என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உலகம்
ஈரானில் மலரும் சீர்திருத்தங்களின் சகாப்தம்.. யார் இந்த மசூத் பெசெஸ்கியன்? ஹிஜாப் நிலைப்பாடு என்ன?
- குர்திய இனக்குழுவைக் சேர்ந்த தாய்க்கு பிறந்த மசூத் பெசெஸ்கியன் இரானின் பலதரப்பட்ட சிறுபான்மை இனக்குழுக்களுக்காக தொடர்ந்து குரல் கொடுப்பவராக உள்ளார்.
- கடந்த 2016 முதல் 2020 வரை பாராளுமன்ற துணை சபாநாயராகவும் பணியாற்றினார்.
ஈரான் அதிபர் தேர்தலில் சீர்திருத்தக் கட்சியைச் சேர்ந்த மசூத் பெசெஸ்கியன் பெற்றுள்ள வெற்றி வரும் காலங்களில் அந்நாட்டில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 1954 செப்டம்பர் 29 ஆம் தேதி மேற்கு அஜர்பைஜானை ஒட்டியுள்ள மஹாபத் நகரில் அசர்பைஜானிய தந்தைக்கும் குர்து இனக்குழுவைச் சேர்ந்த தாய்க்கும் பிறந்தவர் மசூத் பெசெஸ்கியன்.
வரலாறு நெடுகிலும் இன்னலைகளை சந்தித்த ஈரானில் சிறுபான்மையாக உள்ள குர்திய இனக்குழுவைக் சேர்ந்த தாய்க்கு பிறந்த மசூத் பெசெஸ்கியன் இரானின் பலதரப்பட்ட சிறுபான்மை இனக்குழுக்களுக்காக தொடர்ந்து குரல் கொடுப்பவராக உள்ளார்.
1980 முதல் 1988 வரையிலான காலகட்டத்தில் ஈர்க்க - ஈரான் போரில் ராணுவ சேவை ஆற்றிய மசூத், தொழில்முறையாக இதய அறுவை சிகிச்சை நிமுபாரகாவும்தாபிர்ஸ் பல்கலைக்கழகக்த்தின் மருத்துவ படிப்புகள் பிரிவின் தலைவராகாவும் பணியாற்றியவர் ஆவார்.
கடந்த 1994 ஆம்ஆண்டு நடந்த கார் விபத்தில் தனது மனைவி மற்றும் மகளை இழந்த மசூத், அதன்பின் அரசியலில் கவனம் செலுத்த தொடங்கினார். அதிபர் முகமது கதாமியின் ஆட்சியில் 2001 முதல் 2005 வரை சுகாதாரத்துறை அமைச்சராக பணியாற்றினார் மசூத். அதன்பின் பாராளுமன்ற எம்.பியாக தேர்வான மசூத், கடந்த 2016 முதல் 2020 வரை பாராளுமன்ற துணை சபாநாயராகவும் பணியாற்றினார்.
அதிபர் முகமது ரைசி ஹெலிகாப்ட்டர் விபத்தில் இறந்ததால் தற்போது நடந்த அதிபர் தேர்தலில் சீர்திருத்தக் கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக களமிறங்கிய மசூத் முக்கிய போட்டியாளரான தீவிர வலதுசாரி கொள்கைகள் உடைய சயீத் ஜலீலிக்கு எதிராக தீவிர பிரச்சாரத்தை முன்னெடுத்தார்.
முந்தைய அரசுகளை போல் அல்லாமல் மேற்கு நாடுகளுடன் இணக்கமான உறவை ஏற்படுத்த விழைபவராக மசூத் உள்ளார். மேலும் ஈரானில் இஸ்லாமிய புரட்சியைத் தொடர்ந்து கடந்த 1079 முதல் பெண்கள் ஹிஜாப் அணிவதை கட்டாயமாக்கியதற்கு எதிராக மசூத் தொடர்ந்து குரல் கொடுத்து வருபவர்.
கடந்த 2017 ஆம் ஆண்டு பல்கலைக்கழகங்களுக்குள்ளும, மருத்துவமனைகளுக்குள்ளும் ஹிஜாப் அணியாத பெண்கள் அனுமதிக்கப்படாததற்கு முதல் ஆளாக கண்டனம் தெரிவித்தார். கடந்த 2022 ஆம் ஆண்டு ஹிஜாப் அணியாததற்காக மாஷா ஆமினி என்ற இளம்பெண் போலீசாரால் கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்த மசூத் ஹிஜாப் அணியவில்லை என்ற காரணத்துக்காக பெண்ணை கைது செய்து உயிறற்ற உடலாக அவரை குடும்பத்திடம் திருப்பியளிப்பது என்பத , இஸ்லாமியக் குடியரசில் ஏற்கத்தக்கது அல்ல என்று தெரிவித்தார்.
இந்நிலையில் தற்போது ஈரான் அதிபராக உள்ள மசூத் பெசெஸ்கியன் கட்டாய ஹிஜாப் கொள்கைகளை தளர்த்துளார் என்றும், முற்போக்கான சீர்த்திருத்தங்களை கொண்டு வருவார் என்றும் எதிர்பாக்கப்படுகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்