search icon
என் மலர்tooltip icon

    உலகம் (World)

    முதல் நாள் தாக்குதல் வெறும் டீசர் தான்.. இஸ்ரேலை நேரடியாக மிரட்டிய ஈரான்
    X

    முதல் நாள் தாக்குதல் வெறும் டீசர் தான்.. இஸ்ரேலை நேரடியாக மிரட்டிய ஈரான்

    • ஈரான் அதிபர் மசூத் பெசஸ்கியான் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
    • இது எங்களது சக்தியின் ஒரு பகுதி மட்டும்தான்.

    பாலஸ்தீனம் மற்றும் லெபனானில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலுக்கு மத்தியில் ஈரான் ராணுவம் இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தி வருகிறது. நேற்றிரவு முதல் 200-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் உள்ளிட்ட பகுதிகளில் ஈரான் ஏவியுள்ளது.

    அவற்றை இஸ்ரேல் ராணுவம் தாக்கி அழித்து வரும் சூழலில் மக்கள் பாதுகாப்பு பங்கர்களில் தஞ்சம் அடைத்துள்ளனர். இந்த நிலையில், இஸ்ரேல் மீதான தாக்குதல் குறித்து ஈரான் அதிபர் மசூத் பெசஸ்கியான் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

    அதில், "நியாயமான உரிமைகளின் அடிப்படையிலும், ஈரான் மற்றும் பிராந்தியத்திற்கான அமைதி மற்றும் பாதுகாப்பின் நோக்கத்துடன், சியோனிச ஆட்சியின் ஆக்கிரமிப்புக்கு ஒரு தீர்க்கமான பதில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை ஈரானின் நலன்களையும் குடிமக்களையும் பாதுகாக்கும் வகையில் தான் இருந்தது."

    "ஈரான் போர்க்குணமிக்க நாடு அல்ல, ஆனால் அது எந்த அச்சுறுத்தலுக்கும் எதிராக உறுதியாக நிற்கிறது என்பதை நேதன்யாகுவுக்கு தெரியப்படுத்துங்கள். இது எங்களது சக்தியின் ஒரு பகுதி மட்டும்தான். ஈரானுடன் மோதலில் ஈடுபட வேண்டாம்," என்று குறிப்பிட்டுள்ளார்.

    Next Story
    ×