என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
66 வருடங்களாக விரல் நகத்தை வெட்டாத முதியவர் - இடது கை நிரந்தர ஊனமடைந்தது
Byமாலை மலர்12 July 2018 9:02 PM IST (Updated: 12 July 2018 9:02 PM IST)
விரல் நகங்களை 66 வருடங்களாக வெட்டாமல் இருந்த இந்தியரின் இடது கை நிரந்தர ஊனமடைந்துள்ளது.
வாஷிங்டன் :
மகாராஷ்டிரா மாநிலம், புனே நகரை சேர்ந்தவர் ஸ்ரீதர் சில்லால். தற்போது 88 வயதாகும் ஸ்ரீதர், கடந்த 1952-ம் ஆண்டுமுதல் தனது இடது கையில் நகத்தை வெட்டாமல், நீளமாக வளர்க்க ஆரம்பித்தார்.
இதன் விளைவாக கடந்த 66 ஆண்டுகளில் அவரது இடது கையில் உள்ள ஐந்து விரல்களிலும் வளர்ச்சி அடைந்துள்ள நகங்களின் ஒட்டுமொத்த வளர்ச்சி தற்போது 909.6 செண்டிமீட்டர்களாக உள்ளது. இதில் அவரது இடது கை கட்டை விரலில் உள்ள நகத்தின் வளர்ச்சி மட்டும் 197.8 செண்டிமீட்டர் ஆகும்.
இந்நிலையில் தனது விரல் நகத்தினை வெட்டுவதற்கு முன்வந்த அவரை ரிப்ளீஸ் பிலீவ் இட் ஆர் நாட் மியூசியம் இந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்கு அழைத்து சென்றது.
டைம்ஸ் சதுக்கத்தில் உள்ள இந்த மியூசியத்தில் சில்லாலின் நகங்களை வெட்டும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த விரல் நகங்கள், ஒரு 3 அடுக்கு கட்டிடத்தின் உயரமுடன் மொத்தம் 31 அடி நீளம் கொண்டுள்ளன என ரிப்ளீஸ் வெளியிட்டு உள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
சில்லால், தொடர்ந்து 66 வருடங்களாக நகங்களை வெட்டாமல் வளர்த்து வந்த நிலையில், அவை வளர வளர எடை கூடி அவரின் இடது கை நிரந்தர ஊனமடைந்தது. மூடிய நிலையில் இருந்து தனது கையை திறக்கவோ அல்லது விரல்களை வளைக்கவோ அவரால் முடியாது என தெரிவித்துள்ளது.

உலகிலேயே ஒரு கையில் மிக நீளமான நகத்தை கொண்டவர் என்ற முறையில் கடந்த 2016-ம் ஆண்டு கின்னஸ் சாதனை புத்தகத்தில் ஸ்ரீதர் சில்லால் இடம்பிடித்தார்.
இந்நிலையில் தனது விரல் நகத்தினை வெட்டுவதற்கு முன்வந்த அவரை ரிப்ளீஸ் பிலீவ் இட் ஆர் நாட் மியூசியம் இந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்கு அழைத்து சென்றது.
டைம்ஸ் சதுக்கத்தில் உள்ள இந்த மியூசியத்தில் சில்லாலின் நகங்களை வெட்டும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த விரல் நகங்கள், ஒரு 3 அடுக்கு கட்டிடத்தின் உயரமுடன் மொத்தம் 31 அடி நீளம் கொண்டுள்ளன என ரிப்ளீஸ் வெளியிட்டு உள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
சில்லால், தொடர்ந்து 66 வருடங்களாக நகங்களை வெட்டாமல் வளர்த்து வந்த நிலையில், அவை வளர வளர எடை கூடி அவரின் இடது கை நிரந்தர ஊனமடைந்தது. மூடிய நிலையில் இருந்து தனது கையை திறக்கவோ அல்லது விரல்களை வளைக்கவோ அவரால் முடியாது என தெரிவித்துள்ளது.
Next Story
×