search icon
என் மலர்tooltip icon

    சீனா

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தைவானுக்கு ஆதரவாக அமெரிக்கா உள்ளதால் சீனா ஆத்திரம் அடைந்தது.
    • கடந்த ஆண்டு அப்போதைய அமெரிக்கா பாராளுமன்ற சபாநாயகர் தைவானுக்கு வந்த போது சீனா போர் பயிற்சியில் ஈடுபட்டது.

    பீஜிங்:

    தைவானை தங்களது நாட்டின் ஒரு பகுதி என்று சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. இதற்கு தைவான் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இவ்விவகாரத்தில் தைவானுக்கு ஆதரவாக அமெரிக்கா உள்ளதால் சீனா ஆத்திரம் அடைந்தது. சில மாதங்களுக்கு முன்பு தைவானை சுற்றி கடலில் சீனா போர் பயிற்சிகளை மேற்கொண்டதால் பதற்றம் ஏற்பட்டது.

    இதற்கிடையே தைவான் துணை அதிபர் வில்லியம்லாய், சமீபத்தில் அமெரிக்காவுக்கு சென்றதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்த நிலையில் தைவானை சுற்றி மீண்டும் சீனா தனது போர் பயிற்சிகளை தொடங்கியுள்ளது.

    தைவான் தீவை சுற்றி சீன கடற்படை மற்றும் விமானப்படை, கூட்டு வான், கடல் ரோந்து, ராணுவ பயிற்சிகளை இன்று அதிரடியாக தொடங்கியது. இதை சீன ராணுவ செய்தி தொடர்பாளரான ஷியி உறுதிப்படுத்தினார்.

    இது தொடர்பாக சீனா கூறும்போது, தைவான் துணை அதிபர் லாய் பிரச்சினைகளை ஏற்படுத்தி வருகிறார். தேசிய இறையாண்மை பிராந்திய ஒருமைப்பாட்டை பாதுகாக்க உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிவித்தது.

    கடந்த ஆண்டு அப்போதைய அமெரிக்கா பாராளுமன்ற சபாநாயகர் தைவானுக்கு வந்த போது சீனா போர் பயிற்சியில் ஈடுபட்டது. இந்த நிலையில் தைவான் துணை அதிபர், அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்ட பிறகு போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.

    • அந்த வாலிபனுக்கு சுமார் ரூ.1.15 கோடி மதிப்புள்ள சொத்து கிடைத்தது
    • இவனிடம் வாங்கிய முகவர் அதிக விலைக்கு மற்றொரு முகவருக்கு விற்றார்

    மத்திய சீனாவில் உள்ளது ஹேனன் பிராந்தியம்.

    இங்கு தனது பெற்றோருடன் வசித்து வந்தவர் 18-வயது ஜியாவோஹுவா (Xiaohua). இவருக்கு அவரது பாட்டனார் வழியாக ஒரு பூர்வீக சொத்து கிடைத்திருந்தது. அதன் மதிப்பு சுமார் ரூ.1.15 கோடிக்கும் ($1,39,000) மேலிருக்கும்.

    ஜியாவோஹூவா ஒரு மோட்டார்சைக்கிள் வாங்கி தர சொல்லி நீண்ட காலமாக தனது பெற்றோரை கேட்டு வந்தார். ஆனால் அவர்கள் வாங்கி தர மறுத்தனர். எப்படியாவது மோட்டார்சைக்கிள் வாங்க வேண்டுமென நினைத்த ஜியாவோஹுவா ஒரு விபரீத திட்டம் தீட்டினார்.

    இதற்காக தாத்தா மூலம் பெற்ற தனது சொத்தை தனது பெற்றோருக்கு தெரியாமல் விற்க முடிவு செய்தார். அதன்படி சொத்துக்களை விற்கவும், வாங்கவும் ஏற்பாடு செய்யும் முகவர்களை ரகசியமாக அணுகினார். தனது பூர்வீக சொத்தை பாதி விலைக்கு விற்க ஒரு முகவரிடம் விலை பேசி ஒப்புக்கொண்டார்.

    பாதி விலைக்கு அந்த சொத்தை வாங்கிய அந்த முகவர் குறுகிய காலத்தில் லாபம் சம்பாதிக்க மற்றொரு முகவருக்கு அதிக விலைக்கு விற்று விட்டார். பிறகு ஒரு நாள், ஜியாவோஹுவாவின் தாயாருக்கு வீடு பாதி விலைக்கு விற்கப்பட்டது தெரிய வந்தது.

    அதிர்ச்சியடைந்த அவர் அந்த சொத்து முகவர்களை அணுகி, விற்பனையை ரத்து செய்யுமாறு கோரினார். ஆனால் அவர்கள் மறுத்தனர். இதனால் வேறு வழியில்லாத நிலையில் ஜியாவோஹுவாவின் பெற்றோர் சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடிவு செய்து, அவர்கள் மீது வழக்கு தொடுத்தனர்.

    இவ்வழக்கு நீதிமன்றத்திற்கு வந்த போது, இதனை விசாரித்த நீதிபதி, விவரங்களை அறிந்து விற்பனை சம்பந்தமான பத்திரங்களை ஆய்வு செய்தார். முகவர்களுக்கும், விற்பனை செய்தவர்களுக்குமான உரையாடல்களையும் ஆய்வு செய்ததில் ஜியாவோஹுவா, தனது சொத்தின் உண்மையான மதிப்பை அறியாமல் இருந்திருப்பதும், அவரை முகவர்கள் ஏமாற்றியுள்ளதும் தெரிய வந்தது.

    இதனையடுத்து 'ஜியாவோஹுவாவின் செய்கை சிறு பிள்ளைத்தனமானது' என வர்ணித்த நீதிமன்றம்,

    இந்த விற்பனையை ரத்து செய்து, சொத்தை மீண்டும் ஜியாவோஹுவாவிற்கே திருப்பி அளித்தது.

    இந்த செய்தியையடுத்து, ஒரு மோட்டார்சைக்கிளுக்காக எந்த எல்லைக்கெல்லாம் இளைஞர்கள் செல்கிறார்கள் என பெற்றோர்கள் கவலை தெரிவித்து பேசி வருகின்றனர்.

    • ஜியாங் மாவட்டம் ஹாஸ் என்ற பகுதியில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் வீடுகள் இடிந்து பலர் உயிரோடு மண்ணுக்குள் புதைந்தனர்.
    • மீட்பு படையினர் விரைந்து சென்று இடிபாடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

    பீஜிங்:

    சீனாவில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக தொடர்ந்து மழை கொட்டி வருகிறது. இதனால் பல நகரங்கள் வெள்ளத்தில் மிதக்கிறது. சாலைகள், பாலங்கள், வீடுகள் சேதம் அடைந்து உள்ளன. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கி இருக்கிறது. வெள்ளத்தில் சிக்கிய ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

    இந்த நிலையில் ஜியாங் மாவட்டம் ஹாஸ் என்ற பகுதியில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் வீடுகள் இடிந்து பலர் உயிரோடு மண்ணுக்குள் புதைந்தனர். மீட்பு படையினர் விரைந்து சென்று இடிபாடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

    இந்த நிலச்சரிவில் சிக்கி உயிர் இழந்த 22 பேரின் உடல்கள் மீட்கப்பட்டு உள்ளன. பலர் இடிபாடுகளுக்குள் மாட்டி இருக்கலாம் என தெரிகிறது. அவர்களை மோப்பநாய் உதவியுடன் மீட்பு படையினர் தேடி வருகின்றனர். இதனால் பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என அஞ்சப்படுகிறது. பல நகரங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் இருளில் மூழ்கி உள்ளன. ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வீடுகளை இழந்து தவித்து வருகிறார்கள்.

    • மாஸ்கோவில் நடைபெறும் சர்வதேச பாதுகாப்பு மாநாட்டில் கலந்து கொள்கிறார்
    • ரஷியாவை தொடர்ந்து பெலாரஸ் செல்கிறார்

    சீனாவின் பாதுகாப்புத்துறை மந்திரி லி ஷாங்ஃபு இன்று முதல் ஆகஸ்ட் 19-ந்தேதி வரை ஆறு நாட்கள் ரஷியா மற்றும் பெலாரஸ் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இந்த தகவலை சீனாவின் பாதுகாப்புத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் வு கியான் தெரிவித்துள்ளார்.

    ரஷிய பாதுகாப்புத்துறை மந்திரி செர்கெய் ஷோய்கு, பெலாரஸ் பாதுகாப்பு மந்திரி விக்டர் கிரெனின் ஆகியோரின் அழைப்பை ஏற்று இந்த பயணம் மேற்கொள்கிறார்.

    முதலில் ரஷியா செல்லும் அவர், ரஷிய தலைநகர் மாஸ்கோவில் நடைபெற இருக்கும் சர்வதேச பாதுகாப்பு மாநாட்டில் கலந்து கொள்கிறார். அதனைத் தொடர்ந்து பெலாரஸ் செல்கிறார்.

    உக்ரைனுக்கு எதிராக ரஷியாவுக்கு பெலாரஸ் வெளிப்படையாக ஆதரவு தெரிவித்து, உதவி வருகிறது. ஆனால், சீனா மறைமுகமாக ஆதரவு கொடுப்பதுடன், ஆயுதங்கள் வழங்குவதாகவும் அமெரிக்கா குற்றம்சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

    • பராகுவே நாட்டிற்கு செல்லும் வழியில் அமெரிக்கா சென்ற தைவான் துணை அதிபர்
    • இறையாண்மையை பாதுகாக்க கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்கிறது சீனா

    தைவான் நாட்டின் ஒரே நட்பு நாடு தென்அமெரிக்காவின் பராகுவே. தங்களது நட்பு நாடான பராகுவே செல்ல தவைான் துணை அதிபர் வில்லியம் லாய் முடிவு செய்தார். அவர் பராகுவே செல்லும் வழியில் நேற்றிரவு இடைநிறுத்தமாக அமெரிக்காவின் சான்பிராஸ்சிஸ்கோ நகர் சென்றடைந்தார்.

    அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே கடும் மோதல் போக்கு இருந்து வரும் நிலையில், தைவான் துணை அதிபர் அமெரிக்கா சென்றுள்ளது, சீனாவுக்கு எரிச்சலூட்டியுள்ளது.

    இதுகுறித்து சீனா தரப்பில் கூறும்போது ''தைவான் துணை அதிபர் வில்லியம்ஸ் லாய் ஒரு பிரிவினைவாதி. அவர் தொடர்ந்து இடையூறு செய்து வருகிறார். சீனா தனது இறையாண்மையை பாதுகாக்க கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளும்'' எனத் தெரிவித்துள்ளார்.

    தைவான் தனி நாடு என்றாலும், தங்களுடைய கட்டுப்பாட்டில் உள்ள ஒரு பிராந்தியமாக சீனா பார்க்கிறது. ஆனால், அமெரிக்க உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் தைவானுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றன. இதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அடிக்கடி தைவான் ஒட்டிய கடற்பகுதியில் ராணுவ நடவடிக்கையை அதிகரித்து மிரட்டல் விடுத்து வருவதை வழக்கமாக வைத்துள்ளது.

    இதையும் தாண்டி சமீபத்தில் தைவானுக்கு அமெரிக்கா ராணுவ உதவி வழங்கியது குறிப்பிடத்தக்கது.

    • வடக்கு சீனாவின் ஜியான்ஸ் நகரில் கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டது.
    • மழை பெய்து வருவதால் பொது மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

    பீஜிங்:

    சீனாவில் கடந்த சில நாட்களாக இடைவிடாமல் பலத்த மழை கொட்டி வருகிறது. இதனால் சீனாவின் வடக்கு பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கிறது. வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கி விட்டது. ஏராளமானவர்கள் வீடுகளை இழந்து தவித்து வருகிறார்கள்.

    தொடர் மழையால் சாலைகள், பாலங்கள் சேதம் அடைந்துள்ளது. மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பல பகுதிகள் இருளில் மூழ்கி கிடக்கிறது. மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டு உள்ளது. ஆனால் மழை நீடித்து வருவதால் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டு இருக்கிறது. மழை வெள்ளத்தில் சிக்கி இதுவரை சீனாவில் 78 பேர் இறந்து விட்டனர். பலர் மாயமாகி விட்டனர்.

    இந்த நிலையில் இன்று அதிகாலை வடக்கு சீனாவின் ஜியான்ஸ் நகரில் கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் பல வீடுகள் மண்ணில் புதைந்தது. அந்த வீடுகளில் இருந்த 2 பேர் மீது மண் விழுந்து அமுக்கியதால் பரிதாபமாக இறந்தனர். இது பற்றி அறிந்ததும் மீட்பு படையினர் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து சென்று நிலச்சரிவில் புதைந்து போன வீடுகளின் இடிபாடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

    உயிருக்கு போராடிக் கொண்டிருந்த 4 பேரை பத்திரமாக மீட்டனர். இந்த சம்பவத்தில் 16 பேரை காணவில்லை. அவர்கள் கதி என்னவென்று தெரியவில்லை. அவர்களை தேடி கண்டுபிடிக்கும் பணியில் மீட்பு படையினர் மும்முரமாக ஈடுபட்டு உள்ளனர். தொடர்ந்து மழை பெய்து வருவதால் பொது மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

    • ஜியுகுவான் செயற்கைக்கோள் ஏவுதளத்தில் இருந்து ஏவப்பட்டது.
    • ராக்கெட் திட்டமிட்ட சுற்றுப்பாதையில் ஏழு செயற்கைக்கோள்களை சுமந்து சென்றது.

    சீனாவின் வடமேற்கில் உள்ள ஜியுகுவான் செயற்கைக்கோள் ஏவுதளத்தில் இருந்து இன்று மதியம் 12.03 மணிக்கு CERES-1 Y7 கேரியர் ராக்கெட் விண்ணில் பாய்ந்தது.

    இந்த ராக்கெட் திட்டமிட்ட சுற்றுப்பாதையில் Xiguang-1 01 உள்பட ஏழு செயற்கைக்கோள்களை சுமந்து சென்றது.

    CERES-1 ராக்கெட் தொடரைப் பயன்படுத்தி ஏவப்படும் 7வது ராக்கெட் பணி இதுவாகும்.

    • டீஃப்லேஷன் ஒரு அபாயகரமான பொருளாதார நிலை என நிபுணர்கள் வர்ணிக்கின்றனர்
    • சீனாவில் 2 ஆண்டுகளாக தென்பட்ட வளர்ச்சி மாறி டீஃப்லேஷன் தொடங்கி விட்டது

    பொருட்கள் மற்றும் சேவைகளின் விலை பன்மடங்கு உயர்ந்து மக்களின் வாங்கும் திறன் குறையும் போது பணவீக்கம் (inflation) எனும் நிலை தோன்றும்.

    ஆனால் பொருட்களுக்கும் சேவைகளுக்கும் தேவை குறையும் போது அவற்றின் விலையும் குறைய தொடங்கும். குறைந்த அளவிலான பணத்தில் அதிக அளவிலான பொருட்களை வாங்க முடியும். இந்நிலையை டீஃப்லேஷன் (deflation) எனப்படும் பணவாட்டமாக பொருளாதார நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.

    சீனாவில் சுமார் 2 ஆண்டுகளுக்கு பிறகு சென்ற ஜூலை மாதம் பொருளாதாரம் டீஃப்லேஷன் நிலையை அடைந்தது என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

    கோவிட் பெருந்தொற்றுக்கு பிறகு அங்கு பொருளாதாரம் மீண்டு, வளர்ந்தும் வருவதற்கான அறிகுறிகள் தென்பட்ட நிலையில் முதல் முறையாக இந்நிலை தற்போது தோன்றியுள்ளது.

    சீனாவில் மக்கள் செலவினங்களை மிகவும் குறைத்து வருவதால் பொருளாதாரம் வாட்டத்தை அடைந்துள்ளதாக அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவின் பொருளாதாரத்தில் 25 சதவீதத்திற்கும் மேல் பங்கு வகித்த ரியல் எஸ்டேட் துறையில் ஏற்பட்டிருக்கும் சரிவும் இதற்கு மற்றொரு காரணம்.

    பணவீக்கத்தின் முக்கிய அளவீடான நுகர்வோர் விலைக் குறியீடு (Consumer Price Index) கடந்த ஜூலை மாதம் 0.3 ஆக குறைந்துள்ளது என தேசிய புள்ளியியல் அலுவலகம் கூறியுள்ளது.

    நுகர்வோரின் மனநிலையில் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகளை தவிர பிற பொருட்கள் மற்றும் சேவைகளுக்காக செலவு செய்யும் எண்ணம் மறைவதுதான் பணவாட்டம் ஏற்பட முக்கிய காரணம் என கூறப்படுகிறது.

    இது ஒரு அபாயகரமான பொருளாதார நிலை என நிபுணர்களால் வர்ணிக்கப்படுகிறது.

    நுகர்வோர் குறைவதால் உற்பத்தியை குறைக்கவும், புதிய தொழிலாளர்களை பணியமர்த்துவதை நிறுத்தி வைக்கவும், தேவைப்பட்டால் தொழிலாளர்களை பணிநீக்கம் செய்யவும் நிறுவனங்கள் திட்டமிடும். இதனால் வேலையில்லா திண்டாட்டம் அதிகரிக்கும்.

    சீனாவின் பொருளாதார வாட்டம் குறித்த அறிவிப்பின் தொடர்ச்சியாக இந்திய பங்குச் சந்தையில் பங்குகள் சரிவை சந்தித்தன.

    சீனாவின் பொருளாதார மாற்றம் உலகளவில் ஏற்படுத்தப்போகும் தாக்கத்தை பொருளாதார நிபுணர்கள் கூர்ந்து கவனித்து வருகின்றனர்.

    • சிலர் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தனர்.
    • 7 பேர் காயம் அடைந்தனர். அவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    சீனாவின் யுனான் மாகாணம் லூபிங் கவுண்டி பகுதியில் வாலிபர் ஒருவர் கத்தியால் சாலையில் சென்று கொண்டிருந்த பொதுமக்களை சரமாரியாக குத்தினார்.

    இதனால் அவர்கள் அலறியடித்தபடி ஓடினர். சிலர் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தனர். இந்த தாக்குதலில் 2 பேர் பலியானார்கள். 7 பேர் காயம் அடைந்தனர். அவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    விசாரணையில் கத்திக்குத்து தாக்குதலில் ஈடுபட்ட 20 வயது நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும் அவர் தனது வீட்டில் தாயை கத்தியால் குத்திவிட்டு பின்னர் பொதுமக்களை தாக்கி தப்பி ஓடிவிட்டார் என்பதும் தெரியவந்தது. தப்பி ஓடிய அவரை போலீசார் கைது செய்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ஸ்மார்ட்போனில் எந்தவிதமான சேவையும் வழங்கப்பட கூடாது.
    • குழந்தைகளின் வயதை உறுதி செய்வதற்கான அமைப்பும் ஸ்மார்ட்போனில் இணைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

    பீஜிங்:

    நவீன உலகில் செல்போன் இன்றியமையாததாகி விட்டது. குழந்தைகள் முதல் அனைவரும் ஸ்மார்ட் போன்களை பயன்படுத்தி வருகிறார்கள். செல்போன்களை குழந்தைகள் அதிக நேரம் பயன்படுத்துவதால் அவர்களுக்கு தூக்கமின்மை, மோசமான கல்வி செயல் திறன் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் ஏற்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

    இதனால் குழந்தைகளிடம் செல்போன்களை கொடுக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது. இந்த நிலையில் சீனாவில் செல்போன்களை குழந்தைகள் பயன்படுத்த கடும் கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது.

    இது தொடர்பாக சீனாவின் செல்போன் கட்டுப்பாட்டாளர் அமைப்பு நெறிமுறைகளை வகுத்துள்ளது.

    18 வயதுக்குட்பட்டவர்கள் ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 2 மணி நேரம் மட்டுமே செல்போன் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும். மேலும் 8 வயதிற்குட்பட்ட குழந்தைகள் ஒரு நாளைக்கு 40 நிமிடங்களும், 8 முதல் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் ஒரு மணி நேரமும் 16 முதல் 17 வயதுக்குட்பட்டவர்கள் 2 மணி நேரம் செல்போனை பயன்படுத்த அனுமதிக்கப்படுவார்கள்.

    18 வயதுக்குட்பட்டவர்களுக்கு இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ஸ்மார்ட்போனில் எந்தவிதமான சேவையும் வழங்கப்பட கூடாது.

    18 வயதுக்குட்பட்டவர்கள் மொபைல் சாதனங்களில் இரவு 10 முதல் காலை 6 மணி வரை இணையத்தை பயன்படுத்துவதை தடுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சைபர் பேஸ் அமைப்பு தெரிவித்து உள்ளது. குழந்தைகளின் வயதை உறுதி செய்வதற்கான அமைப்பும் ஸ்மார்ட்போனில் இணைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

    மேலும் இணைய சேவை வழங்குபவர்கள், 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு நேர வரம்புகளில் இருந்து விலக்கு பெற பெற்றோர் கேட்டுக்கொண்டால் அனுமதிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    அதே போல் 3 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு பாடல்கள் மற்றும் ஆடியோ உள்ளடக்கம் மட்டுமே இருக்க வேண்டும்.12 முதல் 16 வயதுக்குட்பட்டவர்களுக்கு கல்வி மற்றும் செய்தி சார்ந்த உள்ளடக்கம் மட்டுமே காட்டப்பட வேண்டும்.

    தவறான பழக்கத்தை தரும் உள்ளடக்கத்தை வழங்காமல் இப்போதே உறுதி செய்யுமாறு தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு சீனா அரசு அறிவுறுத்தி உள்ளது.

    • பீஜிங்கில் கடந்த 140 ஆண்டுகளில் இல்லாத அளவில் கனமழை பதிவானது.
    • கனமழையில் சிக்கி இதுவரை 20 பேர் உயிரிழந்துள்ளனர்.

    பீஜிங்:

    சீனாவின் பல மாகாணங்களில் டொக்சூரி புயல் தாக்கும் என அந்நாட்டின் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. அதன்படி அங்குள்ள புஜியான் மாகாண கடற்கரை அருகே புயல் கரையை கடந்தது. அப்போது பெய்த கனமழை காரணமாக அங்கு கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    இந்தப் புயலால் 100க்கு மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன. சுமார் 6,000 ஹெக்டேர் பயிர்கள் நீரில் மூழ்கி நாசமடைந்தது. இதனால் அங்கு ரூ.493 கோடி அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக சீன அரசாங்கம் கணித்துள்ளது.

    முக்கிய ஆறுகளில் தண்ணீர் அபாய அளவை விட தாண்டி ஓடுகிறது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 8 லட்சத்து 80 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர். கனமழையால் அங்கு இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், கனமழை காரணமாக சீனாவில் இதுவரை 20-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். மேலும் 27 பேர் மாயமாகி உள்ளதாகக் கூறப்படுகிறது.

    சீன தலைநகர் பீஜிங்கில் கடந்த 140 ஆண்டுகளில் இல்லாத அளவில் கனமழை பதிவானது என அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர். பீஜிங் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் 744.8 மி.மீட்டர் மழை பதிவாகியுள்ளதாக அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    • புஜியான் மாகாண கடற்கரை அருகே புயல் கரையை கடந்தது.
    • சுமார் 6 ஆயிரம் ஹெக்டேர் பயிர்கள் நீரில் மூழ்கி நாசமடைந்தது.

    பீஜிங்:

    சீனாவின் பல மாகாணங்களில் டொக்சூரி புயல் தாக்கும் என அந்த நாட்டின் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. அதன்படி அங்குள்ள புஜியான் மாகாண கடற்கரை அருகே புயல் கரையை கடந்தது. அப்போது பெய்த கனமழை காரணமாக அங்கு கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    இந்த புயல் காரணமாக அங்கு 178 வீடுகள் பலத்த சேதமடைந்தன. சுமார் 6 ஆயிரம் ஹெக்டேர் பயிர்கள் நீரில் மூழ்கி நாசமடைந்தது. இதன்மூலம் அங்கு ரூ.493 கோடி அளவுக்கு சேதம் ஏற்பட்டு இருப்பதாக சீன அரசாங்கம் கணித்துள்ளது. இதற்கிடையே வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 8 லட்சத்து 80 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர். இதனால் அங்கு இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டு உள்ளது.

    ×