search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் கட்சியின் தலைவராக நவாஸ் ஷெரீப் ஒருமனதாக தேர்வு
    X

    பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் கட்சியின் தலைவராக நவாஸ் ஷெரீப் ஒருமனதாக தேர்வு

    • பனமா பேப்பர் தொடர்பான ஊழல் குற்றச்சாட்டில் உச்சநீதிமன்றம் உத்தரவுப்படி கட்சி தலைவர் பதவியை இழந்தார்.
    • நான்கு ஆண்டுகள் இங்கிலாந்தில் வசித்து வந்த நிலையில், பொதுத்தேர்தலுக்காக கடந்த ஆண்டு பாகிஸ்தான் திரும்பினார்.

    பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப். இவர் பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் கட்சியின் தலைவராக இருந்தார். பனமா பேப்பர் வழக்கில் உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகினார்.

    பின்னர் இங்கிலாந்து சென்றார். இந்த வருடத்தின் தொடக்கத்தில் பாகிஸ்தானில் பொதுத்தேர்தல் நடைபெற்றதை தொடர்ந்து கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சுமார் நான்கு ஆண்டுகள் கழித்து பாகிஸ்தான் திரும்பினார்.

    பாகிஸ்தான் பொதுத்தேர்தலில் எந்த கட்சிக்கும் தனி மெஜாரிட்டி கிடைக்கவில்லை. இதனால் நவாஸ் ஷெரீப் கட்சி பொனாசீர் பூட்டோவின் மகன் கட்சியின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது. நவாஸ் ஷெரீப் சகோதரர் பிரதமராக பதவி ஏற்றுக் கொண்டார்.

    இந்த நிலையில் பாகிஸ்தான் முஸ்லிம் லீக்- நவாஸ் கட்சி தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. தேர்தலில் நவாஸ் ஷெரீப்பை தவிர்த்து வேறு யாரும் மனுத்தாக்கல் செய்யவில்லை. இதனால் ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் கட்சியின் தலைவராக நவாஸ் ஷெரீப் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    Next Story
    ×