search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    வெறுப்பு.. இனவெறி.. வெறியாட்டம் - இங்கிலாந்து வன்முறையில் 1000 பேர் கைது - முழு பின்னணி!
    X

    வெறுப்பு.. இனவெறி.. வெறியாட்டம் - இங்கிலாந்து வன்முறையில் 1000 பேர் கைது - முழு பின்னணி!

    • இந்தியர்கள் உட்பட அங்கு குடியேறியுள்ளவர்களுக்கு எதிரான இனவெறி கருத்துக்கள் பொதுவெளியில் உலா வந்தது.
    • வதந்திகள் மூலம் வெறுப்பைப் பரப்பும் வலதுசாரி அமைப்புகளை பிரதமர் கெயர் ஸ்டார்மர் எச்சரித்தார்.

    சவுத்போர்ட் கொலைகள்

    இங்கிலாந்தின் வட மேற்கு பகுதியில் உள்ள சவுத்போர்ட்[Southport] நகரில் கடந்த ஜூலை 29 ஆம் தேதி நடன வகுப்பை முடித்து வெளியே வந்த சிறுமிகள் மீது மர்ம நபர் கத்தியால் கண்மூடித்தனமாக தாக்கியதில் 3 சிறுமிகள் உயிரிழந்தனர். இறந்த சிறுமிகளுக்கு முறையே, 9, 7, மற்றும் 6 வயது இருக்கும். மேலும் 10 சிறுமிகள் கத்திக்குத்தில் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது.

    வெறுப்பு - வன்முறை - வெறியாட்டம்

    இதைத்தொடர்ந்து இங்கிலாந்தில் குடிபெயர்ந்த இஸ்லாமியர் ஒருவர் தான் இளம்பெண்களை கொன்றார் என்று பரவிய வதந்தியால் நாடு முழுவதும் வன்முறை வெடித்தது. இந்த வன்முறைகளை முன்னெடுத்துச் சென்ற அந்நாட்டின் தீவிர வலதுசாரி அமைப்புகள், நாட்டில் அசாதாரண சூழ்நிலையை உருவாக்கினர். ஆனால் சிறுமிகளை தாக்கிய 17 வயது இங்கிலாந்து சிறுவன் பிடிபட்ட நிலையில் அவன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டான். ஆனால் நாட்டில் நடந்து வந்த வன்முறையோ கையை மீறி சென்றுகொண்டிருந்தது.

    இணையத்தில் இனவெறி

    நாடு முழுக்க ஆசியர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் மீதான வெறுப்பு சமூக வலைதளங்களின் மூலம் திட்டமிட்டு பரப்பப்பட்டது. இதனால் இந்தியர்கள் உட்பட அங்கு குடியேறியுள்ளவர்களுக்கு எதிரான இனவெறி கருத்துக்கள் பொதுவெளியில் உலா வந்தது. வதந்திகள் மூலம் வெறுப்பைப் பரப்பும் வலதுசாரி அமைப்புகளை பிரதமர் கெயர் ஸ்டார்மர் எச்சரித்தார். இந்நிலையில் கடந்த 2 வாரங்களாக நடந்து வந்த கலவரத்தை போலீஸ் ஓரளவு கட்டுக்குள் கொண்டுவந்துள்ளது.

    நாடு முழுவதும் வன்முறைகளில் ஈடுபட்ட, இணையத்தில் இனவெறி கருத்துக்களையும் வெறுப்பையும் பரப்பிய, கலவரத்தோடு தொடர்புடைய சுமார் 1000 பேரை இங்கிலாந்து போலீஸ் கைது செய்துள்ளது. அவர்களில் சுமார் 575 ஓர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் விரைவில் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த உள்ளதாக நேற்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    Next Story
    ×