search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    20 ஆண்டுக்கு பிறகு அமெரிக்கா சென்ற வடகொரியா அதிகாரி
    X

    20 ஆண்டுக்கு பிறகு அமெரிக்கா சென்ற வடகொரியா அதிகாரி

    அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பும், கிம்ஜாங் உன்னும் சந்தித்து பேச உள்ள நிலையில் 20 ஆண்டுகளுக்கு பிறகு வட கொரியா அதிபர் அமெரிக்கா சென்றுள்ளார்.#Trump #KimJongUn
    வாஷிங்டன்:

    அமெரிக்காவும், வட கொரியாவும் நிரந்தர பகை நாடுகளாக உள்ளன. அமெரிக்காவை அணுகுண்டு வீசி தாக்கப்போவதாக வடகொரியா அதிபர் கிம்ஜாங் உன் அடிக்கடி மிரட்டி வந்தார்.

    இந்த நிலையில் சீனா- தென்கொரியா நாடுகள் மேற்கொண்ட முயற்சிகள் காரணமாக கிம்ஜாங் உன் தனது மிரட்டல் போக்கை கைவிட்டு அமெரிக்காவுடன் சமரசமாக செல்ல முன் வந்தார்.

    வருகிற 12-ந் தேதி சிங்கப்பூரில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பும், கிம்ஜாங் உன்னும் சந்தித்து பேச உள்ளனர்.

    இது சம்பந்தமான முன்னேற்பாடுகள் தொடர்பாக பேசுவதற்காக வடகொரிய அதிபரின் உதவியாளர் கிம்யாங் சோல் அமெரிக்கா சென்றுள்ளார்.

    அவர் அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பேயை சந்தித்து பேசினார். அப்போது அவருக்கு அமெரிக்க வெளியுறவு மந்திரி விருந்து அளித்தார்.

    அமெரிக்கா- வட கொரியா மோதல் காரணமாக கடந்த 20 ஆண்டுகளாக வடகொரிய அதிகாரி யாரும் அமெரிக்கா சென்றதில்லை. 20 ஆண்டுகளுக்கு பிறகு கிம்யாங் சோல் அமெரிக்கா சென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.#Trump #KimJongUn
    Next Story
    ×