search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆப்கானிஸ்தானில் நன்கர்ஹார் மாகாணத்தில் மீண்டும் குண்டுவெடிப்பு  - 10 பேர் பலி
    X

    ஆப்கானிஸ்தானில் நன்கர்ஹார் மாகாணத்தில் மீண்டும் குண்டுவெடிப்பு - 10 பேர் பலி

    ஆப்கானிஸ்தான் நாட்டின் நன்கர்ஹார் மாகாணத்தில் இன்று மீண்டும் குண்டு வெடித்தது இதில், சுமார் 10 பேர் உடல் சிதறி பலியாகினர். #AfghanBlast #Taliban #Afghanceasefire
    காபூல் :

    இஸ்லாமிய நாடுகளில் ஒன்றான ஆப்கானிஸ்தானில் அரசு படைக்கும், தலிபான் பயங்கரவாதிகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. ரம்ஜானை முன்னிட்டு ஆப்கான் அரசு 5 நாள் போர் நிறுத்தமும் தாலிபான் அமைப்பினர் 3 நாள் போர் நிறுத்தமும் அறிவித்திருந்தனர்.

    ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்ட நேற்று ஆயுதங்கள் ஏதும் இன்றி ஆப்கன் தலைநகர் காபூலுக்கு வந்த தலிபான் அமைப்பினர் அங்கிருந்த அரசுப் படையினரை கட்டித்தழுவி ரம்ஜான் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.மேலும், பாதுகாப்பு படையினருடன் சேர்ந்து தலிபான்கள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

    இதற்கிடையே, நன்கர்ஹார் மாகாணத்துக்குட்பட்ட ரோடாட் மாவட்டத்தில் பகுதியில் தலிபான்கள், ராணுவத்தினர் மற்றும் பொதுமக்கள் குழுமியிருந்த பகுதியில் நேற்று திடீர் என காரில் இருந்து பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. இதில், சுமார் 36 பேர் உடல் சிதறி பலியாகினர். இந்த தாக்குதல் சம்பவத்துக்கு ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு பொறுபேற்றது.

    இந்நிலையில், அதே  நன்கர்ஹார் மாகாணத்தில் உள்ள கவர்னர் அலுவலகம் அருகே இன்று மீண்டும் குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதில், சுமார் 10 பேர் பரிதாபமாக உடல் சிதறி உயிரிழந்துள்ளனர். இந்த தாக்குதல் சம்பவத்துக்கு இதுவரை எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. #AfghanBlast #Taliban #Afghanceasefire
    Next Story
    ×