search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கேரள வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அமேசான் மூலம் உதவலாம்
    X

    கேரள வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அமேசான் மூலம் உதவலாம்

    கேரளாவில் கனமழை காரணமாக தொடர்ந்து நிலைமை மோசமடைந்து வரும் நிலையில், நிவாரணப் பொருட்களை அமேசான் மூலம் வழங்கும் வசதி சேர்க்கப்பட்டுள்ளது. #KeralaFloods #Amazon


    கேரளாவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக வெள்ளம் மற்றும் நிலச்சரிவு பாதிப்புகளில் சிக்கி இதுவரை 324 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் வெள்ளத்தில் சிக்கியுள்ள நிலையில், மீட்பு பணிகள் ஒருபுறம் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களை கண்டறியவும், காணாமல் போனவர்கள் பற்றி அறிந்து கொள்ளவும், கூகுள் சா்ர்பில் பெர்சன் ஃபைன்டர் டூல் ஆக்டிவேட் செய்யப்பட்ட நிலையில், ஃபேஸ்புக் தரப்பில் சேஃப்டி செக் எனேபிள் செய்யப்பட்டுள்ளது. இதுதவிர டெலிகாம் நிறுவனங்கள் சார்பில் இலவச சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

    இந்நிலையில், அமேசான் இந்தியா சார்பில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டிருப்போருக்கு உதவ பிரத்யேக வலைப்பக்கம் துவங்கப்பட்டுள்ளது. அமேசான் இந்தியா சார்பில் மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்பு குழுவினருடன் இணைந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுகிறது. அமேசான் இந்திய முகப்பு பக்கத்தில் கேரள வெள்ள பாதிப்புக்கு உதவக்கோரும் பேனர் இடம்பெற்றிருக்கிறது.



    இதனை க்ளிக் செய்ததும், மூன்று தொண்டு நிறுவனங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன, இதைத் தொடர்ந்து அதிக முக்கியத்துவம் வாய்ந்த பொருட்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. இவற்றில் உணவு பொருட்கள், அத்தியாவசிய பொருட்கள் உள்ளிட்டவை இடம்பெற்றிருக்கிறது. பொருட்களை கார்ட்டில் சேர்த்து, முகவரி பகுதியில் தொண்டு நிறுவன முகவரியை பதிவிட்டு பணம் செலுத்த வேண்டும். 

    பணம் செலுத்தியதும் அமேசான் சார்பில் பொருட்கள் கேரளாவில் விநியோகம் செயய்ப்படும், அங்கிருந்து தொண்டு நிறுவனங்கள் சார்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவை ஒப்படைக்கப்படும். 

    கேரளாவில் வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் மக்களை மீட்க 23 ஹெலிகாப்டர்களும், 200 படகுகளும் பணியில் ஈடுபட்டுள்ள நிலையில், உள்ளூர் மீனவர்களும் தங்களது படுகுகளை கொண்டு மீட்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். #KeralaFloods #Amazon
    Next Story
    ×