என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உலகம்
சேதமடைந்த சோயுஸ் விண்கலம் விண்வெளி நிலையத்தில் இருந்து பூமிக்கு திரும்பியது
- விண்கலம் மீது கடந்த டிசம்பர் மாதம் சிறிய விண்கல் மோதியதால் விண்கலம் லேசான சேதம் அடைந்தது
- பைகானூர் ஏவுதளம் அருகில் உள்ள கசாக் புல்வெளியில் விண்கலம் தரையிறங்கியது.
மாஸ்கோ:
சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்று ஆய்வுப் பணிகளை முடித்த விண்வெளி வீரர்கள் 3 பேர், பூமிக்கு திரும்புவதற்கான சோயுஸ் எம்எஸ்-22 விண்கலம் மீது கடந்த டிசம்பர் மாதம் சிறிய விண்கல் மோதியது. இதனால் விண்கலம் லேசான சேதம் அடைந்ததுடன், குளிரூட்டியில் கசிவு ஏற்பட்டது.
இதையடுத்து விண்கலத்தில் தங்கியிருக்கும் 3 வீரர்களையும் ஏற்றி வருவதற்காக கடந்த மாதம் சோயுஸ் எம்எஸ்-23 என்ற விண்கலத்தை ரஷியா அனுப்பியது.
அதேசமயம், சேதமடைந்த சோயுஸ் எம்எஸ்-22 விண்கலத்தை ஆட்கள் இன்றி பூமிக்கு கொண்டு வர முடிவு செய்யப்பட்டது. அதன்படி, சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து பிரிக்கப்பட்ட சோயுஸ் எம்எஸ்-22 விண்கலம் நேற்று பத்திரமாக பூமிக்கு திரும்பியது. பைகானூர் ஏவுதளம் அருகில் உள்ள கசாக் புல்வெளியில் விண்கலம் தரையிறங்கியது. விண்கலத்தில் சிறிய அளவிலேயே சேதம் ஏற்பட்டுள்ளதால், அதை சரிசெய்து மீண்டும் பயன்படுத்தலாமா? என்று ஆய்வாளர்கள் ஆய்வு செய்ய உள்ளனர்.