search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மியான்மர் நாட்டில் பரிதாபம்: சுரங்கத்தில் நிலச்சரிவு - 27 பேர் பலி?
    X

    மியான்மர் நாட்டில் பரிதாபம்: சுரங்கத்தில் நிலச்சரிவு - 27 பேர் பலி?

    மியான்மர் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவால் 27 தொழிலாளர்கள் மண்ணோடு மண்ணாக புதைந்து விட்ட பரிதாப சம்பவம், ரவாங் கிறிஸ்தவ இன தொழிலாளர்கள் மத்தியில் மிகுந்த துயரத்தை ஏற்படுத்தி உள்ளது. #Myanmar #Landslide
    யாங்கூன்:

    மியான்மர் நாட்டின் வட பகுதியில் அமைந்து உள்ள காசின் மாகாணத்தில் நிறைய சுரங்கங்கள் உள்ளன. அந்த சுரங்கங்கள்தான் சுமார் 70 ஆயிரம் ‘ரவாங்’ கிறிஸ்தவ இன தொழிலாளர்களின் வாழ்வாதாரமாக உள்ளன.

    இந்த நிலையில் அங்கு செட் மூ என்ற இடத்தில் உள்ள மாணிக்க கல் சுரங்கத்தில் நேற்றுமுன்தினம் (செவ்வாய்க்கிழமை) தொழிலாளர்கள் மாணிக்க கற்களை வெட்டி எடுக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது பெய்த மழையினால் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது.

    இதில் சுரங்கத்தில் மாணிக்க கற்களை வெட்டி எடுக்கும் பணியில் ஈடுபட்டு இருந்த 27 தொழிலாளர்கள் மண்ணோடு மண்ணாக புதைந்து விட்டனர். அவர்கள் அனைவரும் பலியாகி விட்டதாக அஞ்சப்படுகிறது. அங்கு தொடர்ந்து மழை பெய்து வருவதால் மீட்பு பணியில் சுணக்கம் ஏற்பட்டு உள்ளதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.



    இந்த பரிதாப சம்பவம் குறித்து உள்ளூர் போலீஸ் அதிகாரி ஜின் கியாவ் நேற்று கூறும்போது, “இன்னும் ஒருவரது உடலைக் கண்டுபிடிக்க முடியவில்லை. செஞ்சிலுவை சங்கத்தினர், தீயணைப்பு படையினரின் துணையுடன் மீண்டும் மீட்புப்பணிகளை தொடங்க உள்ளோம்” என்றார். சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவால் 27 தொழிலாளர்கள் மண்ணோடு மண்ணாக புதைந்து விட்ட பரிதாப சம்பவம், ரவாங் கிறிஸ்தவ இன தொழிலாளர்கள் மத்தியில் மிகுந்த துயரத்தை ஏற்படுத்தி உள்ளது.  #Myanmar #Landslide #tamilnews
    Next Story
    ×