search icon
என் மலர்tooltip icon

    துபாய்

    • இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து வென்றது.
    • இதனால் நியூசிலாந்து அணி புள்ளிப்பட்டியலில் சிறிது முன்னேற்றம் கண்டது.

    துபாய்:

    இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி பெங்களூருவில் நடைபெற்றது. இதில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அத்துடன் டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.

    இந்நிலையில், இந்த டெஸ்ட் தொடருக்கு பிறகு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலை ஐ.சி.சி வெளியிட்டது.

    இதில் 12 போட்டிகளில் விளையாடியுள்ள இந்தியா 8 போட்டிகளில் வெற்றி, 3 போட்டிகளில் தோல்வி என 68.06 சதவீதத்துடன் புள்ளிப் பட்டியலில் தொடர்ந்து முதல் இடத்தில் நீடிக்கிறது. ஆஸ்திரேலியா 2-வது இடத்திலும், இலங்கை 3-வது இடத்திலும் நீடிக்கிறது.

    இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் வென்றதை தொடர்ந்து நியூசிலாந்து 6வது இடத்திலிருந்து 4வது இடத்துக்கு முன்னேறியது.

    இங்கிலாந்து 5-வது இடத்திலும், தென் ஆப்பிரிக்கா 6-வது இடத்திலும் உள்ளன. வங்கதேசம், பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் ஆகியவை 7, 8, 9-ம் இடத்தில் உள்ளன.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இது குறித்த புகார்களின் பேரில் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது.
    • தப்பியோடிய சவுரப் சந்திரசேகரை அமலாக்கத்துறை வலை வீசி தேடி வந்தனர்.

    சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த சவுரப் சந்திரகர் மற்றும் அவரது நண்பரான ரவிஉப்பல் ஆகிய இருவரும் கடந்த 2018-ம் ஆண்டு துபாய் சென்று அங்கு மகாதேவ் என்ற பெயரில் சூதாட்ட செயலியை உருவாக்கினர். இதில் போக்கர், டென்னிஸ், பாட்மிட்டன், கால்பந்து உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளின் பேரில் சூதாட்டம் நடத்தப்பட்டது.

    இந்தியாவின் வட மாநிலங்களில் இதில் பெட் கட்டிய லட்சக்கணக்கானோர் தங்களது பணத்தை இழந்தனர். சுமார் ரூ.5000 கோடி வரை இந்த செயலி மூலம் மோசடி நடந்துள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்த புகார்களின் பேரில் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது.

    மும்பை, கோல்கட்டா, போபால் உள்ளிட்ட 39 இடங்களில் சோதனை கடந்த மாதம் அமலாக்கத்துறை சோதனை நடத்திய நிலையில் தப்பியோடிய சவுரப் சந்திரசேகரை வலை வீசி தேடி வந்தனர். இந்நிலையில் சந்திரசேகர் துபாயில் பதுங்கியுள்ளதாகக் கிடைத்த தகவலை அடுத்து இன்று [அக்டோபர் 11] இன்டர்போல் உதவியுடன் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

    இன்னும் ஒரு வாரத்துக்குள் சந்திரசேகர் இந்தியா அழைத்து வரப்படலாம் என்று அமலாக்கத்துறை தரப்பிலிருந்து தகவல் வெளியாகியுள்ளது.

    • நூற்றுக்கணக்கான வாக்கி டாக்கிகள் வெடித்தன.
    • ஐக்கிய அரபு அமீரகத்தின் மிகப்பெரிய விமான நிறுவனமான எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் அறிக்கை வெளியிட்டுள்ளது.

    துபாய்:

    லெபனானில் கடந்த மாதம் 17-ந் தேதி ஹிஸ்புல்லா அமைப்பினர் பயன்படுத்தி வந்த நூற்றுக்கணக்கான பேஜர்கள் ஒரே நேரத்தில் வெடித்தன. அதற்கு அடுத்த நாளே நூற்றுக்கணக்கான வாக்கி டாக்கிகள் வெடித்தன. இந்த 2 சம்பவங்களிலும் 37 பேர் பலியாகினர்.

    இந்த நிலையில் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானங்களில் பேஜர் மற்றும் வாக்கி டாக்கிகளை எடுத்து செல்ல அந்த நிறுவனம் தடைவிதித்துள்ளது.

    இது தொடர்பாக ஐக்கிய அரபு அமீரகத்தின் மிகப்பெரிய விமான நிறுவனமான எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "துபையிலிருந்து அல்லது துபை வழியாக செல்லும் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானங்களில் பயணம் செய்யும் பயணிகள் அனைவரும் பேஜர்கள் மற்றும் வாக்கி டாக்கிகளைத் தங்களுடன் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்படுகிறது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • டெஸ்ட் போட்டிக்கான பந்துவீச்சு தரவரிசையில் பும்ரா முதல் இடம் பிடித்தார்.
    • அவரை தொடர்ந்து அஸ்வின் இரண்டாவது இடத்தில் உள்ளார்.

    துபாய்:

    வங்கதேசம் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்தியா 2-0 என கைப்பற்றி அசத்தியது.

    இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான பும்ரா அபாரமான பந்து வீச்சை வெளிப்படுத்தினார். முதல் போட்டியில் 5 விக்கெட், 2-வது போட்டியில் 6 விக்கெட் என மொத்தம் 11 விக்கெட் சாய்த்தார்.

    இந்நிலையில், டெஸ்ட் போட்டி பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் இந்தியாவின் பும்ரா முதல் இடத்தை பிடித்துள்ளார்.

    அவரை தொடர்ந்து அஸ்வின் 2வது இடத்தில் நீடிக்கிறார். ஹேசில்வுட் 3வது இடத்திலும், கம்மின்ஸ் 4வது இடத்திலும் உள்ளார். ரபடா 5-வது இடத்தில் நீடிக்கிறார்.

    • வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என இந்தியா கைப்பற்றியது.
    • டெஸ்ட் தொடரில் தோல்வி அடைந்த வங்கதேசம் புள்ளிப்பட்டியலில் 7வது இடத்துக்கு சரிந்தது.

    துபாய்:

    இந்தியா, வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி கான்பூரில் நடைபெற்றது. இதில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அத்துடன் டெஸ்ட் தொடரை 2-0 என முழுமையாக கைப்பற்றி அசத்தியது.

    இந்நிலையில், இந்த டெஸ்ட் தொடருக்கு பிறகு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலை ஐ.சி.சி வெளியிட்டது.

    இதில் 11 போட்டிகளில் விளையாடியுள்ள இந்தியா 8 போட்டிகளில் வெற்றி, 2 போட்டிகளில் தோல்வி என 74.24 சதவீதத்துடன் புள்ளிப் பட்டியலில் தொடர்ந்து முதல் இடத்தில் நீடிக்கிறது. ஆஸ்திரேலியா 2-வது இடத்தில் நீடிக்கிறது.

    நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்ற இலங்கை 3-வது இடத்தில் உள்ளது.

    இங்கிலாந்து 4-வது இடத்திலும், தென் ஆப்பிரிக்கா 5-வது இடத்திலும், நியூசிலாந்து 6-வது இடத்திலும் உள்ளன.

    டெஸ்ட் தொடரை இழந்த வங்கதேசம் 5-வது இடத்தில் இருந்து சரிந்து 7வது இடத்துக்கு சரிந்தது.

    பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் ஆகியவை 8, 9-ம் இடத்தில் உள்ளன.

    • நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இலங்கை கைப்பற்றியது.
    • டெஸ்ட் தொடரில் தோல்வி அடைந்த நியூசிலாந்து புள்ளிப்பட்டியலில் 7வது இடத்துக்கு சரிந்தது.

    துபாய்:

    இலங்கை, நியூசிலாந்து இடையிலான 2வது டெஸ்ட் போட்டி காலேவில் நடைபெற்றது. இதில் இலங்கை அணி இன்னிங்ஸ் மற்றும் 154 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அத்துடன் டெஸ்ட் தொடரை 2-0 என கைப்பற்றி அசத்தியது.

    இந்நிலையில், இந்த டெஸ்ட் தொடருக்கு பிறகு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலை ஐ.சி.சி வெளியிட்டது.

    இதில் 10 போட்டிகளில் விளையாடியுள்ள இந்தியா 7 போட்டிகளில் வெற்றி, 2 போட்டிகளில் தோல்வி என 71.67 சதவீதத்துடன் புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறது. ஆஸ்திரேலியா 2-வது இடத்தில் நீடிக்கிறது.

    நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்டை வென்ற இலங்கை 3-வது இடத்தில் உள்ளது.

    டெஸ்ட் தொடரில் தோல்வி அடைந்த நியூசிலாந்து 3 இடங்கள் சரிந்து 7-வது இடத்திற்கு சென்றது.

    இங்கிலாந்து 4-வது இடத்திலும், வங்கதேசம் 5-வது இடத்திலும், தென் ஆப்பிரிக்கா 6-வது இடத்திலும் உள்ளன.

    நியூசிலாந்து, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் ஆகியவை 7, 8, 9-ம் இடத்தில் உள்ளன.

    • தனியுரிமை காரணங்களுக்காக தீவின் சரியான இடத்தை பகிரவில்லை.
    • சமூகவலைதளத்தில் வீடியோ வைரலாகி வருகிறது.

    துபாயை சேர்ந்தவர் தொழிலதிபர் ஜமால் அல்நடக். கோடீஸ்வரரான இவரது மனைவி சவுதிஅல்நடக் (வயது 26). இங்கிலாந்தில் பிறந்த சவுதி அல்நடக் துபாயில் படித்துக்கொண்டிருந்த போது ஜமால் அல்நடக்கை சந்தித்துள்ளார். பின்னர் இருவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆனது.


    மனைவி மீது மிகவும் அன்பு கொண்ட ஜமால் அல்நடக், அவருக்காக ஏராளமான பரிசு பொருட்களை வழங்கி உள்ளார்.

    இந்நிலையில் தனது மனைவி நீச்சல் (பிகினி) உடையில் குளிப்பதற்காக ஆசைப்பட்ட நிலையில் அவருக்காக ஜமால் அல்நடக் ஒரு தீவையே விலைக்கு வாங்கியுள்ளார்.

    இதுதொடர்பாக சவுதி அல்நடக் அந்த தனியார் தீவின் வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ 24 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது.

    தனியுரிமை மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக தீவின் சரியான இருப்பிடத்தை வெளியிட சவுதிஅல்நடக் மறுத்து விட்டடார். ஆனால் தனக்காக தனது கணவர் ஜமால் அல்நடக் தீவை வாங்குவதற்காக 50 மில்லியன் டாலர் (இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் ரூ. 418 கோடி) செலவிட்டதாக கூறியுள்ளார்.

    இதுகுறித்து சவுதிஅல்நடக் கூறுகையில், எனது கணவர் வாங்கிய தீவு ஆசியாவில் உள்ளது. தனியுரிமை காரணங்களுக்காக நாங்கள் தீவின் சரியான இடத்தை பகிர்ந்து கொள்ள விரும்பவில்லை என்றார்.

    ஏற்கனவே சவுதிஅல்நடக் தனது ஆடம்பர வாழ்க்கை தொடர்பான வீடியோக்களை சமூகவலைதளங்களில் வெளியிட்டு வந்தவர் ஆவார்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு சவுதிஅல்நடக்கின் பிறந்தநாளன்று அவரது கணவர் ரூ.60 லட்சம் மதிப்புள்ள பொருட்களை பரிசாக கொடுத்ததாக சவுதிஅல்நடக் வீடியோ வெளியிட்டிருந்தார்.


    அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி இருந்தது. அதில் சவுதி அல்நடக் ஷாப்பிங் செய்வதற்காக ரூ.12 லட்சம் செலவழித்தாகவும், கணவருடன் ரூ.1 லட்சம் செலவழித்து இரவு விருந்து சாப்பிட்டதாகவும் கூறியிருந்தார்.

    மேலும் ஹெர்ம்ஸ் பிராண்ட்டின் ஷோரூமுக்கு மனைவியை அழைத்து சென்ற ஜமால் அங்கே ரூ.29 லட்சம் மதிப்புள்ள பரிசு பொருட்களை வாங்கி கொடுத்துள்ளார்.

    இதைத்தவிர அழகு சிகிச்சைகளுக்காக செலவழித்த பணம் உள்பட ஒரே நாளில் தனக்காக ரூ.60 லட்சம் வரை செலவழித்ததாக சவுதி அல்நடக் வீடியோவில் கூறியிருந்தார். அந்த வீடியோ வைரலான நிலையில் நெட்டிசன்கள் பலரும் அவரை விமர்சித்து பதிவிட்டிருந்தனர்.

    இந்நிலையில் தற்போது அவர் மீண்டும் வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.

    இதுதொடர்பாக, சவுதி அல்நடக் கூறுகையில், எனது வாழ்க்கை முறையை அனைவருடனும் பகிர்ந்து கொள்ள விரும்புவதாக எனக்கு ஏன் இவ்வளவு வெறுப்பு வருகிறது என்று எனக்கு புரியவில்லை என கூறியுள்ளார்.

    • நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் இலங்கை வெற்றி பெற்றது.
    • டெஸ்டில் தோல்வி அடைந்த நியூசிலாந்து புள்ளிப் பட்டியலில் சரிவை சந்தித்தது.

    துபாய்:

    இலங்கை, நியூசிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் போட்டி காலேவில் நடைபெற்றது. இதில் இலங்கை அணி 63 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. அத்துடன் டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.

    இந்நிலையில், இந்த டெஸ்ட் தொடருக்கு பிறகு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலை ஐ.சி.சி வெளியிட்டுள்ளது.

    இதில் 10 போட்டிகளில் விளையாடியுள்ள இந்தியா 7 போட்டிகளில் வெற்றி, 2 போட்டிகளில் தோல்வி என 71.67 சதவீதத்துடன் புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறது. ஆஸ்திரேலியா 2-வது இடத்தில் நீடிக்கிறது.

    நியூசிலாந்துக்கு எதிராக வெற்றி பெற்ற இலங்கை ஒரு இடம் உயர்ந்து 3-வது இடத்திற்கு முன்னேறியது. தோல்வி அடைந்த நியூசிலாந்து ஒரு இடம் சரிந்து 4வது இடத்திற்கு சென்றது.

    இங்கிலாந்து 5-வது இடத்திலும், வங்கதேசம் 6-வது இடத்திலும் உள்ளன. தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் ஆகியவை 7, 8, 9-ம் இடத்தில் உள்ளன.

    • வங்கதேசக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்தியா அபார வெற்றி பெற்றது.
    • டெஸ்டில் தோல்வி அடைந்த வங்கதேசம் புள்ளிப் பட்டியலில் சரிவை சந்தித்தது.

    துபாய்:

    இந்தியா, வங்கதேசம் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்றது. இதில் இந்திய அணி 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அத்துடன் டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.

    இந்நிலையில், இந்த டெஸ்ட் தொடருக்கு பிறகு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலை ஐ.சி.சி வெளியிட்டுள்ளது.

    இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் தோல்வி அடைந்த வங்கதேசம் 6-வது இடத்திற்கு சரிந்தது.

    இதில் 10 போட்டிகளில் விளையாடியுள்ள இந்தியா 7 போட்டிகளில் வெற்றி, 2 போட்டிகளில் தோல்வி என 71.67 சதவீதத்துடன் புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறது.

    இந்தப் பட்டியலில் ஆஸ்திரேலியா 2-வது இடத்திலும், நியூசிலாந்து 3-வது இடத்திலும் இடத்திலும் உள்ளது. இலங்கை 4வது இடத்திலும், இங்கிலாந்து 5வது இடத்திலும் உள்ளது.

    தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் ஆகியவை 7, 8, 9-ம் இடத்தில் உள்ளன.

    • ஆகஸ்ட் மாத சிறந்த வீரருக்கான விருது துனித் வெல்லாலகேவுக்கு அளிக்கப்பட்டது.
    • சிறந்த வீராங்கனைக்கான விருதினை இலங்கை அணியின் ஹர்ஷிதா வென்றார்.

    துபாய்:

    ஒவ்வொரு மாதமும் சிறந்த கிரிக்கெட் வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்து ஐ.சி.சி. கவுரவித்து வருகிறது.

    ஆகஸ்ட் மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்ய தலா 3 வீரர் மற்றும் வீராங்கனைகளை ஐ.சி.சி அறிவித்தது.

    வீரர்கள் பட்டியலில் வெஸ்ட் இண்டீசின் ஜெய்டன் சீல்ஸ், தென் ஆப்பிரிக்காவின் கேசவ் மகராஜ், இலங்கையின் துனித் வெல்லாலகே ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

    இந்நிலையில், ஆகஸ்ட் மாதத்தின் சிறந்த வீரராக இலங்கையின் துனித் வெல்லாலகே தேர்வு செய்யப்பட்டார். இதேபோல், சிறந்த வீராங்கனையாக இலங்கையின் ஹர்ஷிதா மாதவி தேர்வு செய்யப்பட்டார்.

    ஆகஸ்ட் மாதத்தின் சிறந்த வீரர் மற்றும் வீராங்கனை விருதுகளை இலங்கை அணி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • இன்ஸ்டாகிராமில் விவாகரத்து செய்வதாக கடந்த ஜூலை மாதம் பகிரங்கமாக அறிவித்தார்.
    • மஹ்ரா எம்1 பிராண்டின் கீழ் டைவர்ஸ் வாசனை திரவியத்தை விற்பனை செய்கிறது.

    துபாய் ஆட்சியாளரின் மகளான ஷைக்கா மஹ்ரா பின்த் முகமது பின் ரஷித் அல் மக்தூம் தனது கணவர் ஷேக் மனா பின் முகமது பின் ரஷித் பின் மனா அல் மக்தூமிடம் இருந்து இன்ஸ்டாகிராமில் விவாகரத்து செய்வதாக கடந்த ஜூலை மாதம் பகிரங்கமாக அறிவித்தார்.

    இன்ஸ்டா பதிவில் விவாகரத்து அறிவித்த ஷைக்கா உலகளவில் பிரபலம் அடைந்தார். இந்த நிலையில், தற்போது "டைவர்ஸ்" என்ற பெயரில் வாசனை திரவிய நிறுவனத்தை ஷைக்கா துவங்கியுள்ளார். இந்நிறுவனம் மஹ்ரா எம்1 பிராண்டின் கீழ் டைவர்ஸ் வாசனை திரவியத்தை விற்பனை செய்கிறது.

    புது வகை வாசனை திரவியம் அவரது விவகாரத்தை ஒட்டி நேரடி தொடர்பை ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. விவகாரத்தை போன்றே புதிய வாசனை திரவிய விளம்பரத்தையும் ஷைக்கா தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். 



    • பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரை வங்கதேசம் 2-0 என வென்றது.
    • டெஸ்ட் தொடரை இழந்த பாகிஸ்தான் புள்ளிப் பட்டியலில் கடும் சரிவை சந்தித்தது.

    துபாய்:

    இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரை இங்கிலாந்து 2-0 என வென்று முன்னிலையில் உள்ளது. பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என வங்கதேசம் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது.

    இந்நிலையில், இந்த டெஸ்ட் தொடருக்கு பிறகு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலை ஐ.சி.சி வெளியிட்டுள்ளது.

    டெஸ்ட் தொடரை இழந்த பாகிஸ்தான் 8-வது இடத்திற்கு தள்ளப்பட்டது. டெஸ்ட் தொடரை கைப்பற்றிய வங்கதேசம் 4-வது இடத்திற்கு முன்னேறி உள்ளது.

    இதில் 9 போட்டிகளில் விளையாடியுள்ள இந்தியா 6 போட்டிகளில் வெற்றி, 2 போட்டிகளில் தோல்வி என 74 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறது.

    இந்தப் பட்டியலில் ஆஸ்திரேலியா 2-வது இடத்திலும், நியூசிலாந்து 3-வது இடத்திலும் இடத்திலும் உள்ளது.

    டெஸ்ட் தொடரில் முன்னிலை பெற்ற இங்கிலாந்து கிடுகிடுவென முன்னேறி 5வது இடத்தில் உள்ளது.

    தென் ஆப்பிரிக்கா, இலங்கை, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் ஆகியவை 6, 7, 8, 9-ம் இடத்தில் உள்ளன.

    ×