search icon
என் மலர்tooltip icon

    உலகம் (World)

    அமெரிக்க அதிபர் ஜோ பைடன்
    X
    அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

    ரஷியாவின் 4 மிகப்பெரிய வங்கி மீது பொருளாதார தடை விதித்தது அமெரிக்கா

    அமெரிக்கா விதிக்கும் பொருளாதார தடை காரணமாக உலக நிதி அமைப்பில் இருந்து ரஷியா தனித்து விடப்படும் என்று வெள்ளை மாளிகையின் மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
    உக்ரைனை தாக்கி வரும் ரஷியா மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்தது. ரஷியா ராணுவ வங்கி உள்ளிட்ட 2 முக்கிய வங்கிகள் மற்றும் நிதி பரிவர்த்தனை மீது தடைகள் விதிக்கப்பட்டதாக அமெரிக்க அதிபர் ஜோபைடன் அறிவித்தார்.

    இந்த நிலையில் ரஷியா மீது மேலும் பொருளாதார தடைகளை அமெரிக்கா விதித்துள்ளது. இதுகுறித்து அதிபர் ஜோபைடன் கூறியதாவது:-

    ரஷியாவின் 4 மிகப்பெரிய வங்கி மீது பொருளாதார தடை விதிக்கப்படுகிறது. பொருளாதார தடை விதித்ததற்காக ரஷியா சைபர் தாக்குதல் நடத்தினால் அதையும் எதிர்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம்.

    ரஷியாவுக்கு உதவி வரும் பெலாரஸ் நாடு மீதும் கடுமையான பொருளாதார தடை விதிக்கப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மேலும் வெள்ளை மாளிகையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது, “அமெரிக்கா விதிக்கும் பொருளாதார தடை காரணமாக உலக நிதி அமைப்பில் இருந்து ரஷியா தனித்து விடப்படும்” என்று தெரிவித்தார்.

    வெள்ளை மாளிகை

    ரஷியா மீது ஐரோப்பா ஒன்றியமும் தடை விதித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் நடத்திய அவசர ஆலோசனை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

    ரஷிய வங்கிகள் மற்றும் முக்கிய துறைகள், நிறுவனங்கள் மீது பொருளாதார தடை விதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதே போல் ஜப்பானும் ரஷியா மீது மேலும் பொருளாதார தடைகளை விதித்தது. ரஷிய நிறுவனங்கள், சொத்துக்கள் முடக்கப்படுவதாக தெரிவித்தது.

    Next Story
    ×