என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நேபாளத்தில் வீட்டை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்ட பெண் 2 மகன்களுடன் உயிரிழப்பு
Byமாலை மலர்12 Jan 2019 9:43 AM IST (Updated: 12 Jan 2019 9:43 AM IST)
நேபாளத்தில் கடும் குளிரில் இருந்து தற்காத்துக்கொள்ள குடிசைக்குள் மூட்டிய நெருப்பின் புகை மூட்டத்தால் மூச்சு திணறி தூக்கத்திலேயே பெண்ணும் 2 மகன்களும் இறந்தனர். #Mentruationhut
காட்மாண்டு:
நேபாளத்தில், மாதவிலக்கு காலத்தில் பெண்களை வீட்டில் இருந்து வெளியேற்றி கால்நடை கொட்டகை அல்லது தனிமைப்படுத்தப்பட்ட குடிசையில் தங்க வைக்கும் பழக்கம் நீண்ட காலமாக இருந்து வந்தது.
தீண்டாமையின் மற்றொரு வடிவமாக பார்க்கப்படும் இந்த செயலை குற்றம் என அறிவித்து, இது தொடர்பாக தனி சட்டத்தை கடந்த 2017-ம் ஆண்டு நேபாள அரசு இயற்றியது. எனினும் நேபாளத்தில் பல கிராமங்களில் இன்னும் இந்த பழக்கம் கடைப்பிடிக்கப்படுகிறது. அந்த வகையில், பஜூரா மாவட்டத்தை சேர்ந்த ஆம்பா போஹரா (வயது 35) என்கிற பெண்ணுக்கு மாதவிலக்கு காலம் என்பதால் அவர் வீட்டில் இருந்து ஒதுக்கிவைக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட குடிசையில் தங்க வைக்கப்பட்டார். அவரது 2 மகன்களும் அவருடன் தங்கி இருந்தனர்.
இந்தநிலையில் குடிசையில் அவர்கள் 3 பேரும் பிணமாக கிடந்தனர். கடும் குளிரில் இருந்து தற்காத்துக்கொள்ள குடிசைக்குள் நெருப்பு மூட்டியதாகவும், அதனால் ஏற்பட்ட புகை மூட்டத்தால் மூச்சு திணறி தூக்கத்திலேயே 3 பேரும் இறந்ததாகவும் கூறப்படுகிறது. #Mentruationhut

Next Story
×