search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அஜித்தை பாராட்டி விஜயை மறைமுகமாக விமர்சித்தாரா சத்யராஜ்?
    X

    அஜித்தை பாராட்டி விஜயை மறைமுகமாக விமர்சித்தாரா சத்யராஜ்?

    • இருமொழிக் கொள்கை தான் முக்கியம்..
    • பைக்கில் டூர் போவதை பற்றி வீடியோவில் கூறியிருந்தார்.

    சென்னையில் நடைபெற்ற கருத்தரங்கு நிகழ்ச்சியின் நடிகர் சத்யராஜ் பங்கேற்று பேசியதாவது:-

    அஜித் குமார் ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். பைக்கில் டூர் போவதை பற்றி வீடியோவில் கூறியிருந்தார். சம்பந்தமே இல்லாத ஒரு மனிதனுக்கு கோபம் வருகிறது என்றால் அதற்கு காரணம் மதம் தான். ஏதோ ஒரு நாட்டுக்கு போகும் போது ஒருவரை பார்க்கிறோம். எந்த வாய்க்கால் வரப்பு சண்டையும் கிடையாது. ஆனால் அந்த மதம் தான். தேவையில்லாமல் ஒரு வெறுப்பை உருவாக்குகிறது என்று அழகான பதிவினை வெளியிட்டிருந்தார் அஜித். அவருக்கு என்னுடைய பாராட்டுக்கள்.

    ஆரியம் திராவிடத்தை எதிர்ப்பது ஓகே. தமிழ் தேசியம் என்ற பெயரில் எதிர்த்து ஆரியத்திற்கு துணை போவது ரொம்ப ஆபத்தானது. ஆரியம் வந்து திராவிடத்தை எதிர்க்கலாம். தந்தை பெரியார் சொல்லியிருக்கிறார் இதை பற்றி.. அவரிடம் நான் பேசுவது எல்லாம் சரியா என்று கேட்டால்.. நீ பேசுவதை பார்த்து அவர்கள் கோபப்பட்டால்.. நீ பேசுவது சரி என்றார்.

    ஆனால் அவர்கள் சந்தோஷப்பட்டால் நீ தப்பா பேசுகிறாய் என்று அர்த்தம் என்று தெளிவாக சொல்லிக் கொடுத்துவிட்டு போயிருக்கிறார். டெக்னாலஜி வளர்ந்து வரும்போது, நமக்கு இருமொழிக் கொள்கைதான் முக்கியம்.

    மும்மொழிக் கொள்கை எதற்காக. மாணவனுக்கு நேரம் என்பது மிகவும் முக்கியம். பள்ளிக்கு போய் வர வேண்டும். அதன்பிறகு விளையாட்டு, கொஞ்ச நேரம் டிவி பார்க்கணும். அப்படித்தானே வாழ்க்கையை நடத்த முடியும். ஏற்கனவே என்னை மாதிரி சரியாக படிக்காதவர்களுக்கு ஆங்கிலம், கணக்கு படிப்பதே பெரிய தலைவலியாக இருக்கிறது. இதில் இந்தியையும் படிக்க வேண்டும் என்று சொன்னால் கோபம் வரத்தானே செய்யும்.

    திராவிடம்தான் தமிழ்நாட்டில் வாழும் அனைத்து மக்களுக்கும் பாதுகாப்பானது. இந்த வடமாநில தொழிலாளர்கள் நிறைய வருகிறார்கள். அவங்க மாநிலத்தில் வந்து ஜாதிய ஒடுக்குமுறையை அனுபவித்திருப்பார்கள். உயர்ஜாதி என்று கருதப்படுபவர்கள் யாரும் இங்கு வேலைக்கு வந்திருக்கமாட்டார்கள்.

    மிகவும் ஒடுக்கப்பட்ட தலித் சகோதரர்களின் குடும்பங்கள்தான் இங்கு வந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களும் கிட்டத்தட்ட 10, 15 வருடங்களாக வந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.. அவர்களிடம் நாம் புரிய வைக்க வேண்டும்.

    ஏன் உங்கள் மாதிரி எங்கள் மாநிலம் இல்லை. திராவிட சித்தாந்தம்தான் காரணம் என்று புரிய வைக்க வேண்டும். நாம் சிங்கப்பூர் போய்விட்டு வந்தால், சிங்கப்பூரை போய் பாருங்க என்று சொல்வோம்.. அமெரிக்கா போய் வந்தால், அமெரிக்காவை போய் பாருங்க என்று கூறுவோம். அதுபோல் வடமாநில தொழிலாளர்கள், அவங்க மாநிலத்திற்கு போய் தமிழ்நாட்டை பாருங்க..

    அப்படி சொல்லும் நிலையை உருவாக்க வேண்டும். அவர்களுக்கு இந்தியில் திராவிடம் குறித்து மொழி பெயர்த்து கொடுக்க வேண்டும். அப்போதுதான் அவர் ஊரில் போய் தமிழ்நாடு பற்றி சொல்வார்.

    இங்கு ஒரு மதக்கலவரமும் இல்லை. நன்றாக போகிறது வாழ்க்கை என்று பெருமையாக கூறுவார்கள். எங்களை பிரியமாக வைத்துக் கொள்கிறார்கள் என்று கூறுவார்கள். அங்கிருந்து இங்கு ஆட்கள் வருகிறார்கள் என்றால், நம்மாட்கள் அதைவிட மேலே சென்றுவிட்டார்கள் என்று அர்த்தம்.. நம்மாட்கள் வேலை செய்ய வரவில்லை என்று அர்த்தம் இல்லை.

    திராவிடமும் தமிழ் தேசியமும் ஒன்றுதான் என பிரபாகரனே கூறியுள்ளார். ஒருமுறை பேரறிவாளன் ஜாமினில் வெளியில் வந்திருந்தார். அவரை பார்க்க அவர் வீட்டிற்கு சென்றிருந்தேன். அப்போது அவர் வீட்டுக் கதவை திறந்த உடன் அங்கு சுவரில் பெரியார், பிரபாகரன் படம் இருந்தது. திராவிடமும் தமிழ் தேசியமும் ஒன்றுதான் என்பதற்கு இதைவிட வேறு உதாரணம் தேவையில்லை.

    விடுதலை ராஜேந்திரன் ஒரு பதிவு வெளியிட்டிருந்தார். அதில், 1975-ல் கியூபாவில் உலகப் பேராளிகள் மாநாடு நடந்துள்ளது. இதற்கு பிரபாகரன் அழைக்கப்பட்டிருந்தார். அவர் சூழ்நிலைகள் காரணமாக செல்லவில்லை. இதற்கு பதில் அவர் கியூபாவிற்கு கடிதம் அனுப்புகிறார். அதில், தமிழ் இந்தியாவிலேயே பழமையான மொழி என்றும் திராவிடமும் தமிழ் தேசியமும் ஒன்றுதான் என்னும் வகையில் அதில் குறிப்பிட்டுள்ளார்.

    தமிழ் மொழி பேசுகிற திராவிடர்கள் ஆகிய நாங்கள் என்று பிரபாகரன் எனக் குறிப்பிட்டுள்ளார். தமிழ், தமிழ் தேசியத்தின் அரண் திராவிட இயங்கங்கள். திராவிட இயக்கம் ஆட்சியில் இருக்கும் வரை அந்த அரண் வெறும் கற்கோட்டையாக இல்லாமல் இரும்புக்கோட்டையாக இருக்கிறது.

    விஜய் தனது தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநில மாநாட்டில் திராவிடம், தமிழ்தேசியம் இரண்டும் இரு கண்கள். இது எங்கள் கொள்கை என அறிவித்திருந்தார். தமிழ்தேசியம், திராவிடம் என்பது எப்படி ஒன்றாகும் என சீமான் உள்ளிட்டோர் விமர்சித்திருந்தனர்.

    இந்த நிலையில் திராவிடமும், தமிழ்தேசியம் இரண்டும் ஒன்றுதான். இரண்டையும் வெவ்வேறாக பிரித்து பார்ப்பது சரியாகாது என பிரபாகரன் கூறியதை மேற்கோள் காட்டி விஜயின் கொள்கையை தவறு என்ற வகையில் சத்யராஜ் முறைமுகமாக விமர்சித்ததாக பார்க்கப்படுகிறது.

    பொதுவாக சினிமா தொடர்பாக விஜய்- அஜித் ரசிகர்கள் இடையே மோதல் இருந்து வருகிறது. விஜயை விமர்சிப்பவர்கள் அஜித்தை பாராட்டி பேசுவார்கள். அஜித்தை விமர்சிப்பவர்கள் விஜயை பாராட்டி பேசுவார்கள்.

    விஜய் மாநில மாநாட்டிற்குப் பிறகு கார் ரேசில் கலந்து கொள்ள இருந்த அஜித்திற்கு உதயநிதி வாழ்த்து தெரிவித்திருந்தார். மாநாடு நடத்திய விஜய்க்கு எதிர்ப்பை இவ்வாறு மறைமுகமாக தெரிவிப்பதாக பேசப்பட்டது.

    இவ்வாறு நடிகர் சத்யராஜ் பேசினார்.

    Next Story
    ×