என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உலகம்
ஆப்கானிஸ்தானில் ரஷிய தூதரகம் அருகே குண்டுவெடிப்பு - 2 அதிகாரிகள் உள்பட 20 பேர் பலி
- ஆப்கானிஸ்தானில் ரஷிய தூதரகம் அருகே குண்டு வெடிப்பு தாக்குதல் நடந்தது.
- இந்த தாக்குதலில் 2 தூதரக அதிகாரிகள் உள்பட 20 பேர் உயிரிழந்தனர்.
காபூல்:
ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகர் காபூல் நகரில் இருந்து தென்மேற்கில் ரஷிய தூதரகம் அமைந்த பகுதியருகே தருலாமன் சாலையில் இன்று காலை 11 மணி அளவில் திடீரென குண்டு வெடித்தது.
தூதரகத்திற்கு வெளியே விசாக்களைப் பெறுவதற்காக வரிசையில் காத்திருந்த மக்களில் பலர் பலியாகி இருக்கலாம் என முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.
இந்நிலையில், குண்டுவெடிப்பில் 2 ரஷிய தூதர்கள் உள்பட 20 பேர் உயிரிழந்துள்ளனர் என ரஷிய அரசு தொடர்புடைய ஊடகம் தகவல் தெரிவித்துள்ளது.
ரஷிய தூதரகத்தில் தாக்குதல் நடத்துவதற்கு வந்த அடையாளம் தெரியாத பயங்கரவாதியை கண்டறிந்த பாதுகாவலர்கள் அவரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதையடுத்து அந்த மர்ம நபர் வெடிகுண்டை வெடிக்கச் செய்திருக்கலாம் என அந்த ஊடகம் தெரிவித்துள்ளது.
கடந்த 2 நாட்களுக்கு முன் ஆப்கானிஸ்தானில் வடமேற்கு பகுதியில் வெள்ளிக்கிழமை மசூதியில் நடந்த தாக்குதலில் 20 பேர் உயிரிழந்தனர்.
தொடர் குண்டு வெடிப்பு தாக்குதலால் பலர் உயிரிழந்துள்ளது உலக நாடுகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.