search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதிய ஐபோன்களில் டூயல் சிம் எப்படி வேலை செய்கிறது தெரியுமா?
    X

    புதிய ஐபோன்களில் டூயல் சிம் எப்படி வேலை செய்கிறது தெரியுமா?

    ஐபோன்களில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட டூயல் சிம் வசதி 2018 ஐபோன் மாடல்களில் வழங்கப்பட்டுள்ளது. இந்த அம்சம் எப்படி வேலை செய்யும் என்பதை தொடர்ந்து பார்ப்போம். #iPhoneXS



    ஆப்பிள் ஐபோன்களில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட டூயல் சிம் வசதி 2018 ஐபோன் மாடல்களில் வழங்கப்பட்டுள்ளது. ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் பொதுவான அம்சமாக டூயல் சிம் வசதி இருக்கிறது. முன்னதாக டூயல் சிம் வசதி மிட்ரேன்ஜ் மற்றும் ஃபிளாக்ஷிப் மாடல்களில் மட்டும் வழங்கப்பட்ட நிலையில், ஹூவாய், சாம்சங், எல்ஜி, ஒன்பிளஸ் போன்றவை தங்களது ஃபிளாக்ஷிப் மாடல்களிலும் டூயல் சிம் ஸ்லாட் வழங்க துவங்கின.

    ஐபோன் மாடல்களில் நீண்ட காலமாக வழங்கப்படாத அம்சமாக இருந்தது. இந்நிலையில், ஆப்பிள் அறிமுகம் செய்திருக்கும் ஐபோன் XS, ஐபோன் XS மேக்ஸ் மற்றும் ஐபோன் XR மாடல்களில் டூயல் சிம் வசதி வழங்கியுள்ளது. முன்னதாக ஐபேட் ஏர் 2 செல்லுலார் மாடலில் ஆப்பிள் சிம் வழங்கப்பட்டு இருந்தது.



    ஆப்பிள் சிம் கொண்டு பயனர்கள் சிம் கார்டு இல்லாமலேயே நெட்வொர்க்களை மாற்றிக் கொள்ள முடியும். ஐபேட் ப்ரோ மாடல்களில் எம்பெட் செய்யப்பட்ட சிம் அல்லது இசிம் வசதி வழங்கப்படுகிறது. இதேபோன்று ஆப்பிள் வாட்ச் 3 செல்லுலார் மாடலிலும் இசிம் தொழில்நுட்பம் வழங்கப்பட்டது. இதில் நெட்வொர்க் சேவை வழங்குவோரிடம் டேட்டா திட்டத்தை ஆக்டிவேட் செய்து கொள்ள முடியும். இதைகொண்டு ஐபோன் அருகில் இல்லாமலும் அழைப்புகளை மேற்கொள்ள முடியும்.

    அந்த வகையில் இம்முறை இசிம் தொழில்நுட்பம் புதிய ஐபோன்களில் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி ஒரு நானோ-சிம் கார்டு ஸ்லாட் மற்றொரு இசிம் மென்பொருள் அப்டேட் மூலம் இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியிடப்படும் என ஆப்பிள் தெரிவித்துள்ளது. மொபைல் போன்களில் இசிம் தொழில்நுட்பம் புதிதான ஒன்றாகும். தற்சமயம் இந்த தொழில்நுட்பம் பத்து நாடுகளில் உள்ள நெட்வொர்களில் மட்டுமே வேலை செய்கிறது.



    புதிய ஐபோன்களில் டூயல் சிம் வசதி

    ஆப்பிள் அறிமுகம் செய்திருக்கும் ஐபோன் XS, ஐபோன் XS மேக்ஸ் மற்றும் ஐபோன் XR மாடல்களில் டூயல் சிம் வசதி வழங்கப்பட்டுள்ளது. 

    அனைத்து ஐபோன் மாடல்களும் ஆப்பிளின் ஏ12 பயோனிக் சிப் மற்றும் இன்டெல் மோடெம் கொண்டிருப்பதால், இந்த வசதி சாத்தியமாகி இருக்கிறது.



    இசிம் என்றால் என்ன?

    வழக்கமாக நம்மிடையே பயன்பாட்டில் இருக்கும் சிம் கார்டுகள் மினி, மைக்ரோ மற்றும் நானோ என வெவ்வேறு அளவுகளில் கிடைக்கிறது. இசிம்கள் புரோகிராம் மூலம் எம்பெட் செய்யப்பட்ட சிம் கார்டுகள் ஆகும். இவற்றை கொண்டு வழக்கமான சிம் ஸ்லாட்டை எடுத்து மெல்லிய சாதனங்களை வடிவமைக்க முடியும். 

    இதன் மூலம் டெலிகாம் நெட்வொர்க் அலுவலகம் சென்று சிம் கார்டை இன்ஸ்டால் செய்ய வேண்டிய அவசியமும் ஏற்படாது. ஆப்பிள் நிறுவனத்திற்கு முன் சாம்சங் மற்றும் எல்ஜி போன்ற நிறுவனங்கள் ஏற்கனவே இசிம்களை தங்களது சாதனங்களில் ஏற்கனவே வழங்கி இருக்கின்றன. 



    பிரைமரி மற்றும் இரண்டாவது நம்பர்கள் எவ்வாறு இயங்கும்?

    ஐபோன் XS, ஐபோன் XS மேக்ஸ் மற்றும் ஐபோன் XR மாடல்களில் இரண்டு நம்பர்கள் எவ்வாறு இயங்கும் என ஐ.ஓ.எஸ். 12 தளத்தில் மேற்கொள்ளப்பட்டு இருக்கும் மாற்றங்களை ஆப்பிள் தெரிவித்துள்ளது. புதிய ஐபோன்களை வாங்கும் போதே முதல் சிம் ஸ்லாட்டில் நானோ சிம் கார்டும், இரண்டாவது இசிம் கொண்டிருக்கிறது. இசிம் சேவையை ஆக்டிவேட் செய்வது எளிமையான காரியம் தான். 

    சிம் பயன்பாட்டை மாற்ற நினைக்கும் வாடிக்கையாளர்கள் இசிம் சேவையை பிரைமரி சிம் போன்று மாற்றிக் கொள்ள முடியும். எனினும் இதற்கு நெட்வொர்க் சப்போர்ட் வழங்க வேண்டும். 

    பிரைமரி சிம் கொண்டு வாய்ஸ், எஸ்.எம்.எஸ்., டேட்டா, ஐமெசேஜ் மற்றும் ஃபேஸ் டைம் போன்றவற்றை பயன்படுத்த முடியும். இரண்டாவது சிம் கொண்டு வாய்ஸ் மற்றும் எஸ்.எம்.எஸ். மட்டுமே பயன்படுத்த முடியும். 

    இரண்டாவது சிம் சேவையை டீஃபால்ட் லைனில் வைத்தால், இரண்டாவது நம்பர் கொண்டு வாய்ஸ், எஸ்.எம்.எஸ்., டேட்டா, ஐமெசேஜ் மற்றும் ஃபேஸ் டைம் போன்றவற்றை பயன்படுத்தலாம். இவ்வாறு செய்யும் போது பிரைமரி சேவையில் வாய்ஸ் மற்றும் எஸ்.எம்.எஸ். மட்டுமே பயன்படுத்த முடியும்.



    டூயல் சிம் டூயல் ஸ்டான்ட்பை எவ்வாறு வேலை செய்யும்?

    டூயல் சிம் டூயல் ஸ்டான்ட்பை அல்லது DSDS சேவையை கொண்டு அழைப்புகளை மேற்கொள்வது, பெறவது மற்றும் டேட்டா உள்ளிட்டவற்றை எந்த சிம் கொண்டும் பயன்படுத்த முடியும். ஆனால் ஒரே நேரத்தில் ஒரு நம்பரில் இருந்து மட்டுமே அழைப்புகளை மேற்கொள்ள முடியும். 

    பிரைமரி நம்பர் கொண்டு அழைப்புகளை மேற்கொள்ளும் போது, இரண்டாவது எண்ணிற்கு அழைப்புகள் வரும் பட்சத்தில் ரிங் ஆகாமல் அழைப்பு வாய்ஸ்மெயிலுக்கு அனுப்பப்படும். இதேபோன்று டேட்டாவும் ஒரு சமயத்தில் ஒரு சிம் கொண்டு மட்டுமே பயன்படுத்த முடியும். 

    டூயல் வோல்ட்இ வேலை செய்யுமா?

    புதிய ஐபோன் மாடல்களில் டூயல் வோல்ட்இ வசதி மென்பொருள் அப்டேட் மூலம் பின்னர் வழங்கப்படும் என்றும் இந்த சேவை தேர்வு செய்யப்பட்ட நெட்வொர்க்களில் மட்டுமே வேலை செய்யும் என ஆப்பிள் தெரிவித்துள்ளது.

    உண்மையில் டூயல் சிம் வசதியை வழங்க ஆப்பிள் அதிக நேரம் எடுத்துக் கொண்டிருக்கிறது. எனினும் இந்த அம்சம் ஆப்பிள் பிரியர்களுக்கு சுவாரஸ்ய அனுபவமாக இருக்கும்.
    Next Story
    ×