search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    ஜோ பைடன்
    X
    ஜோ பைடன்

    புதின் ஒரு கசாப்புக்கடைக்காரர்- அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆவேசம்

    புதின் ஆட்சியில் நீடிக்க கூடாது என்ற ஜோ பைடன் கருத்துக்கு ரஷியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.


    உக்ரைன் மீது போரை தொடங்கியுள்ள ரஷிய அதிபர் புதினை கடுமையாக விமர்சித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கருத்து தெரிவித்து வருகிறார்.

    உக்ரைனின் அண்டை நாடான போலந்துக்கு ஜோ பைடன் சென்று உள்ளார். போலந்து தலைநகர் வார்சாவில் ஜோ பைடன் பொதுமக்கள் மத்தியில் பேசியதாவது:-

    உக்ரைனில் ரஷியாவுக்கு வெற்றி கிடைக்காது. இந்த போரில் சில நாட்களிலோ, சில மாதங்களிலோ வெற்றி பெற முடியாது. நீண்ட காலத்துக்கு தொடரக்கூடும். ரஷிய அதிபர் புதினுக்கு எதிராக பெரும் பொருளாதார நாடுகள் ஒன்றுபட வேண்டும். கடவுள் அருளால் இந்த மனிதர் (புதின்) ஆட்சியில் நீடிக்க கூடாது. அவர் அதிகாரத்தில் இருக்க முடியாது.

    புதின் ஒரு கசாப்புக் கடைக்காரர். உக்ரைன் மீதான ரஷியாவின் ஊடுருவலை சுதந்திர உலகம் எதிர்க்கிறது என்றார்.

    புதின் ஆட்சியில் நீடிக்க கூடாது என்ற ஜோ பைடன் கருத்துக்கு ரஷியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

    இது குறித்து ரஷிய அரசின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறும் போது, ரஷியாவின் அதிபர், ரஷிய மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் அதை ஜோ பைடன் முடிவு செய்யக்கூடாது என்றார்.

    இந்த நிலையில் ஜோ பைடன் தெரிவித்த கருத்து தொடர்பாக வெள்ளை மாளிகை விளக்கம் தெரிவித்துள்ளது. வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் கூறும் போது, புதின் குறித்த அதிபர் ஜோ பைடன் கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டது. அவர் அந்த அர்த்தத்தில் கூறவில்லை. அதிபர் ஜோ பைடனின் கருத்தின் அர்த்தம் என்னவென்றால் புதின் தனது அண்டை நாடுகள் மீது அதிகாரத்தை செலுத்த அனுமதிக்க முடியாது. ரஷியாவில் ஆட்சி மாற்றத்தை விரும்பவில்லை. புதினின் அதிகாரம் குறித்தோ அல்லது ஆட்சி மாற்றம் பற்றியோ அவர் விவாதிக்கவில்லை என்றார்.

    Next Story
    ×