search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    ரஷியாவின் எண்ணெய் கிடங்கை டிரோன் மூலம் தாக்கி அழித்த உக்ரைன்
    X

    ரஷியாவின் எண்ணெய் கிடங்கை டிரோன் மூலம் தாக்கி அழித்த உக்ரைன்

    • உக்ரைனின் இரண்டு டிரோன்களை ரஷியா இடைமறித்து அழித்தது.
    • ரஷியாவின் நான்கு டிரோன்களை உக்ரைன் வான் பாதுகாப்பு சிஸ்டம் இடைமறித்தது.

    உக்ரைன்- ரஷியா இடையிலான போர் இரண்டு ஆண்டுகளை தாண்டி நடைபெற்று வருகிறது. தற்போது டிரோன் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.

    ரஷியா தொடர்ந்து உக்ரைன் எரிசக்தி உள்ளிட்ட கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. அதேபோல் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் உதவியுடன் உக்ரைனும் ரஷியா மீது தாக்குதல் நடத்தி வருகிறது.

    இந்த நிலையில் இன்று அதிகாலை ரஷியாவின் தெற்மேற்கில் உள்ள ரோஸ்டவ் மாகாணத்தில் உள்ள பகுதியில் உக்ரைன் டிரோன் மூலம் தாக்குதல் நடத்தி உள்ளது. இந்த தாக்குதல் காரணமாக எண்ணெய் கிடங்கு தீப்பற்றி எரிந்தது. சுமார் ஐந்து மணி நேர போராட்டத்திற்குப் பின் தீ அணைக்கப்பட்டுள்ளது. சுமார் 2100 சது அடிக்கு அளவிற்கு தீ பரந்து பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இந்த தீ விபத்தால் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை.

    மேலும் இரண்டு டிரோன்கள் பறந்து வந்த நிலையில் ரஷியாவின் வான் பாதுகாப்பு சிஸ்டம் அவற்றை இடைமறித்து அழித்துள்ளது.

    அதேவேளையில் ரஷியாவின் ஐந்து டிரோன்களில் நான்கு டிரோன்களை உக்ரைன் வான் பாதுகாப்பு சிஸ்டம் இடைமறித்து அழித்துள்ளது. ஒரு விமானம் பெலாரஸ் திசையில் உக்ரைன் வான்வெளியை விட்டு வெளியேறியதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×