search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் முழு பலத்துடன் போட்டியிடும்- ராகுல்
    X

    உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் முழு பலத்துடன் போட்டியிடும்- ராகுல்

    உத்தரபிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சி, சமாஜ்வாடி கூட்டணி அமைத்துள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி தனது முழு பலத்துடன் போட்டியிடும் என ராகுல் காந்தி கூறினார். #UPAlliance #Rahul
    துபாய்:

    உத்தரபிரதேச மாநிலத்தில் எதிரும் புதிருமாக இருந்த சமாஜ்வாடி கட்சியும், பகுஜன் சமாஜ் கட்சியும் பாஜகவை வீழ்த்துவதற்காக பாராளுமன்றத் தேர்தலில் கூட்டணி அமைத்துள்ளது. ஆனால் இந்த கூட்டணியில் காங்கிரசை சேர்க்கவில்லை.

    காங்கிரஸ் ஆதரவு நிலைப்பாட்டுடன் இருந்த இந்த கட்சிகள் திடீரென தனிக் கூட்டணியை உருவாக்கி இருப்பது, காங்கிரஸ் தலைவர்களுக்கு அதிர்ச்சியை அளித்து உள்ளது. காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு குறித்து இன்று அறிவிக்க உள்ளதாக அக்கட்சியின் மேலிட பொறுப்பாளர் குலாம்நபி ஆசாத் தெரிவித்துள்ளார்.

    இதற்கிடையே துபாயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது உ.பி.யில் ஏற்பட்டுள்ள புதிய கூட்டணி குறித்து கருத்து தெரிவித்த அவர், இரண்டு கட்சி தலைவர்கள் (அகிலேஷ், மாயாவதி) மீதும் மிகுந்த மரியாதை வைத்திருப்பதாகவும், விரும்பும் கூட்டணியை அமைக்க அவர்களுக்கு உரிமை இருப்பதாகவும் கூறினார்.


    “பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் சமாஜ்வாடி கட்சி ஒரு அரசியல் முடிவை எடுத்திருக்கின்றன. உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியை எவ்வாறு வலுப்படுத்துவது என்பது எங்களுக்குத் தெரியும். நாங்கள் எங்கள் முழு பலத்துடன் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவோம். சமாஜ்வாடி கட்சி-பகுஜன் சமாஜ் கட்சி கூட்டணியில் இடம்பெறாததால் காங்கிரஸ் கட்சிக்கு எந்த பின்னடைவும் இல்லை” என்றும் ராகுல் தெரிவித்தார். #UPAlliance #Rahul

    Next Story
    ×