறார்.

    ஊட்டியில் உள்ள ராஜ்பவனில் தங்கும் அவர் 28-ந் தேதி குன்னூர் ராணுவ அதிகாரிகள் பயிற்சி பெறும் கல்லூரிக்குச் சென்று அங்கு நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். 29-ந் தேதி ஊட்டி ராஜ்பவனில் பழங்குடியின மக்களை சந்திக்கிறார்.

    30-ந் தேதி காலை ஹெலிகாப்டர் மூலம் கோவை சூலூர் விமானப்படை தளத்திற்கு செல்லும் அவர் திருவாரூரில் பல்கலைக்கழக நிகழ்ச்சிகளில் பங்கேற்று விட்டு டெல்லி திரும்புகிறார்.

    ஜனாதிபதி திரவுபதி முர்மு வருகையை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. அவர் ஹெலிகாப்டரில் வந்திறங்கும் தீட்டுக்கல் ஹெலிகாப்டர் தளத்தை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. அங்கு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீசார் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். ஹெலிகாப்டர் தளத்தில் வெடிகுண்டு நிபுணர்களும் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

    இதேபோல் தீட்டுக்கல் ஹெலிகாப்டர் மைதானம் பகுதியில் வெளி ஆட்கள் நுழைய போலீசார் தடை விதித்துள்ளனர். இதேபோல் சோதனைச்சாவடிகளில் கண்காணிப்பு பணிகள் தீவிர படுத்தப்பட்டுள்ளது.

    சிறப்பு பிரிவு போலீசார் கூடுதல் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அத்துடன் தீட்டுக்கல் முதல் ராஜ்பவன் வரை உள்ள சாலைகள், பிங்கர் போஸ்ட் முதல் வெலிங்டன் வரையுள்ள சாலைகள் சீரமைக்கப்பட்டு வருகிறது.

    Next Story
    ×