search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காஷ்மீர் பிரச்சனையை தீர்க்க திட்டம் தயார்- பாகிஸ்தான் பெண் மந்திரி தகவல்
    X

    காஷ்மீர் பிரச்சனையை தீர்க்க திட்டம் தயார்- பாகிஸ்தான் பெண் மந்திரி தகவல்

    காஷ்மீர் பிரச்சனையை தீர்க்க ஒரு திட்ட அறிக்கை தயார் செய்து இருப்பதாக பாகிஸ்தானின் மனித உரிமைகள் துறை பெண் மந்திரி ஷிரீன் மஷாரி தெரிவித்துள்ளார். #PakistanMinister #ShireenMazari
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானின் புதிய பிரதமராக இம்ரான்கான் பதவி ஏற்றார்.

    அப்போது இந்தியாவுடன் ஆன அனைத்து பிரச்சனைகளையும் குறிப்பாக காஷ்மீர் பிரச்சனை குறித்து பேச்சுவார்த்தை நடத்தி தீர்க்க தயாராக இருப்பதாக தெரிவித்தார்.

    அதற்கு வலுசேர்க்கும் வகையில் பாகிஸ்தானின் மனித உரிமைகள் துறை பெண் மந்திரி ஷிரீன் மஷாரி ஒரு தகவலை வெளியிட்டுள்ளார். சமீபத்தில் ஒரு டி.வி. நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

    அப்போது காஷ்மீர் பிரச்சனையை தீர்க்க ஒரு திட்ட அறிக்கை தயார் செய்து இருப்பதாக கூறினார். அந்த அறிக்கை பிரதமர் இம்ரான்கான் மற்றும் காபினெட் மந்திரிகளுக்கு அனுப்பப்படும்.

    அதற்கு ஒப்புதல் கிடைத்தவுடன் அதை செயல்படுத்துவதில் தீவிரம் காட்டப்படும் என்றார். இவர் அரசியல் தந்திரம் சார்ந்த கல்வி துறையில் டைரக்டர் ஜெனரலாக பணிபுரிந்துள்ளார்.

    இஸ்லாமாபாத்தில் உள்ள குயாத்-இ-ஆசம் பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு துறை பேராசிரியராகவும் பணிபுரிந்துள்ளார்.  #PakistanMinister #ShireenMazari
    Next Story
    ×