search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    உக்ரைன் ரஷியா போர்
    X
    உக்ரைன் ரஷியா போர்

    செர்னோபில் அணு உலையில் இருந்து வெளியேறும் ரஷிய படைகள் - அமெரிக்க பாதுகாப்பு துறை

    ரஷிய ராணுவம் கைப்பற்றிய செர்னோபில் அணு மின் உலையில் கதிர்வீச்சு அதிகரித்து உள்ளது என உக்ரைன் அணுசக்தி நிறுவனம் சமீபத்தில் தெரிவித்தது.
    வாஷிங்டன்:

    உக்ரைன் மீது தாக்குதலை நடத்தி வரும் ரஷியா முதல் நாளில் வடக்கு உக்ரைனில் உள்ள செர்னோபில் அணு உலையை அந்நாட்டு ராணுவம் கைப்பற்றி தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது.

    இது தொடர்பாக உக்ரைன் அரசு கூறுகையில், செர்னோபில் அணு உலையை ரஷியா ஆக்கிரமிப்பாளர்கள் கைப்பற்றி உள்ளனர். இதனால் கோடிக்கணக்கான உயிர்கள் அச்சுறுத்தலில் உள்ளன என தெரிவித்தது.

    ஆனால், செர்னோபில் அணு உலை மீது பயங்கரவாத அமைப்புகளும், தேசியவாத குழுக்களும் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளது என்பதால் அணு உலையைப் பாதுகாக்கவே அதனைக் கைப்பற்றி உள்ளோம் என ரஷிய ராணுவ அமைச்சகம் தெரிவித்தது.

    இந்நிலையில், உக்ரைனில் உள்ள செர்னோபில் அணு உலையில் இருந்து ரஷிய படைகள் வெளியேற தொடங்கியுள்ளன என அமெரிக்க பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.

    Next Story
    ×