search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மெசேஜஸ் செயலியில் புதிய வசதி - ட்ரூகாலர் போன்று களத்தில் குதித்த கூகுள்
    X

    மெசேஜஸ் செயலியில் புதிய வசதி - ட்ரூகாலர் போன்று களத்தில் குதித்த கூகுள்

    கூகுளின் மெசேஜஸ் செயலியில் ட்ரூகாலர் செயலியில் வழங்கப்பட்டு இருப்பதை போன்று ஸ்பேம் குறுந்தகவல்களை கண்டறியும் வசதி வழங்கப்படுகிறது. #Google #Messages



    ஆண்ட்ராய்டு இயங்குதளத்தின் மெசேஜஸ் செயலியில் ஸ்பேம் பாதுகாப்பு அம்சத்தை வழங்கும் பணிகளில் கூகுள் ஈடுபட்டு வந்தது. இந்நிலையில், புதிய அம்சம் சில பயனர்களுக்கு வழங்கப்படுவதாகவும் வரும் நாட்களில் இந்த அம்சம் அனைவருக்கும் வழங்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

    புதிய அம்சம் சர்வெர் சார்ந்து வெளியிடப்படுவதால், ஸ்பேம் பாதுகாப்பு வசதி சிலருக்கு மட்டும் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. இது பயனர்களுக்கு நோட்டிஃபிகேஷன் வடிவில் வழங்கப்படுகிறது. 

    புதிய ஸ்பேம் ப்ரோடெக்‌ஷன் ஆப்ஷனை ஆக்டிவேட் செய்ய பயனர்கள் செட்டிங்ஸ் -- அட்வான்ஸ்டு செட்டிங்ஸ் -- ஸ்பேம் ப்ரோடெக்‌ஷன் -- எனேபிள் ஸ்பேம் ப்ரோடெக்‌ஷன் உள்ளிட்ட ஆப்ஷன்களை செயல்படுத்த வேண்டும். இவ்வாறு செய்ததும் உங்களுக்கு போலி குறுந்தகவல்கள் வரும் போது இந்த அம்சம் அவற்றை கண்டறிந்து தெரிவிக்கும்.



    தனியுரிமை தரப்பில் இந்த அம்சம் எவ்வாறு இயங்கும் என்ற விவரங்கள் கூகுளின் சப்போர்ட் வலைத்தளத்தில் பதிவிடப்பட்டு இருந்தது. அதில், இந்த அம்சம் செயல்படுத்தியதும் செயலிக்கு வரும் குறுந்தகவல்களின் சில விவரங்கள் கூகுளுக்கு அனுப்பப்படும். எனினும் கூகுளுக்கு அனுப்பப்படும் குறுந்தகவல் படிக்கப்படாது. 

    இந்த ஆப்ஷன் பின்னணியில் எவ்வாறு இயங்குகிறது என்பது பற்றி தெளிவான விவரங்கள் வெளியிடப்படவில்லை. எனினும், ஸ்பேம் அறிக்கையில் குறிப்பிட்ட குறுந்தகவல் முழுமையாக கூகுளுக்கு அனுப்பப்படுகிறது. இதில் குறுந்தகவலை அனுப்பியவர் மற்றும் அதனை பெறுபவரின் மொபைல் நம்பர் உள்ளிட்ட விவரங்கள் அடங்கியிருக்கும்.

    அனைவருக்கும் வழங்கப்படும் போது இந்த அம்சம் எந்தளவு பயனுள்ளதாக இருக்கும் என்பதை தெளிவாக புரிந்து கொள்ள முடியும். எனினும், நீங்கள் பரிமாறிக் கொள்ளும் குறுந்தகவல்கள் பற்றி கவலை கொள்ளும் பட்சத்தில் இந்த அம்சத்தை செயல்படுத்தாமல் இருப்பது நல்லது.
    Next Story
    ×