search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பாஜக- ஆர்.எஸ்.எஸ். அனைத்து மாநிலங்களிலும் அமைதியை சீர்குலைக்கிறது- செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு
    X

    பாஜக- ஆர்.எஸ்.எஸ். அனைத்து மாநிலங்களிலும் அமைதியை சீர்குலைக்கிறது- செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு

    • ஆட்சியில் பங்கு என்பது குறித்து அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைமை தான் முடிவு செய்யும்.
    • விஜய் அரசியல் கட்சி தொடங்கி இருப்பது அவரது தார்மீக உரிமையாகும்.

    நாகர்கோவில்:

    முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு நாகர்கோவில் டதி சந்திப்பில் உள்ள அவரது சிலைக்கு, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த இந்திரா காந்தி படத்திற்கும் மரியாதை செலுத்தினார்.

    பின்பு செல்வப்பெருந்தகை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    உலக நாடுகள் எல்லாம் இந்தியாவை உற்று நோக்க பார்க்க வைத்த இரும்பு பெண்மணி மாபெரும் தலைவர், இந்திய தேசத்தை தலைநிமிர செய்த இரும்பு பெண்மணி இந்திரா காந்தியின் பிறந்த நாள் விழாவை குமரி மாவட்டத்தில் கொண்டாடுவதில் பெருமையாக கருதுகிறோம் . பயங்கரவாதத்தை ஒழிக்க அரும்பாடுபட்டவர் இந்திரா காந்தி. எனவே பயங்கரவாத எதிர்ப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டுள்ளோம். குமரி மாவட்டம் காங்கிரசின் இதயமாக உள்ளது.

    ஆட்சியில் பங்கு என்பது குறித்து அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைமை தான் முடிவு செய்யும். காங்கிரஸ் கட்சி தேசிய கட்சி ஆகும். 2004 முதல் 2014 வரை ஆட்சியிலும், அதிகாரத்திலும் நாங்கள் பங்கு கொடுத்துள்ளோம். இதுகாங்கிரஸ் பார்முலா. கிராம கமிட்டி அமைப்பதற்காக அந்த திட்டத்தை முன்னோக்கி எடுத்துச்செல்கிறோம். அதுதான் தலையாய கடமையாக பணி செய்து வருகிறோம்.

    விஜய் அரசியல் கட்சி தொடங்கி இருப்பது அவரது தார்மீக உரிமையாகும். அரசியலமைப்பு சட்டத்தில் யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம், இயக்கம் ஆரம்பிக்கலாம். அவரது கருத்தை சொல்லலாம்.

    பாரதிய ஜனதா ஆட்சியில் இருக்கும் வரை மணிப்பூரில் கலவரம் இருந்து கொண்டுதான் இருக்கும். எல்லா மாநிலங்களிலும் ஆர்.எஸ்.எஸ்., பாரதிய ஜனதாவும் அமைதியை சீர்குலைத்து வருகிறது. பிரதமர் பல்வேறு நாடுகளுக்கு சென்று கொண்டிருக்கிறார். ஏன் மணிப்பூருக்கு மட்டும் செல்லவில்லை. இது மர்மமாக உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது விஜய்வசந்த் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ராஜேஷ்குமார், தாரகை கத்பர்ட், மாவட்ட தலைவர்கள் நவீன்குமார், கே.டி.உதயம், பினுலால்சிங், ஐ.என்.டி.யு.சி.தலைவர் சிவக்குமார், நாகர்கோவில் மாநகராட்சி மண்டல தலைவர் செல்வகுமார் மற்றும் முன்னாள் மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன், இளைஞர் காங்கிரஸ் டைசன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×