search icon
என் மலர்tooltip icon

    துபாய்

    • சமீப காலமாக வெளிநாடுகளில் சொத்துக்களை வாங்குவதில் முகேஷ் அம்பானி மிகவும் ஆர்வமாக இருந்து வருகிறார்.
    • கடந்த ஆண்டு இங்கிலாந்தில் உள்ள ஸ்டோக்பார்க் என்ற கிளப்பை ரூ.656 கோடிக்கு வாங்கினார்.

    துபாய்:

    உலக பணக்காரர்களில் ஒருவர் இந்தியாவின் முகேஷ் அம்பானி. ரிலையன்ஸ் நிறுவன தலைவரான அவர் இந்தியாவின் 2-வது பெரிய பணக்காரர் ஆவார்.

    முகேஷ் அம்பானி வெளிநாடுகளில் சொத்துக்களை வாங்கி வருகிறார். சில மாதங்களுக்கு முன்பு துபாயில் ரூ.664 கோடிக்கு சொகுசு பங்களா ஒன்றை அவரது மகன் ஆனந்த் அம்பானி வாங்கினார்.

    இந்தநிலையில் துபாயில் முகேஷ் அம்பானி மீண்டும் ஒரு சொகுசு பங்களாவை வாங்கி உள்ளார். துபாயின் பாம் ஜூமேரா தீவில் ரூ.1352 கோடிக்கு பங்களாவை வாங்கி இருக்கிறார். முன்பு வாங்கிய பங்களாவை விட இரண்டு மடங்கு விலை அதிகமாகும்.

    இந்த சொகுசு பங்களாவை குவைத்தை சேர்ந்த அல்ஷாயா குழுமத்தின் தலைவராக உள்ள முகமது அல்ஷாயாவிடம் இருந்து முகேஷ் அம்பானி கடந்த வாரம் வாங்கியதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

    மகன் ஆனந்த் அம்பானிக்காக வாங்கிய வீடும், தற்போது புதிதாக வாங்கியுள்ள வீடும் அருகருகே இருப்பதாக கூறப்படுகிறது.

    இந்த சொகுசு பங்களாவில் 10 படுக்கை அறைகள், ஒரு ஸ்பா, உட்புறம், வெளிப்புறங்களில் நீச்சல் குளங்கள் உள்ளன.

    சமீப காலமாக வெளிநாடுகளில் சொத்துக்களை வாங்குவதில் முகேஷ் அம்பானி மிகவும் ஆர்வமாக இருந்து வருகிறார். கடந்த ஆண்டு இங்கிலாந்தில் உள்ள ஸ்டோக்பார்க் என்ற கிளப்பை ரூ.656 கோடிக்கு வாங்கினார்.

    • டி20 பேட்டிங் தரவரிசையில் ஸ்மிருதி மந்தனா முதல் முறையாக 2-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
    • பந்துவீச்சாளர்க்கான தரவரிசையில் தீப்தி சர்மா முதல் முறையாக 2-வது இடத்துக்கு முன்னேறினார்.

    துபாய்:

    பெண்கள் டி20 போட்டிக்கான தரவரிசை பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டது. இதில் பேட்டிங் தரவரிசையில் இந்திய அணியின் நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா (730 ரேட்டிங் புள்ளி) முதல் முறையாக 2-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

    பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் ஆஸ்திரேலிய வீராங்கனை பெத் மூனியை (743 ரேட்டிங் புள்ளி) விட மந்தனா 13 புள்ளிகள் மட்டுமே பின்தங்கியுள்ளார். 3-வது இடத்தில் மற்றொரு ஆஸ்திரேலிய வீராங்கனை மெக் லானிங் உள்ளார்.

    இந்தப் பட்டியலில் இந்திய வீராங்கனைகள் ஷபாலி வர்மா 7-வது இடத்திலும், ஜெமிமா 8-வது இடத்திலும் உள்ளனர்.

    அதேபோல், பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசை பட்டியலில் தீப்தி சர்மா முதல் முறையாக 2-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். அவருக்கு அடுத்தபடியாக சக இந்திய வீராங்கனை ரேணுகா சிங் உள்ளார்.

    • சர்வதேச சந்தையில் மெல்ல இதனை அறிமுகப்படுத்தும் முயற்சியில் இறங்கி இருக்கிறோம்.
    • அடுத்த தலைமுறைக்கான பறக்கும் காருக்கான முக்கிய அடித்தளம் ஆக இந்த சோதனை அமையும் என அந்நிறுவனத்தினர் கூறியுள்ளனர்.

    சீனாவின் எக்ஸ்பெங் ஏரோத் என்ற நிறுவனம் மின்சாரத்தில் இயங்க கூடிய பறக்கும் கார்களை வடிவமைக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளது. இந்த மின்சார கார்களை சர்வதேச சந்தைகளில் அறிமுகப்படுத்தும் முயற்சியிலும் ஈடுபட்டு உள்ளது.

    இதன்படி எக்ஸ்2 என்ற பெயரிடப்பட்ட 2 பேர் அமர்ந்து செல்ல கூடிய பறக்கும் கார் ஒன்று, முதன்முறையாக பொதுமக்கள் முன்னிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் நகரில் பறந்து சென்றது.

    ஒரு மூலைக்கு இரண்டு என மொத்தம் நான்கு மூலைகளிலும் எட்டு மின்சார இறக்கைகள் இந்த காரில் இணைக்கப்பட்டு உள்ளன. அவை இந்த காரை மேலே எழும்ப செய்வதற்கும், தரையில் கீழே இறங்குவதற்கும் உதவி புரியும்.

    துபாயில் இந்த பறக்கும் காரின் சோதனை ஓட்டம் ஒன்றரை மணிநேரம் நடத்தப்பட்டது. அதில் ஆளில்லாமல் கார் இயக்கப்பட்டது.

    இதுபற்றி எக்ஸ்பெங் நிறுவனத்தின் பொது மேலாளர் மின்குவான் கியூ செய்தியாளர்களிடம் கூறும்போது, சர்வதேச சந்தையில் மெல்ல இதனை அறிமுகப்படுத்தும் முயற்சியில் இறங்கி இருக்கிறோம்.

    இதற்காக துபாயை நாங்கள் முதலில் தேர்வு செய்தோம். ஏனெனில், உலகில் புதுமையான நகராக துபாய் உள்ளது. அடுத்த தலைமுறைக்கான பறக்கும் காருக்கான முக்கிய அடித்தளம் ஆக இந்த சோதனை அமையும் என அந்நிறுவனத்தினர் கூறியுள்ளனர்.

    • ஐ.சி.சி.யின் பிளேயர் ஆஃப் தி மன்த் விருது பட்டியலில் இந்திய வீரர் அக்சர் பட்டேல் இடம் பிடித்துள்ளார்.
    • பெண்களுக்கான சிறந்த வீராங்கனைகள் பட்டியலில் இந்தியாவின் ஹர்மன்பிரீத் கவுர், ஸ்மிருதி மந்தனா இடம் பெற்றனர்.

    துபாய்:

    சர்வதேச கிரிக்கெட் போட்டியில் சிறப்பாக விளையாடும் வீரர்களை மாதம் தோறும் கவுரவிக்கும் வகையில் ஒவ்வொரு மாதத்திலும் சிறப்பாக விளையாடிய சிறந்த வீரரை தேர்வு செய்து ஐசிசி அறிவித்து வருகிறது.

    இந்நிலையில், செப்டம்பர் மாதத்திற்கான சிறந்த வீரர் யார் என்பதை அடையாளம் காண்பதற்காக 3 வீரர்கள் பெயரை ஐசிசி அறிவித்துள்ளது. இந்தப் பட்டியலில் இந்திய வீரர் அக்சர் பட்டேல், பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான் மற்றும் ஆஸ்திரேலிய அணியின் ஆல் ரவுண்டர் கேமரூன் கிரீன் ஆகியோரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.

    இந்திய ஆல்ரவுண்டர் அக்சர் பட்டேல் சொந்த மண்ணில் நடந்த ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான டி20 தொடரில் தனது அபாரமான பந்துவீச்சின் மூலம் பல விக்கெட்டுகளை வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    டி20 தரவரிசையில் நம்பர் 1 இடத்தில் உள்ள ரிஸ்வான் ஆசிய கோப்பை மற்றும் பாகிஸ்தான் மண்ணில் நடந்து முடிந்த 7 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் அதிக ரன்கள் அடித்துள்ளார்.

    ஆஸ்திரேலிய ஆல் ரவுண்டர் கேமரூன் கிரீன் நியூசிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு எதிரான தொடர்களில் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தியன் மூலம் இந்தப்பட்டியலில் இடம் பிடித்துள்ளார்.

    இந்த மூன்று வீரர்களில் ஒருவர் ரசிகர்கள் வாக்களிப்பதன் அடிப்படையில் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார்.

    இதேபோல், பெண்களுக்கான சிறந்த வீராங்கனைகள் பட்டியலில் இந்தியாவின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், இந்திய துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா மற்றும் வங்காளதேச அணியின் கேப்டன் நிகார் சுல்தானா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இவர்களில் ஒருவர் ரசிகர்கள் வாக்களிப்பதன் அடிப்படையில் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார்.

    • தினமும் 1,200 பக்தர்கள் வரை வழிபாடு செய்யலாம்.
    • கூட்ட நெரிசலை தவிர்க்க கியூஆர் குறியீடு அடிப்படையில் முன்பதிவு முறையை கோவில் நிர்வாகம் செயல்படுத்தியுள்ளது.

    துபாயில் உள்ள ஜெபல் அலி பகுதியில் புதிதாக கட்டப்பட்ட இந்து கோவில் திறக்கப்பட்டுள்ளது. இக்கோவில், ஏற்கனவே உள்ள சிந்திகுரு தர்பார் கோவிலின் விரிவாக்கம் ஆகும்.

    ஜெபல் அலி பகுதியில் தேவாலயங்கள் மற்றும் சீக்கிய குருத்வாரா உள்ள நிலையில் புதிய இந்து கோவில் கட்டப்பட்டுள்ளது. இன்று முதல் பொதுமக்கள் பார்வைக்காக கோவில் அதிகாரப்பூர்வமாக திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    தினமும் 1,200 பக்தர்கள் வரை வழிபாடு செய்யலாம். கூட்ட நெரிசலை தவிர்க்க கியூஆர் குறியீடு அடிப்படையில் முன்பதிவு முறையை கோவில் நிர்வாகம் செயல்படுத்தியுள்ளது.

    • கடந்த 2020 ஆண்டு கோவில் கட்டுமானத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.
    • அனைத்து மதத்தினருக்கும் அனுமதி வழங்கப் பட்டுள்ளது.

    துபாய்:

    துபாயின் ஜெபல் அலி பகுதியில் கட்டப்பட்டுள்ள புதிய இந்து கோவிலை ஐக்கிய அரபு அமீரக அரசின்  சகிப்புத்தன்மைத்துறை அமைச்சர் ஷேக் நஹ்யான் பின் முபாரக் அல் நஹ்யான் நேற்று திறந்து வைத்துள்ளார். இந்த கோவில் சிந்தி குரு தர்பாரின் மிக பழமை வாய்ந்த கோயிலாகும். 

    இதை புதுப்பிக்கும் நடவடிக்கையாக கடந்த 2020 ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டது. இந்த கோயில் நேற்று திறக்கப்பட்டுள்ளதன் மூலம் துபாய் வாழ் இந்தியர்களின் 10 ஆண்டு கால கனவு நிறைவேறியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த கோயிலின் உட்புறத்தில் 16 தெய்வங்கள் இடம் பெற்றுள்ளதாகவும், அனைத்து மதத்தினர் வழிபாடு நடத்தவும், மற்றும் பிற பார்வையாளர்களுக்கும் இங்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    வெள்ளை பளிங்குக் கற்களால் கட்டப்பட்டுள்ள இந்த கோயிலின் தூண்கள் மற்றும் முகப்பு பகுதி அரபு மற்றும் இந்து முறைப்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. பிரார்த்தனை மண்டபத்தில் இளம் சிவப்பு தாமரை முப்பரிமாண வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் ஏராளமான மணிகளும் அங்கு தொங்க விடப்பட்டுள்ளன.

    காலை 6:30 முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும் இந்த கோவிலுக்கு வருவதற்கு முன்பு பக்தர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் முன்பதிவு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. QR-குறியீடு அடிப்படையில் முன்பதிவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    • மகளிர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் அடுத்த ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் பிப்ரவரி 10-ம் தேதி தொடங்குகிறது.
    • இந்திய அணி தனது முதல் போட்டியில் பிப்ரவரி 12-ம் தேதி பாகிஸ்தானை சந்திக்கவுள்ளது.

    துபாய்:

    ஐசிசி சார்பில் மகளிர்க்கான 8-வது டி 20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு தென் ஆப்பிரிக்க மண்ணில் பிப்ரவரி 10 முதல் 26ம் தேதி வரை நடக்கவுள்ளது.

    மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இந்த தொடருக்கான போட்டி அட்டவணையை ஐசிசி நேற்று வெளியிட்டது.

    இந்தத் தொடரில் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி குரூப் 2-ல் இடம் பெற்றுள்ளது. இதில் இங்கிலாந்து, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், அயர்லாந்து அணிகளும் உள்ளன.

    குரூப் 1-ல் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென் ஆப்ரிக்கா, இலங்கை, வங்கதேச அணிகள் உள்ளன.

    இந்திய அணி பிப்ரவரி 12-ம் தேதி தனது முதல் போட்டியில் பாகிஸ்தானை சந்திக்கவுள்ளது. அடுத்தடுத்த போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் (பிப்ரவரி 15), இங்கிலாந்து (பிப்ரவரி 18), அயர்லாந்து (பிப்ரவரி 20) அணிகளை இந்திய அணி சந்திக்கிறது.

    23 பிப்ரவரி அரை-இறுதி 1 கேப் டவுன், 24 பிப்ரவரி- ரிசர்வ் டே கேப் டவுன்

    24 பிப்ரவரி அரை-இறுதி 2 கேப் டவுன், 25 பிப்ரவரி- ரிசர்வ் டே கேப் டவுன்

    26 பிப்ரவரி- இறுதி கேப் டவுன், 27 பிப்ரவரி ரிசர்வ் டே கேப் டவுன்.

    • டி20 கிரிக்கெட் போட்டியின் தரவரிசை பட்டியலில் இந்திய அணி முதலிடத்தில் நீடித்து வருகிறது.
    • இந்தியாவுக்கு எதிரான தொடரை இழந்த ஆஸ்திரேலியா 6-வது இடத்தில் உள்ளது.

    துபாய்:

    டி20 கிரிக்கெட் போட்டியின் அடிப்படையில் அணிகளின் புதிய தரவரிசைப் பட்டியலை ஐ.சி.சி. நேற்று வெளியிட்டது.

    இந்நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரை வென்ற இந்திய அணி (268 புள்ளிகள்) ஒரு புள்ளி அதிகரித்து முதலிடத்தில் நீடிக்கிறது.

    2-வது இடத்தில் இங்கிலாந்து (261 புள்ளி) உள்ளது. தென்ஆப்பிரிக்கா (258 புள்ளி) 3-வது இடத்திலும், பாகிஸ்தான் (258 புள்ளி) 4-வது இடத்திலும், நியூசிலாந்து (252 புள்ளி) 5-வது இடத்திலும் தொடருகின்றன.

    இந்தியாவுக்கு எதிரான தொடரை இழந்த ஆஸ்திரேலியா (250 புள்ளி) ஒரு புள்ளி குறைந்து 6-வது இடத்திலும், வெஸ்ட்இண்டீஸ் (241 புள்ளி) 7-வது இடத்திலும், இலங்கை (237 புள்ளி) 8-வது இடத்திலும், வங்காளதேசம் (224 புள்ளி) 9-வது இடத்திலும், ஆப்கானிஸ்தான் (219 புள்ளி) 10-வது இடத்திலும் உள்ளன.

    • முதல் உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் தொடரில் நியூசிலாந்து சாம்பியன் பட்டம் வென்றது.
    • அடுத்த இரு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியை இங்கிலாந்து நடத்துகிறது.

    துபாய்:

    முதலாவது உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்தின் சவுத்தம்டன் நகரில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடந்தது. இதில் நியூசிலாந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.

    இந்நிலையில், அடுத்த இரு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியை நடத்தும் வாய்ப்பையும் இங்கிலாந்துக்கே ஒதுக்குவது என்று முடிவு செய்யப்பட்டிருப்பதாக ஐ.சி.சி. தலைமை செயல் அதிகாரி ஜெப் அலார்டிஸ் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

    இதன்படி 2023-ம் ஆண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதி ஆட்டம் லண்டன் ஓவலிலும், 2025-ம் ஆண்டு இறுதிப்போட்டி லண்டன் லார்ட்சிலும் நடைபெறுகிறது. இதற்கான தேதி விவரம் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

    இரண்டாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான புள்ளிப்பட்டியலில் ஆஸ்திரேலியா 70 சதவீத புள்ளிகளுடன் முதலிடத்திலும், தென் ஆப்பிரிக்கா 2-வது இடத்திலும், இலங்கை 3-வது இடத்திலும், இந்தியா 4-வது இடத்திலும், பாகிஸ்தான் 5-வது இடத்திலும் உள்ளன.

    • ஐ.சி.சி. டி20 பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் சூர்யகுமார் யாதவ் முன்னேற்றம் கண்டுள்ளார்.
    • ஆல் ரவுண்டர்களுக்கான தரவரிசையில் ஹர்திக் பாண்டியா மீண்டும் முதல் 5 இடங்களுக்குள் நுழைந்துள்ளார்.

    துபாய்:

    மொகாலியில் நடந்த முதல் டி20 போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியிடம் வீழ்ந்தது. இருப்பினும் இந்த போட்டியில் இந்திய பேட்ஸ்மேன்கள் மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தனர். சூர்யகுமார் யாதவ் 46 ரன்கள் (25 பந்துகள்), லோகேஷ் ராகுல் 55 ரன்கள் (35 ரன்கள்) என சிறப்பான பங்களிப்பை வழங்கி இருந்தனர்.

    இந்நிலையில், ஆண்களுக்கான ஐசிசி டி20 பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் பாபர் அசாமை பின்னுக்குத் தள்ளி சூர்யகுமார் யாதவ் (780 ரேட்டிங் புள்ளி) 3-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

    இந்தப் பட்டியலில் முதல் இடத்தில் பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான் (825 ரேட்டிங் புள்ளி) உள்ளார். 2-வது இடத்தில் தென் ஆப்பிரிக்க அணியின் ஐடன் மார்க்ராம் உள்ளார். லோகேஷ் ராகுல் 5 இடங்கள் முன்னேறி 18-வது இடத்தை பிடித்துள்ளார். ரோகித் சர்மா 14-வது இடத்திலும் கோலி 16-வது இடத்திலும் அங்கம் வகிக்கின்றனர்.

    அதேபோல், டி20 ஆல் ரவுண்டர்களுக்கான தரவரிசை பட்டியலில் ஹர்திக் பாண்டியா மீண்டும் முதல் 5 இடங்களுக்குள் நுழைந்துள்ளார். அவர் தற்போது 180 ரேட்டிங் புள்ளிகளுடன் 5-வது இடத்தில் உள்ளார்.

    • சமீபத்தில் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் மந்தனா 111 ரன்கள் எடுத்தார்.
    • டி20 தரவரிசையில் ஸ்மிருதி மந்தனா முதல் முறையாக 2-வது இடத்துக்கு முன்னேறினார்.

    துபாய்:

    பெண்கள் டி20 போட்டிக்கான தரவரிசை பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டது. இதில் பேட்டிங் தரவரிசையில் ஆஸ்திரேலிய அணியின் பெத் மூனி முதல் இடத்தைப் பிடித்துள்ளார். இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா முதல் முறையாக 2-வது இடத்தைக் கைப்பற்றியுள்ளார்.

    சமீபத்தில் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் மந்தனா 111 ரன்கள் எடுத்ததால் முன்னேற்றம் கண்டுள்ளார். இந்தியாவின் ஷபாலி வர்மா 6-ம் இடத்தில் உள்ளார்.

    ஒருநாள் தரவரிசையில் மந்தனா 7-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

    டி20 தரவரிசையில் பந்துவீச்சில் இந்தியாவின் தீப்தி வர்மா 7-வது இடத்தில் உள்ளார். இதேபோல, ஆல்-ரவுண்டருக்கான பட்டியலில் இந்திய அணியின் தீப்தி வர்மா 3-வது இடத்தில் நீடிக்கிறார்.

    • ஆகஸ்ட் மாதத்திற்கான சிறந்த வீரராக ஜிம்பாப்வேயின் சிக்கந்தர் ராசா தேர்வு செய்யப்பட்டார்.
    • சிறந்த வீராங்கனையாக ஆஸ்திரேலியாவின் தஹ்லியா மெக்ராத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    துபாய்:

    சர்வதேச கிரிக்கெட் போட்டியில் சிறப்பாக விளையாடும் வீரர்களை மாதம் தோறும் கவுரவிக்கும் வகையில் ஒவ்வொரு மாதத்திலும் சிறப்பாக விளையாடிய சிறந்த வீரரை தேர்வு செய்து ஐசிசி அறிவித்து வருகிறது.

    இதற்கிடையே, ஆகஸ்ட் மாதத்திற்கான சிறந்த வீரர் யார் என்பதை அடையாளம் காண்பதற்கான வீரர், வீராங்கனைகள் பெயர்களை ஐ.சி.சி. சமீபத்தில் பரிந்துரைத்தது. சிறந்த வீரருக்கான பட்டியலில் இங்கிலாந்து அணியின் பென் ஸ்டோக்ஸ், ஜிம்பாப்வே அணியின் சிக்கந்தர் ராசா மற்றும் நியூசிலாந்து அணியின் மிட்செல் சான்ட்னர் பரிந்துரைக்கப்பட்டு இருந்தனர். சிறந்த வீராங்கனைகளுக்கான பட்டியலில் ஆஸ்திரேலியாவின் மெக்ராத், பெத் மூனி மற்றும் இந்தியாவின் ஜெமிமா ரோட்ரிக்ஸ் பரிந்துரைக்கப்பட்டு இருந்தனர்.

    இந்நிலையில், ரசிகர்கள் வாக்களிப்பின் அடிப்படையில் இதன் வெற்றியாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.

    அதன்படி, ஆகஸ்ட் மாதத்திற்கான சிறந்த வீரராக ஜிம்பாப்வேயின் சிக்கந்தர் ராசா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் ஐ.சி.சி.யின் மாதாந்திர சிறந்த வீரர் வென்ற முதல் ஜிம்பாப்வே வீரர் என்ற பெருமையை சிக்கந்தர் ராசா பெற்றுள்ளார்.

    மேலும், ஆஸ்திரேலியாவின் தஹ்லியா மெக்ராத் சிறந்த வீராங்கனையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    ×