search icon
என் மலர்tooltip icon

    உலகம் (World)

    அமெரிக்க வெள்ளை மாளிகையின் செயலாளர் ஜென்சாகி
    X
    அமெரிக்க வெள்ளை மாளிகையின் செயலாளர் ஜென்சாகி

    இந்தியாவை தன்பக்கம் இழுக்க அமெரிக்கா முயற்சி- எரிபொருள் வினியோகத்தில் ஆதரவு அளிப்பதாக அறிவிப்பு

    இந்தியாவின் இறக்குமதிகளை பல்வகைப்படுத்துவதற்கும், நம்பகமான வினியோகஸ்தராக பணியாற்றுவதற்கும், அமெரிக்கா தயாராக இருக்கிறது என வெள்ளை மாளிகையின் செயலாளர் ஜென்சாகி தெரிவித்துள்ளார்.
    வாஷிங்டன்:

    ரஷியா-உக்ரைன் இடையே போர் விவகாரத்தில் இந்தியா நடுநிலை வகித்து வருகிறது.

    இதற்கிடையே ரஷியாவின் எண்ணை இறக்குமதிக்கு அமெரிக்கா தடை விதித்துள்ள நிலையில் ரஷியாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணையை தள்ளுபடி விலையில் வாங்குகிறது.

    இதில் அமெரிக்கா அதிருப்தி அடைந்திருந்தாலும் இந்தியாவுக்கு எதிராக எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை.

    இந்தநிலையில் இவ்விவகாரத்தில் ரஷியாவிடம் இருந்து இந்தியாவை தன்பக்கம் இழுக்க முயற்சிக்கிறது. அமெரிக்க வெள்ளை மாளிகையின் செயலாளர் ஜென்சாகி நிருபர்களிடம் கூறியதாவது:-

    ரஷிய எரிசக்தி மற்றும் பிற பொருள்களின் இறக்குமதியை அதிகரிக்க வேண்டும் அல்லது துரிதப்படுத்த வேண்டும் என்று நாங்கள் நினைக்கவில்லை. அந்த முடிவுகள் தனிப்பட்ட நாடுகளில் எடுக்கப்படுகின்றன.

    இந்தியாவுக்கு ஆதரவளிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம் என்பதை தெளிவுபடுத்துகிறேன். இந்தியாவின் இறக்குமதிகளை பல்வகைப்படுத்துவதற்கும், நம்பகமான வினியோகஸ்தராக பணியாற்றுவதற்கும், அமெரிக்கா தயாராக இருக்கிறது.

    ரஷியாவிடம் இருந்து இந்தியாவை தன்பக்கம் இழுக்க அமெரிக்கா முயற்சி

    ரஷியாவிடம் இருந்து இந்தியா ஒன்று முதல் இரண்டு சதவீத எண்ணையை மட்டுமே இறக்குமதி செய்கிறது. நாங்கள் பல்வேறு வழிகள் மூலம் நாடுகளுடன் தொடர்பு கொள்கிறோம்.

    எங்களின் துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சமீபத்தில் இந்தியாவில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். தடைகளை மீறுவதால் ஏற்படும் விளைவுகள் என்ன, வழிமுறை என்ன என்பதை தெளிவாக தெரிவித்தார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×