search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    சீனாவில் போலியாக செயல்பட்டு வந்த 30 கல்லூரிகள் மீது அரசு நடவடிக்கை
    X

    சீனாவில் போலியாக செயல்பட்டு வந்த 30 கல்லூரிகள் மீது அரசு நடவடிக்கை

    சீனாவில் போலியாக செயல்பட்டு வந்த 30 கல்லூரிகள் மீது அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக அந்நாட்டின் ஜின்ஹூவான் என்ற செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
    பிஜீங் :

    சீனாவில் போலியாக செயல்பட்டு வந்த 30 கல்லூரிகள் மீது அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக அந்நாட்டின் ஜின்ஹூவான் என்ற செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

    சீனாவில் போலி கல்லூரிகள் குறித்த தகவல்களை அளிப்பதற்கான வலைதளத்தை சீன அரசு அறிவித்து இருந்தது. அந்த வலைதளத்தில் மின்னஞ்சல் மூலமாகவும், சமூக வலைதளங்கள் மூலமாகவும் போலி கல்லூரிகள் குறித்த தகவல்களை பொதுமக்கள் அனுப்பி வைக்கலாம் என கூறியிருந்தது.

    அதன் அடிப்படையில் அரசு இணையளத்தில் சுமார் 30 போலி கல்லூரிகளின் பெயர்கள் இடம் பெற்றுள்ளது. அதில் பல புகழ் பெற்ற கல்லூரிகளின் பெயர்கள் போலியாக இயங்கி வருவது தெரியவந்ததையடுத்து, அந்த கல்லூரிகளுக்கு எதிராக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக அந்நாட்டின் ஜின்ஹூவான் என்ற செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

    சீனாவில் கடந்த 2013-ம் ஆண்டு முதல் 400 போலி கல்லூரிகள் இந்த வலைதளம் மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளது.
    Next Story
    ×