search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    22 சக்கர கனரக லாரியை ஓட்டி அசத்தும் பெண்
    X

    22 சக்கர கனரக லாரியை ஓட்டி அசத்தும் பெண்

    • பெண்ணால் எதையும் சாதிக்க முடியும் என்று நினைத்து கனரக வாகனம் ஓட்டுவதற்கான உரிமம் பெற விண்ணப்பித்தார்.
    • கண், உடல் பரிசோதனையின் போது அதிகாரிகள் இவரை வியப்புடன் பார்த்தனர்.

    அரபு நாடுகளில் பெண்கள் வேலைக்கு செல்வது மிகவும் குறைவு என கூறப்படும் நிலையில் 22 சக்கர கனரக வாகனத்தை ஒரு பெண் ஓட்டி அசத்தியுள்ளார். துபாயை சேர்ந்தவர் பவுசியா சஹுரான். 22 வயதான இவர் பிறக்கும் போதே தந்தையை இழந்துள்ளார். தாயின் அரவணைப்பில் வாழ்ந்த இவர் துணிச்சல் மிகுந்த பெண்ணாக வளர்ந்தார். வணிக வரி துறையில் பட்டம் பெற்ற இவர் ஆணுக்கு நிகராக பெண்ணால் எதையும் சாதிக்க முடியும் என்று நினைத்து கனரக வாகனம் ஓட்டுவதற்கான உரிமம் பெற விண்ணப்பித்தார்.

    துபாயில் கனரக வாகனத்திற்கான ஓட்டுனர் உரிமம் பெறுவது சுலபமல்ல. 2013-ம் ஆண்டு முதல் முறையாக இலகு ரக வாகன லைசென்ஸ் பெற்ற இவர் 9 ஆண்டுகளுக்கு பிறகு கனரக வாகன உரிமம் பெற முயற்சி செய்தார். கண், உடல் பரிசோதனையின் போது அதிகாரிகள் இவரை வியப்புடன் பார்த்தனர்.

    ஆனாலும் தனது விடா முயற்சியால் முதல் முயற்சியிலேயே கனரக வாகன ஓட்டுனர் தேர்வில் தேர்ச்சி பெற்றார். புஜாராவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் லாரி டிரைவராக சேர்ந்த இவர் 2 மற்றும் 3 அச்சுகள் கொண்ட 22 சக்கர கனரக வாகனத்தை ஓட்டி அசத்தி வருகிறார்.

    இதுகுறித்து அவர் கூறுகையில், கனரக வாகனம் ஓட்டுவது சாதாரணமாக கார் ஓட்டுவது போன்று அல்ல. நீண்ட தூர பயணத்தில் முழு கவனம் மற்றும் பாதுகாப்புடன் இருப்பது மிகவும் அவசியம். அதே போல டீசல், தண்ணீர் மற்றும் டயரில் போதிய அளவு காற்று இருக்கிறதா என்பதையும் சோதனை செய்து கொள்ள வேண்டும் என்றார்.

    Next Story
    ×