என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தைவானில் மருத்துவமனையில் தீ விபத்து - 9 பேர் பலி
Byமாலை மலர்13 Aug 2018 1:18 PM IST (Updated: 13 Aug 2018 1:18 PM IST)
தைவான் நாட்டில் உள்ள ஒரு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளதாகவும், பலர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. #TaiwanFireAccident
தைபே:
தைவான் நாட்டின் நியூ தைபே நகரில் உள்ள ஒரு மருத்துவமனையில் இன்று அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீவிபத்து குறித்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டு அவர்கள் அப்பகுதிக்கு விரைந்தனர்.
மருத்துவமனையின் 7-வது மாடியில் ஏற்பட்ட இந்த தீ விபத்து காரணமாக, அப்பகுதியில் இருந்த நோயாளிகள் அனைவரும் விரைவாக வெளியேற்றப்பட்டனர். இருப்பினும், இந்த தீ விபத்தில் சிக்கி 9 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாகவும், மேலும், 15 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இந்த மருத்துவமனையில் தற்போது மீட்பு நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன. ஆம்புலன்ஸ் உதவியுடன் பாதிக்கப்பட்டோர் வேறு மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டு வருகின்றனர். மருத்துவமனையில் நடைபெறும் மீட்பு நடவடிக்கைகளை அந்நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சகம் மேற்பார்வையிட்டு வருவதாகவும், இந்த தீவிபத்துக்கான காரணம் குறித்து விசாரிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. #TaiwanFireAccident

Next Story
×