என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உலகம் (World)
தலைமுடியை டீ பாத்திரமாக மாற்றியவர்- வீடியோ வைரல்
- வீடியோவை இன்ஸ்டாகிராமில் 36 லட்சம் பேர் பார்வையிட்டு உள்ளனர்.
- பலரும் சிகையலங்காரத்தை வியந்து கருத்து பதிவிட்டனர்.
ஈரானை சேர்ந்த சிகை அலங்கார நிபுணர், ஒரு இளம்பெண்ணின் தலைமுடியில் டீ பாத்திரம் வடிவமைத்து அதில் தண்ணீர் ஊற்றும் வீடியோ காட்சிகள் இணையத்தை கலக்குகிறது.
தலைமுடியை வித்தியாசமாக கத்தரித்து சில உருவங்களை வடிவமைத்திருப்பதை நீங்கள் பார்த்திருக்கலாம். ஆனால் இதுவரை நீங்கள் கண்டிராத வகையில் தலைமுடியை நிஜமான டீ பாத்திரமாக வடிவமைத்து அசத்தியிருக்கிறார் ஈரான் சிகை அலங்கார நிபுணர் சயிதே அரியாய்.
முதலில் டீ பாத்திர வடிவில் சிறு கம்பிகளை வளைத்து தலையில் நிறுத்துகிறார். அதைச் சுற்றி தலைமுடியை சேர்த்து வைத்து ஒட்டுகிறார். இறுக்கம் தேவையான இடத்துக்கு ஜடை பின்னி கட்டி விடுகிறார். இறுதியில் டீ பாத்திர வடிவம் வந்ததும் அதில் தண்ணீரையோ அல்லது ஆறிய டீயையோ ஊற்றி மற்றொரு பாத்திரத்திலும், டீ கோப்பையிலும் நிரப்பிக் காட்டுகிறார்.
பானம் தலையில் வேறு எந்த இடத்தின் வழியாகவும் கசியாமல், பாத்திரத்தின் வாய் வழியாக மட்டும் அழகாக வெளியேறுகிறது. இந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் 36 லட்சம் பேர் பார்வையிட்டு உள்ளனர். பலரும் இந்த சிகையலங்காரத்தை வியந்து கருத்து பதிவிட்டனர்.