search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜெர்மனி அடுக்குமாடி குடியிருப்பில் வெடி விபத்து - 25 பேர் காயம்
    X

    ஜெர்மனி அடுக்குமாடி குடியிருப்பில் வெடி விபத்து - 25 பேர் காயம்

    ஜெர்மனி நாட்டின் உப்பர்ட்டால் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இன்று ஏற்பட்ட வெடி விபத்தில் 25 பேர் காயமடைந்தனர். #germanexplosion
    பெர்லின்:

    ஜெர்மனி நாட்டின் வடபகுதியில் உள்ள ரினே-வெஸ்ட்பாலியா மாநிலத்தின் உப்பர்ட்டால் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இன்று (உள்ளூர் நேரப்படி சனிக்கிழமை பின்னிரவு) பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது.

    இந்த விபத்தில் ஒரு வீட்டின் பெரும்பகுதி பெயர்ந்து கீழே விழுந்தது. கீழே நின்றிருந்த ஒரு கார் நிலைகுலைந்து சேதம் அடைந்தது. வெடி விபத்து ஏற்பட்ட வீட்டில் இருந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் 4 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    அருகாமையில் வசித்தவர்கள் உள்பட மொத்தம் 25 பேர் காயமடைந்ததாக தெரிவித்துள்ள போலீசார், இது பயங்கரவாத தாக்குதலா? அல்லது, எதிர்பாராத வகையில் ஏற்பட்ட வெடி விபத்தா? என்பது தொடர்பாக உடனடியாக உறுதிப்படுத்த இயலவில்லை என குறிப்பிட்டனர்.

    இந்த விபத்தின் எதிரொலியாக சில வீடுகள் தீபிடித்து எரிந்தன. தீயணைப்பு படையினர் நெடுநேரம் போராடி, தீ மேலும் பரவாதவாறு அணைத்து கட்டுப்படுத்தினர்.

    ஒரு பகுதியில் இடிபாடுக்குள்ளான அந்த அடுக்குமாடி கட்டிடம் முற்றிலுமாக இடிந்து விழுவதை தடுக்கும் நடவடிக்கையில் மீட்பு படையினரும், கட்டிட பொறியாளர்களும் ஈடுபட்டு வருகின்றனர். #germanexplosion #tamilnews
    Next Story
    ×