search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    த.வெ.க. முதல் மாநாடு- அதிகாலை முதலே ஆரவாரத்துடன் குவிந்த பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள்
    X

    த.வெ.க. முதல் மாநாடு- அதிகாலை முதலே ஆரவாரத்துடன் குவிந்த பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள்

    • மாநாட்டு திடலில் இடம் பெற்றுள்ள கட்-அவுட்கள் பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
    • மாநாட்டு திடலில் சுமார் ஒரு லட்சம் பேர் அமர்ந்து பார்க்கும் வகையில் இருக்கைகள் ஏற்பாடு.

    விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் உள்ள வி.சாயைில் இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.

    இதற்காக தேசிய நெடுஞ்சாலை அருகில் 85 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமான மாநாட்டு திடல் உருவாக்கப்பட்டு உள்ளது.

    மேடையின் இடது புறத்தில் பெரியார், காமராஜர், அம்பேத்கர், சுதந்திரப் போராட்ட தியாகிகள் வேலு நாச்சியார், கடலூர் மாவட்டத்தை சேர்ந்த அஞ்சலை அம்மாள் ஆகியோரது கட்-அவுட்கள் இடம் பெற்றுள்ளது. அவர்களுக்கு பின்னால் தலைமைச்செயலகம் இடம் பெற்றுள்ளது.

    விஜய் எந்த மாதிரியான அரசியலை முன்னெடுக்கப்போகிறார் என்று பலரும் கேள்விகளை அவரை நோக்கி வீசி வந்த சூழலில், மாநாட்டு திடலில் இடம் பெற்றுள்ள கட்-அவுட்கள் பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

    மாநாட்டு திடலில் சுமார் ஒரு லட்சம் பேர் அமர்ந்து பார்க்கும் வகையில் இருக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இந்நிலையில், பிரம்மாண்டமாக காட்சி அளிக்கும் மாநாட்டு திடலில் அதிகாலை முதலே பல்வேறு பகுதிகளில் இருந்து தொண்டர்கள் குவியத் தொடங்கியுள்ளனர்.

    மாநாட்டு திடலில் பல்லாயிரக்கணக்கானோர் குவிந்ததால், 10 மணிக்கு மேல் திடலுக்குள் அனுமதிக்கப்பட இருந்த நிலையில், முன்கூட்டியே தொண்டர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    Next Story
    ×