search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    அது மட்டும் முடியாது - மத்திய அரசுடன் மல்லுக்கட்டும் வாட்ஸ்அப்

    மத்திய அரசு விதித்த கோரிக்கைகளை ஏற்றுக் கொள்வதாகவும், ஆனால் அது மட்டும் முடியாது என வாட்ஸ்அப் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. #WhatsApp


    வாட்ஸ்அப் செயலி தவறாக பயன்படுத்தப்படுவது குறித்து பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வாட்ஸ்அப் நிறுவனம் இந்திய சட்ட அமைப்புகளுடன் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என மத்திய தகவல் தொழில்நுட்ப மந்திரி ரவி சங்கர் பிரசாத் சில தினங்களுக்கு முன் தெரிவித்தார்.

    இந்தியா வந்திருந்த வாட்ஸ்அப் தலைமை செயல் அதிகாரி க்ரிஸ் டேனியல்ஸ் சில தினங்களுக்கு மத்திய தகவல் தொழில்நுட்ப மந்திரி ரவி சங்கர் பிரசாத்தை சந்தித்தார். சந்திப்புக்கு பின் பேசிய மத்திய மந்திரி வாட்ஸ்அப் தளம் தவறாக பயன்படுத்தப்படுவதை குறைக்க புதிய சட்டம் மற்றும் வழிமுறைகளை கண்டறியப்பட வேண்டும் என தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில் மத்திய அரசு கோரிக்கைகளை பரிசீலனை செய்வதாக தெரிவித்திருந்த வாட்ஸ்அப் தற்சமயம் பதில் அளித்திருக்கிறது. அதன்படி மத்திய அரசு கேட்டுக்கொண்ட அனைத்து அம்சங்களையும் ஏற்றுக் கொள்கிறோம், எனினும் குறுந்தகவல்களை டிராக் செய்ய அனுமதி வழங்க முடியாது என வாட்ஸ்அப் தெரிவித்துள்ளது.


    கோப்பு படம்

    பயனரின் விவரங்கள் முழுமையாக என்க்ரிப்ட் செய்யப்பட்டுள்ளது என்பதால் அவற்றை அரசிடம் வழங்க முடியாது என வாட்ஸ்அப் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வாட்ஸ்அப் செயலி சார்ந்த வல்லுநர்கள் கூறும் போது, பயனர்களின் சில விவரங்கள் மட்டும் ஆஃப்லைன் சேவை வழங்கும் நோக்கில் கேச் செய்யப்படுகிறது, எனினும் இவை அந்நிறுவன சர்வர்களில் பதிவு செய்யப்படுவதில்லை என தெரிவித்துள்ளனர்.

    இந்த தகவல் பயனரின் சாதனத்தில் ஸ்டோர் செய்யப்படுகிறது. மத்திய அரசு சார்பில் கேட்கப்படும் டீக்ரிப்ஷன் வழிமுறை வாட்ஸ்அப் மட்டுமின்றி கூகுள் மற்றும் ஆப்பிள் நிறுவன குறுந்தகவல் சேவைகளை முழுமையாக மாற்ற வேண்டியிருக்கும் என கூறப்படுகிறது. இந்திய அதிகாரிகள் டீப்ரிஷன் வழங்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

    உலகில் வாட்ஸ்அப் சேவையை அதிகம் பயன்படுத்தும் நாடாக இந்திய இருக்கிறது. வாட்ஸ்அப் செயலியில் யு.பி.ஐ. சார்ந்து பண பரிமாற்ற வசதி, விளம்பரதாரர்களுக்கான சேவை வழங்குவது குறித்த பணிகளில் வாட்ஸ்அப் ஈடுபட்டுள்ளது. எனினும் இவற்றின் அறிமுக தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை.
    Next Story
    ×