search icon
என் மலர்tooltip icon

    துபாய்

    • பிப்ரவரி மாதத்திற்கான சிறந்த வீரர் விருதை இந்திய வீரர் ஜெய்ஸ்வால் பெற்றுள்ளார்.
    • இவர் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக செயல்பட்டு பல சாதனைகள் படைத்தார்.

    துபாய்:

    ஒவ்வொரு மாதமும் சிறந்த கிரிக்கெட் வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்து ஐ.சி.சி. கவுரவித்து வருகிறது.

    அதன்படி பிப்ரவரி மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனைகளை தேர்வு செய்ய தலா 3 வீரர் மற்றும் வீராங்கனைகளை ஐசிசி அறிவித்தது.

    சிறந்த வீரர் விருதுக்கான பரிந்துரை பெயர் பட்டியலில் இந்திய இளம் வீரர் ஜெய்ஸ்வால், நியூசிலாந்தின் முன்னணி வீரரான வில்லியம்சன், இலங்கை அணிக்காக சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் முதல் முறையாக இரட்டை சதம் அடித்து அசத்திய பதும் நிசங்கா ஆகியோர் இடம்பெற்றனர்.

    இந்நிலையில், பிப்ரவரி மாதத்திற்கான சிறந்த வீரர் விருதை இந்திய வீரர் ஜெய்ஸ்வால் பெற்றுள்ளார் என ஐசிசி அறிவித்துள்ளது.

    இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக செயல்பட்டு பல சாதனைகள் படைத்ததற்காக இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    பிப்ரவரி மாதத்திற்கான சிறந்த வீராங்கனை விருதை ஆஸ்திரேலிய வீராங்கனை அன்னாபெல் சதர்லேண்ட் பெற்றுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    • ஆர்டர் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் கண் முன்பே தங்க பவுடர் கலந்த கரைசல் பருப்புடன் சேர்த்து நெய் கலந்து பரிமாறப்படுகிறது.
    • துபாயில் உள்ள பிரபல சிட்டி மாலில் சிறப்பு உணவு பரிமாறப்படுகிறது.

    ஓட்டல்கள் ஆனாலும், வீடு ஆனாலும் பருப்பு குழம்பு தயாரிக்கும் போது அதில் காய்கறிகள் சேர்ப்பதை பார்த்திருப்போம். ஆனால் துபாயில் உள்ள ஒரு உணவகத்தில் தயாராகும் சிறப்பு பருப்பு குழம்பு குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    புகழ்பெற்ற சமையல் கலை நிபுணரான ரன்வீர் பிரார் வித்தியாசமான உணவுகளை தயார் செய்வதில் பெயர் பெற்றவர். இவர் துபாயில் நடத்தி வரும் உணவகத்தில் சிறப்பு உணவாக 'தால் கஷ்கான்' என்ற பெயரில் விசேஷமாக பருப்பு குழம்பை தயாரித்து வழங்குகிறார். இந்த பருப்பு குழம்பு ஒரு மரப்பெட்டியில் பிரத்யேகமாக கொண்டு வரப்பட்டு வாடிக்கையாளர்களுக்கு பரிமாறப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் அந்த பருப்பு கரைசலில் 24 காரட் தங்க பவுடர் கலக்கப்படுவது தான். இதனை ஆர்டர் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் கண் முன்பே தங்க பவுடர் கலந்த கரைசல் பருப்புடன் சேர்த்து நெய் கலந்து பரிமாறப்படுகிறது. இந்த சிறப்பு உணவின் விலை இந்திய மதிப்பில் ரூ.1,300 ஆகும்.

    துபாயில் உள்ள பிரபல சிட்டி மாலில் இந்த சிறப்பு உணவு பரிமாறப்படுகிறது. இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி 84 லட்சம் பார்வைகளை குவித்துள்ளது. இதைப்பார்த்த பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அதில் ஒரு பயனர், தங்கம் உடலால் உறிஞ்சப்படுவதில்லை எனவும், மற்றொரு நபர் தங்கத்தின் ஊட்டச்சத்து மதிப்பு என்ன? எனவும் பதிவிட்டுள்ளனர். இது முட்டாள் தனத்தின் உயரம் என ஒரு பயனரும், நம் உடலுக்கு தங்கம் தேவையில்லை, ஒரு சொட்டு தண்ணீர் இந்த தங்கத்தை விட ஆயிரம் மடங்கு சிறந்தது என மற்றொரு பயனரும் பதிவிட்டுள்ளார். இது போன்று பல பயனர்களும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.





    • துபாய் சாம்பியன்ஷிப் தொடர் துபாயில் நடைபெற்றது.
    • நேற்று நடந்த இறுதிப்போட்டியில் யூகோ ஹம்பர்ட் கோப்பை வென்றார்.

    துபாய்:

    துபாய் சாம்பியன்ஷிப் தொடர் துபாயில் நடைபெற்றது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் பிரான்ஸ் வீரர் யூகோ ஹம்பர்ட், கஜகஸ்தான் வீரர் அலெக்சாண்டர் பப்ளிக்குடன் மோதினார்.

    தொடக்கம் முதலே அதிரடியாக ஆடிய ஹம்பர்ட் 6-4, 6-3 என நேர் செட்களில் பப்ளிக்கை எளிதில் வென்று கோப்பையைக் கைப்பற்றி அசத்தினார்.

    • துபாய் சாம்பியன்ஷிப் தொடர் துபாயில் நடைபெற்று வருகிறது.
    • நேற்று நடந்த 2வது அரையிறுதியில் ரஷியாவின் மெத்வதேவ் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

    துபாய்:

    துபாய் சாம்பியன்ஷிப் தொடர் துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ், பிரான்ஸ் வீரர் யூகோ ஹம்பர்ட்டுடன் மோதினார்.

    ஆரம்பம் முதல் சிறப்பாக விளையாடிய ஹம்பர்ட் 7-5, 6-3 என நேற் செட்களில் எளிதில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தினார்.

    இன்று நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் யூகோ ஹம்ர்பட், அலெக்சாண்டர் பப்ளிக்குடன் மோதுகிறார்.

    • துபாய் சாம்பியன்ஷிப் தொடர் துபாயில் நடைபெற்று வருகிறது.
    • இன்று நடந்த அரையிறுதியில் ரஷியாவின் ரூப்லெவ் தோலவி அடைந்தார்.

    துபாய்:

    துபாய் சாம்பியன்ஷிப் தொடர் துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் ரஷியாவின் ஆண்ட்ரே ரூப்லெவ், கஜகஸ்தானின் அலெக்சாண்டர் பப்லிக்குடன் மோதினார்.

    இதில் முதல் செட்டை ரூப்லெவ் 7-6 (7-4) என வென்றார். 2வது செட்டை அலெக்சாண்டர் பப்ளிக் 7-6 (7-5) என போராடி வென்றார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3-வது செட்டில் பப்ளிக் 6-5 என இருந்தபோது வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

    இறுதியில், பப்ளிக் 6-7 (4-7), 7-6 (7-5), 6-5 என வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தினார்.

    நாளை நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் பப்ளிக் மெத்வதேவ் அல்லது யூகோ ஹம்பர்ட்டை சந்திக்க உள்ளார்.

    • துபாய் சாம்பியன்ஷிப் தொடர் துபாயில் நடைபெற்று வருகிறது.
    • இன்று நடந்த அரையிறுதியில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி ஜோடி தோல்வி அடைந்தது.

    துபாய்:

    துபாய் சாம்பியன்ஷிப் தொடர் துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி, நெதர்லாந்து வீரர் ராபின் ஹசே ஜோடி-அமெரிக்காவின் ஆஸ்டின் கிராஜிசெக், குரோசியாவின் இவான் டூடிக் ஜோடியுடன் மோதியது.

    இதில் யூகி பாம்ப்ரி ஜோடி 3-6, 6-7 (2-7) என்ற செட் கணக்கில் தோற்று தொடரில் இருந்து வெளியேறியது.

    • இன்று நடந்த காலிறுதியில் இந்தியாவின் ரோகன் போபண்ணா ஜோடி தோல்வி அடைந்தது.
    • மற்றொரு வீரரான யூகி பாம்ப்ரி ஜோடி அரையிறுதிக்கு முன்னேறியது.

    துபாய்:

    துபாய் சாம்பியன்ஷிப் தொடர் துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் காலிறுதிக்கு முந்திய சுற்றில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, ஆஸ்திரேலியாவின் மேத்யூ ஹெப்டன் ஜோடி-செக் நாட்டின் ஆடம், உருகுவேயின் ஏரியல் பெஹர் ஜோடியுடன் மோதியது.

    இதில் ரோகன் போபண்ணா ஜோடி 6-3, 3-6, 8-10 என்ற செட் கணக்கில் தோற்று தொடரில் இருந்து வெளியேறியது.

    • துபாய் சாம்பியன்ஷிப் தொடர் துபாயில் நடைபெற்று வருகிறது.
    • இன்று நடந்த போட்டியில் ரஷியாவின் ரூப்லெவ் வெற்றி பெற்றார்.

    துபாய்:

    துபாய் சாம்பியன்ஷிப் தொடர் துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் ரஷியாவின் ஆண்ட்ரே ரூப்லெவ், அமெரிக்காவின் செபாஸ்டியன் கோர்டாவுடன் மோதினார்.

    இதில் முதல் செட்டை ரூப்லெவ் 6-4 என வென்றார். 2வது செட்டில் ரூப்லெவ் 4-3 என முன்னிலை பெற்றபோது செபாஸ்டியன் காயத்தால் விலகினார். இதன்மூலம் ரூப்லெவ் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

    • துபாய் சாம்பியன்ஷிப் தொடர் துபாயில் நடைபெற்று வருகிறது.
    • இன்று நடந்த காலிறுதியில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி ஜோடி வெற்றி பெற்றது.

    துபாய்:

    துபாய் சாம்பியன்ஷிப் தொடர் துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி, நெதர்லாந்து வீரர் ராபின் ஹசே ஜோடி-இங்கிலாந்தின் ஜேமி முர்ரே, நியூசிலாந்தின் மைக்கேல் வீனஸ் ஜோடியுடன் மோதியது.

    இதில் யூகி பாம்ப்ரி ஜோடி 6-4, 7-6 (7-1) என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறியது.

    • துபாய் சாம்பியன்ஷிப் தொடர் துபாயில் நடைபெற்று வருகிறது.
    • இதில் நேற்று நடந்த போட்டியில் இங்கிலாந்தின் ஆண்டி முர்ரே தோல்வி அடைந்தார்.

    துபாய்:

    துபாய் சாம்பியன்ஷிப் தொடர் துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இங்கிலாந்தின் ஆண்டி முர்ரே, பிரெஞ்சு வீரர் யூகோ ஹம்பர்ட்டுடன் மோதினார்.

    இதில் ஹம்பர்ட் 6-2, 6-4 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார். இதன்மூலம் ஆண்டி முர்ரே தொடரில் இருந்து வெளியேறினார்.

    • இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
    • இதனால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் 2-வது இடத்தை இந்தியா தக்கவைத்துக் கொண்டது.

    துபாய்:

    இந்தியா, இங்கிலாந்து இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி ராஞ்சியில் நடைபெற்றது. இதில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா 3-1 என தொடரை கைப்பற்றியது.

    இந்நிலையில், ராஞ்சி டெஸ்டில் பெற்ற இந்தியாவின் வெற்றிக்கு பிறகு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டது.

    அதில், 2-வது இடத்தில் இருந்த இந்திய அணி தற்போது 64.58 சதவீதம் பெற்று அதே இடத்தில் நீடித்து வருகிறது. முதல் இடத்தில் நியூசிலாந்து உள்ளது. 3வது இடத்தில் ஆஸ்திரேலியாவும், 4வது இடத்தில் வங்காளதேசமும் உள்ளது.

    5 முதல் 9 இடங்களில் முறையே பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, இலங்கை உள்ளிட்ட அணிகள் உள்ளன.

    • துபாய் சாம்பியன்ஷிப் டென்னிஸ் தொடர் துபாயில் நடந்து வருகிறது.
    • நேற்று நடந்த இறுதிப்போட்டியில் பவுலினி வென்று சாம்பியன் பட்டம் வென்றார்.

    துபாய்:

    துபாய் சாம்பியன்ஷிப் டென்னிஸ் தொடர் துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதி ஆட்டம் நேற்று நடைபெற்றது.

    இதில் ரஷிய வீராங்கனை அன்னா காலின்ஸ்கயாவுடன், இத்தாலி வீராங்கனை ஜாஸ்மின் பவுலினியுடன் மோதினார்.

    இந்தப் போட்டியில் ஜாஸ்மின் பவுலினி 4-6, 7-5, 7-5 என்ற செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டம் பெற்றார்.

    ×