search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உலக மக்கள் எப்போதும் பயன்படுத்தும் செயலி இது தானாம்
    X

    உலக மக்கள் எப்போதும் பயன்படுத்தும் செயலி இது தானாம்

    உலகளவில் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோரிடம் நடத்தப்பட்ட ஆய்வில், உலக மக்கள் அதிகம் பயன்படுத்தும் செயலி சார்ந்த விவரங்கள் வெளியாகியுள்ளது. #Apps


    உலகளவில் அதிகம் பயன்படுத்தப்படும் செயலிகள் குறித்து ஃபோர்ப்ஸ் சமீபத்தில் ஒரு அறிக்கையை வெளியிட்டது. ஆப்டோப்பியா எனும் அமெரிக்க நிறுவனம் வெளியிட்ட தகவல்களின் படி கடந்த மூன்று மாதங்களில் உலக மக்கள் வாட்ஸ்அப் செயலியை மட்டும் சுமார் 8500 கோடி நிமிடங்கள் பயன்படுத்தியுள்ளனர். இதேபோன்று ஃபேஸ்புக் செயலியை சுமார் 3000 கோடி நிமிடங்கள் பயன்படுத்தி இருக்கின்றனர். 

    உலகளவில் குறுந்தகவல் அனுப்ப மக்கள் அதிகம் பயன்படுத்தும் செயலியாக வாட்ஸ்அப் இருப்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை என ஆப்டோப்பியா செய்தி தொடர்பாளர் ஆடம் பிளாக்கர் தெரிவித்தார். தகவல் பரிமாற்ற செயலிகளில் மக்கள் அதிக நேரம் செலவழித்து உள்ளனர் என பிளாக்கர் மேலும் தெரிவித்தார்.



    உலகில் அதிகம் பயன்படுத்தப்பட்ட டாப் 10 செயலிகள் பட்டியல் பின்வருமாறு..,

    வாட்ஸ்அப், வீசாட், ஃபேஸ்புக், மெசன்ஜர், பன்டோரா, யூடியூப், இன்ஸ்டாகிராம், ட்விட்டர், கூகுள் மேப்ஸ் மற்றும் ஸ்பாடிஃபை போன்ற செயலிகளை மக்கள் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர்.

    இந்த அறிக்கையில் சீனாவின் மூன்றாம் தரப்பு ஆன்ட்ராய்டு ஆப் ஸ்டோர்கள் கணக்கில் சேர்க்கப்படவில்லை. ஒருவேளை சேர்க்கப்பட்டிருந்தால் வீசாட் மற்றும் சீனாவை சேர்ந்த செயலிகள் முன்னணி இடங்களை பிடித்திருக்கும். எனினும் வீசாட் செயலி இரண்டாவது இடம் பிடித்துள்ளது.

    அதிக நேரம் பயன்படுத்தப்பட்ட பத்து செயலிகளில் ஃபேஸ்புக் மெசன்ஜர், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் போன்றவை இடம்பிடித்திருக்கின்றன. கூகுளின் யூடியூப் மற்றும் கூகுள் மேப்ஸ் போன்றவையும் அதிகம் பயன்படுத்தப்படும் செயலிகளில் முதன்மை இடம் பிடித்துள்ளன.

    கேம்களை பொருத்த வரை கிளாஷ் ஆஃப் கிளான்ஸ் 3.83 பில்லியன் மணி நேரம் விளையாடப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மை டாக்கிங் டாம், கேன்டி கிரஷ் சாகா, ஃபோர்ட்நைட், லார்ட்ஸ் மொபைல், சப்வே சர்ஃபர்ஸ், ஹெலிக்ஸ் ஜம்ப், ஸ்லிதர்.ஐஒ, பப்ஜி மொபைல் மற்றும் ஃபிஷ்டம் உள்ளிட்டவை அதிகம் விளையாடப்படுகின்றன.
    Next Story
    ×