search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தவெக மாநாடு- கூட்ட நெரிசலை தவிர்க்க போக்குவரத்தை மாற்றிவிட முடிவு
    X

    தவெக மாநாடு- கூட்ட நெரிசலை தவிர்க்க போக்குவரத்தை மாற்றிவிட முடிவு

    • சென்னையில் இருந்து செல்லும் வாகனங்கள் திண்டிவனத்தில் மாற்றி விடப்படுகின்றன.
    • ஜிஎஸ்டி சாலையில் பொது போக்குவரத்தை தவிர்க்க போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

    தமிழக வெற்றிக் கழகம் மாநாடு வரும் 27ம் தேதி விழுப்புரம் வி.சாலையில் நடைபெறுகிறது.

    தமிழக வெற்றிக் கழக மாநாட்டையொட்டி, சென்னையில் இருந்து திருச்சி செல்லும் வாகனங்களுக்கு பாதை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    சென்னையில் இருந்து செல்லும் வாகனங்கள் திண்டிவனத்தில் மாற்றி விடப்படுகின்றன.

    திருச்சியில் இருந்து வரக்கூடிய வாகனங்கள் செஞ்சி அருகே மாற்றிவிடப்பட உள்ளன.

    போக்குவரத்து மாற்றம் காரணமாக 15 முதல் 20 கி.மீ தூரம் வரை பயண நேரம் அதிகமாகலாம் எனக் கூறப்படுகிறது. மேலும், மாநாட்டு மேடை பகுதி முக்கிய சாலையை ஒட்டி அமைந்து இருப்பதால் போக்குவரத்து நெரில் ஏற்பட வாய்ப்புள்ளது.

    இதனால், ஜிஎஸ்டி சாலையில் பொது போக்குவரத்தை தவிர்க்க போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

    மாநாட்டுக்கு இரண்டு லட்சம் பேர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படும் நிலையில், 50 ஆயிரம் நாற்காலிகள் மட்டுமே போடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இதற்கிடையே, தவெக மாநாட்டில் முன்னெச்சரிக்கைக்காக 17 மருத்துவ முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    மேலும், 150 மருத்துவர்கள், 150 செவிலியர்கள், 100 சுகாதார பணியாளர்கள், 22 ஆம்புலன்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

    Next Story
    ×