search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வாடிக்கையாளர் விவரங்கள் வாரியிறைக்கப்பட்ட விவகாரம் - ஃபேஸ்புக் சொல்வது என்ன?
    X

    வாடிக்கையாளர் விவரங்கள் வாரியிறைக்கப்பட்ட விவகாரம் - ஃபேஸ்புக் சொல்வது என்ன?

    ஃபேஸ்புக் வாடிக்கையாளர்களின் விவரங்கள் மூன்றாம் தரப்பு நிறுவனங்களுக்கு முன் அனுமதியின்றி வழங்கியதாக எழுந்த குற்றச்சாட்டிற்கு ஃபேஸ்புக் தரப்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது. #Facebook #socialmedia



    ஃபேஸ்புக் சேவையை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் மற்றும் அவர்களது நண்பர்களின் விவரங்களை இயக்க அமேசான், மைக்ரோசாப்ட், நெட்ஃப்ளிஸ்க்ஸ், ஸ்பாடிஃபை போன்ற சுமார் 150 நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கி இருப்பதாக வெளியான தகவல்களை ஃபேஸ்புக் மறுத்துள்ளது. 

    சமீப காலங்களில் இதுபோன்ற பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொண்டு வரும் ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு எதிராக மற்றொரு சர்ச்சை கிளம்பிய நிலையில், அந்நிறுவனத்தின் கான்ஸ்டான்டினொஸ் பாபமில்டியாடிஸ் விளக்கம் அளித்துள்ளார்.



    அதில் அவர் கூறியிருப்பதாவது,

    தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்கள் ஃபேஸ்புக் இன்டகிரேஷன் பார்ட்னர்கள் சம்பந்தப்பட்டதாகும். இவ்வாறு ஃபேஸ்புக் சார்பில் ஒப்பந்தம் செய்யப்பட்ட நிறுவனங்களுக்கு பயனரின் அனுமதியின்றி அவர்களின் தகவல்களை பயன்படுத்தும் உரிமை அல்லது அனுமதி வழங்கப்படவில்லை. மேலும் இந்த ஒப்பந்தங்கள் எவற்றிலும், அமெரிக்க ஃபெடரல் வர்த்தக கமிஷன் விதித்த 2012 தனியுரிமை கொள்கைகளை மீறவில்லை என தெரிவித்தார். 

    இவரைத் தொடர்ந்து ஃபேஸ்புக் நிறுவனத்தின் ஒப்பந்தங்கள் பிரிவு துணை தலைவர் ஐம் ஆர்ச்சிபொங் தன் தரப்பு விளக்கத்தை வலைத்தளத்தில் பதிவு செய்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது,



    ஃபேஸ்புக் வாடிக்கையாளர்களின் அனுமதியின்றி அவர்களது தனிப்பட்ட குறுந்தகவல்கள் ஃபேஸ்புக் ஒப்பந்தம் செய்த நிறுவனங்களுடன் பகிர்ந்து கொள்ளப்படவில்லை. ஃபேஸ்புக் சேவையை மேம்படுத்தும் வகையில், நான்கு நிறுவனங்களுக்கு மெசேஜிங் அம்சங்களை பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டது. எனினும், இது ஃபேஸ்புக் மூலம் லாக் இன் செய்தவர்களுக்கு மட்டுமே பொருந்தும். 

    இந்த வழிமுறை தொழில்நுட்ப துறையில் பொதுவான ஒன்று தான். இது அமேசான் அலெக்சா சேவையில் மின்னஞ்சல்களை வாசிக்க அனுமதி அளிப்பதை போன்றே செயல்படும். விவரங்கள் மட்டுமின்றி, பயனர்கள் ஸ்பாட்டிஃபை மூலம் கேட்பவற்றை தங்களின் நண்பர்களுக்கு குறுந்தகவல் வடிவில் அனுப்ப முடியும். இதே அம்சம் நெட்ஃப்ளிக்ஸ், டிராப் பாக்ஸ் உள்ளிட்ட சேவைகளுக்கும் பொருந்தும்.



    மேலே குறிப்பிடப்பட்டுள்ள நிறுவனங்களுக்கு “ரைட் அக்சஸ்” (Write access) எனும் வழிமுறைக்கான அனுமதி மட்டும் வழங்கப்பட்டது. இந்த அம்சம் வழங்கினால் மட்டுமே பயனர்களால் தங்களது நண்பர்களுக்கு குறுந்தகவல் அனுப்ப முடியும். இதேபோன்று “ரீட் அக்சஸ்” (Read access) வழங்கினால் தான் பயனர்களால் குறுந்தகவல்களை படிக்க முடியும். இத்துடன் பயனர்களுக்கு “டெலீட் அக்சஸ்” (Delete access) கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.

    இதனால் பயனர்கள் குறுந்தகவல்களை அழித்ததும், அவை ஃபேஸ்புக்கில் இருந்தும் அழிக்கப்பட்டு விடும். ஃபேஸ்புக்கில் இருக்கும் எவ்வித செயலியோ அல்லது ஒப்பந்த நிறுவனமோ வாடிக்கையாளர்களின் அனுமதியின்றி அவர்களது விவரங்களை இயக்க முடியாது என அவர் தெரிவித்தார்.
    Next Story
    ×